புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜூன் 27, 2014

கேள்விகளும், என்னோட ஆகச்சிறந்த பதில்களும் ....


அலுவலக வேலைப்பளு, இணைய பிரச்சினைகளினால் பதிவை மிக சுருக்கமாக முடித்துக் கொள்கிறேன். (இல்லைன்னா மட்டும் அப்படியே நீட்டிட்டாலும் ....) எப்போதும் வருட இறுதியில் தான் இந்த தொடர்பதிவுகள் சராமாரியாக வந்து கொண்டிருக்கும். இப்போது வருட மத்தியில் வந்திருக்கிறது இருந்தாலும் தொய்வாக இருக்கும் பதிவுலகத்திற்கு இப்படியாவது ஒரு எழுச்சி ? தேவையாயிருக்கிறது. என்னைக்கு உருப்படியாய் எழுதிருக்கேன் இன்னைக்கு எழுத, சோ நோ சீரியஸ் ஒன்லி ஜாலி ... வாத்தியார் அவர்களின் கட்டளைக்கிணங்கி இதோ நானும்.... 


1.உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?

தனித்தீவில் அப்போதைய உலக அழகியோடு தன்னந்தனியாய் கொண்டாட ஆசை,
என்னைக்கு நாம ஆசை பட்டது நடந்திருக்கு, இது நடக்க... 

2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?

கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. இப்பொழுது அவசரமாய் ருமேனிய மொழி, அங்கிருந்து பெண் தோழி நிறைய மெயில் அனுப்புகிறாள். அவள் மொழியில் அவளுடனும் அவளின் தோழிகளுடனும் உரையாடி மகிழ ருமேனிய மொழியை கற்றுக் கொள்ள விருப்பம்.

3.கடைசியாக சிரித்தது எப்போதுஎதற்காக?

வாழ்க்கை என்னை பார்த்து சிரிக்க, நான் அதைப் பார்த்து சிரிக்க .. எப்போதுமே ஒரே சிரிப்பு தான்... இப்போ கூட சிரித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?

இமயமலைக்கு பயணம் மேற்கொள்வேன், மீண்டும் பவர் கட் என்றால் நாட்டை விட்டே போனாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன?

உங்கள் வாழ்க்கை, உங்கள் கைகளில் ...

6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?

விவசாய நிலங்களை அதிகப் படுத்த முயலுவேன். 

7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?

மனைவியிடம், வருகிறவளும் என்னைப் போலிருந்தால் தான் என்னிலை மோசமாக இருக்கும். 


8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்?

சிரித்து ஊக்கப் படுத்துவேன். நமக்கு விளம்பரம் முக்கியம் ..
  
9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?

 அது நண்பரைப் பொருத்து ....

10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?

என்னோட பழைய போட்டோக்களை, நான் கிறுக்கிய கிறுக்கல்களை பார்த்து சிரித்துக் கொண்டிருப்பேன். இதை விட வேறு தண்டனை இருக்க முடியுமா ? 


Post Comment

12 கருத்துரைகள்..:

பால கணேஷ் சொன்னது…

ஒரு நன்றி : என் வேண்டுகோளை ஏற்று அதிவிரைவாய் தொடர்ந்ததற்கு முதலில் நன்றி.
ஒரு கருத்து : ரத்தினச் சுருக்கமாக பதில்கள் சூப்பர்.
ஒரு ச்ந்தேகம் : உள்ளூர்ல ஒரு ஃபிகர் மடிக்கச் சொன்னா ‘ஙே’ன்னு முழிக்கற ஆசாமிக்கெல்லாம் ருமேனிய தேசத்துலருந்து ஃபிகர் மாட்டுதே... எப்பூடி...? ஹி... ஹி... ஹி...

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

5,6 சிறப்பு, 8 வித்தியாசம்
அருமையான பதில்கள் சகோ.

அருணா செல்வம் சொன்னது…

என்னப்பா அரசன்.... இன்னும் உங்களுக்கக் கல்யாணம் ஆகவில்லையா...?

ரூமேனிய பெண்ணெல்லாம் வேண்டாம். உங்களின் கவிதைகளைப் படிக்கத் தெரிந்த தமிழ் பெண்ணாகப் பாருங்கள்.
என்ன... ரூமானிய மொழியில் கவிதை எழுத.....போறீ...ங்களா.....
போச்சிடா...

இருந்தாலும் பதில்கள் அருமை.
சீக்கிரமே திருமணமென்ற பந்தத்தில் மூழ்கி கரை சேர வாழ்த்துகிறேன்.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

கலக்கலான பதில்கள்! வாழ்த்துக்கள்!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

பதில்கள் அனைத்தும் அசத்தல் கணேஷ் சாரை இப்படி பொறாமைப் பட வச்சுட்டீங்களே!

Angel சொன்னது…

தம்பி உங்க பதில் 2மற்றும் 4 இற்கு ஒரு வழி நான் சொல்றேன் :)நீங்க இங்கிலாந்து மைக்ரேட் செய்து வந்துடுங்க :)

இங்கேதான் பாதி ருமேனியா இருக்கு :)

6 வது கேள்விக்கு பதில் ..என்னை யோசிக்க வைக்கிறது ...உண்மைதான் ..

எல்லா பதில்களும் அருமை .

Unknown சொன்னது…

பதில்கள் சுருக்கமாய் இருந்தாலும் அனைத்தும் சுருக் சுருக் !அருமை !
த ம 6

சீனு சொன்னது…

டோலர் உங்க பிறந்தநாள் ஆசை ஹி ஹி ஹி... :-)

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஆஆஆ....ருமேனிய பெண்ணா எங்கே எங்கே ?

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல பதில்கள்....

கணேஷ் உங்க சந்தேகம் - :))))

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

பதில்கள் அனைத்துமே பளிச், சுருக், அருமை! இது டெம்ப்ளட் கமென்ட் அல்ல.....மிகவும் ரசித்தோம் தங்கள் பதில்களை!