புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஆகஸ்ட் 14, 2014

"செருப்பறுந்த கதையை"


பின் சக்கரத்தின்
காற்றைக் குடித்த
மிதப்பில் மல்லாந்து
கிடந்தது கூர்மையான 
லாடமொன்று.....


இன்னும்
நாலு கிலோ மீட்டர் போங்க
ஊர் வந்துடுமென்றது
மாராப்பை சரி செய்தபடி
கறம்போர குரல்!


வண்டியைத் தள்ளுபவனின்
காலணியைத் தாண்டி
உள்ளேறிக் கொண்டிருக்கிறது
சுடு சாலையின்
மூர்க்கத்  தணல்!


பெயர்ந்து கிடக்கும்
இந்த கப்பிச் சாலையில்
இலாடம் கழன்ற
வெற்றுக் குளம்பில்
பாரம் சுமக்கும்
அந்தக் காளை
யாரிடம் சொல்லியழும்
தன்
"செருப்பறுந்த கதையை"


(நந்தலாலாவின் இந்த மாத இதழில் வெளியானது)

Post Comment

6 கருத்துரைகள்..:

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அசத்தல் கவிதை அரசன்! மனதைத் தொட்டது! அதுவும் கடைசி வரிகள்....

ஒரு சிறிய சந்தேகம்....தனல்? தணல்? நாங்கள் கற்றது தணல் என்று....நாங்கள் தமிழில் புலமை பெற்றவர்கள் அல்லர்....ஒரு வேளை தவறாகவும் இருக்கலாம்.....

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்.... அரசன்...நந்தலாலாவின் இந்த மாத இதழில் வெளியானதற்கு!

arasan சொன்னது…

மன்னிக்கணும் சார் ... நான் தான் தவறுதலாக தனல் என்று எழுதிவிட்டேன், நீங்கள் குறிப்பிட்டது போல் தணல் தான் சரியான வார்த்தை ,.. சுட்டி காட்டியமைக்கு நன்றி சார்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

கவிதையின் கருத்தும் சொல்லிய விதமும் அருமை.
கவிதை வெளியானதற்கு வாழ்த்துக்கள்

”தளிர் சுரேஷ்” சொன்னது…

காட்சியை கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது கவிதை! அருமை! வாழ்த்துக்கள்!

ஆத்மா சொன்னது…

சுதந்திர தின மற்றும் வலைத்தளமாக மாற்றியமைக்கு வாழ்த்துக்கள் தல