புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

அக்டோபர் 04, 2014

ஏமாற்றம் ...


உடலெரியும் 
ஒரு மதிய வேளையில் தான் 
அவளைக் கண்டேன்.

வெயிலின் கோரத்தை 
வியர்வையில் நனைந்து  
வெளித்தெரியும் உள்ளாடை 
சொல்லியது.

நிதானித்து நான் பார்ப்பதை, 
கண்டு 
சீற்றம் கொள்ளாமல் 
சிரம்தாழ்த்தி கொண்டாள்!

எவனையோ நம்பி,
குள்ளம், குதிரைப்பல்லு
இப்படிச் சொல்லி வெளியேற்றினாள் 
ஆறுமாசத்துக்கு முன் 
பெண் கேட்டுப் போன 
என்னை!

மேற்கத்திய குளிர்பானத்தை 
உறிஞ்சிக் கொண்டிருக்கும் 
மனைவியிடம் சொல்ல 
வாயெடுக்கையில், 
மிகச்சரியாக திரும்பி பார்த்தாள் 
அவள்!

கலங்கியது போலிருக்கும் 
அவள் கண்களில் 
ஏமாற்றச் சுவடுகள்!

சைக்கிளை எடுத்துக் கொண்டு 
அவள் கிளம்பி விட்டாள்,
சினிமாவுக்குப் பயணப்பட்ட  நாங்கள் 
கோவிலுக்கு போயிட்டு வந்தோம்! 


Post Comment

4 கருத்துரைகள்..:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

ஆட்டோகிராப்பா..?

நாவலந்தீவு சொன்னது…

எதார்த்தமான சம்பவம்...
எளிமையான வரிகள்...
அழகுக் கவிதை....

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சினிமாவுக்கு புறப்பட்ட நாங்கள் கோயிலுக்கு சென்று வந்தோம்! அருமையான முடிவு வரிகள்! சிறப்பான கவிதை! நன்றி!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ம்ம்ம்ம் யதார்த்தமான உண்மை பேசுகின்றது ஏமாற்றத்தின் வலியை?!!உண்மை வலிக்கத்தானே செய்யும்!