தேநீர்க்கடைக்காரன்
வீசிய
இரண்டு ரொட்டித் துண்டுகளை,
பெருத்த வயிறை
அதக்கி அதக்கியபடி வந்து
தின்றுகொண்டிருக்கிறது
கர்ப்பிணி நாயொன்று!
அதுவரை அமைதியாயிருந்தவள்,
அருகில் சென்று
தயங்கி கை நீட்டுகிறாள்,
தனித்தமிழில் வசை பாடி
விரட்டுகிறான்!
சிரித்துக் கொண்டே,
முடியை கோதியபடி
மீண்டும்
அதே இடத்தில் சென்று
அமர்ந்து கொள்கிறாள்
மனம் பிறழ்ந்த
"பிள்ளைத்தாச்சி"!
அரசன், கவிதை, சமூகம், Ariyalur, arasan, raja, Sendurai, U N Kudikkadu,
Tweet |
1 கருத்துரைகள்..:
பிள்ளைத்தாச்சி ஆக்கின நாய் எதுவோ ?
த ம 2
கருத்துரையிடுக