புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

டிசம்பர் 12, 2014

குஷ்பூவும், தமிழக போலீஸும் ...


இன்று காலை அண்ணாசாலையிலிருந்து வடபழனி நோக்கி பேருந்தில் வந்துகொண்டிருக்கும் போது சத்தியமூர்த்தி பவனின் வாசலில் ஏகப்பட்ட கூட்டம், சமீபத்தில் "கை"க்கு தாவிய தங்கத் தலைவி குஷ்பூ வந்திருக்காங்களோன்னு பேரார்வத்தில் எட்டிப்பார்த்தேன், வெறும் கதர் வேட்டிகளா தெரிஞ்சதும் டபுக்குன்னு தலைய திருப்பிக்கிட்டேன். வழக்கம் போல வேட்டி உருவலாகத்தான் இருக்குமென்று நினைக்கிறேன். கூச்சலும் கும்மாளமுமாக இருந்தனர். சுமார் 50 போலீஸ்களும், இரண்டு மூன்று வஜ்ரா வண்டிகளும் பாதுகாப்புக்காக நின்றுகொண்டிருந்தது.  பத்திரிக்கை கூட்டமொன்று அவர்களின் தீனிக்காக அலைமோதிக் கொண்டிருந்தனர். சென்ற தேர்தல்களில்லாம் திமுக வை மாபெரும் வெற்றி பெறச் செய்த குஷ்பூ வரும் தேர்தலில் காங்கிரசை தனிப்பெரும் மெஜாரிட்டியுடன் வெற்றி பெற வைக்கப் போகும் தலைவிக்கு மனதார வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

சத்தியமூர்த்தி பவனிலிருந்து சற்று தூரம் தள்ளி ஒரு லெட்டர் பேடு கட்சியின் சுமார் பத்து பேர் கொண்ட பெருங்கூட்டமொன்று ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தது.. யாரோ, யாரிடமோ மன்னிப்பு கேட்கவேண்டுமாம். கையில் ஒரு பேப்பரை வைத்துக்கொண்டு மூச்சுமுட்ட ஒரு தொண்டர் கத்திக் கொண்டிருக்க ஏனைய தொண்டர்கள் அவர்களுக்கே கேட்காத குரலில் திருப்பி சொல்லிக்கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தையும்? பத்திரிக்கை  தூணொன்று படம்பிடித்துக் கொண்டிருந்தது. ஒன்னும் விளங்கல... அந்த 10 பேர் கொண்ட கட்டுக்கடங்காத கூட்டத்தை கட்டுப்படுத்த 20லிருந்து 30 போலீஸ்களும், ஒரு பாதுகாப்பு வாகனமும் நிறுத்தப் பட்டிருந்தது. இரண்டு இடங்களிலும் சேர்த்து சுமார் 80 போலீஸ்கள் நின்று கொண்டிருந்தனர். 

தினந்தோறும் ஏதாவதொரு போராட்டம், ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கும் வள்ளுவர் கோட்டம் இன்று அமைதியாக இருப்பதைக் கண்டு ஆச்சர்யமாக இருந்தது. இல்லையென்றால் இங்குமொரு 100 போலீஸ்கள் தேமே வென நிற்க வேண்டியிருக்கும். தினந்தோறும் முளைக்கும் கட்சிகளுக்கும், வெறும் விளம்பர பிரியர்களுக்கும் பாதுகாப்பு கொடுத்தே ஓய வேண்டிருக்கிறது. காது கிழிய கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கும் கூட்ட இரைச்சல்களுக்கு மத்தியில் எதுவுமே காதில் விழாத மாதிரி நிற்கும் இந்த காக்கிகளை நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது. எவ்வளவு கோமாளித்தனங்களை நாள்தோறும் அவர்கள் கடந்து போக வேண்டியிருக்கிறது. 

நண்பனொருவன் சென்ற வருடத்தில் போலீஸுக்கு தேர்வாகி ஆர்வமுடன் சென்றவனை சில மாதங்கள் கழித்து சந்தித்து பேசிக்கொண்டிருக்கையில், அவன் வேலைகளைப் பற்றி பேசும்போதெல்லாம் வேறு ஏதாவது சொல்லி திசை திருப்பிக் கொண்டிருந்தான். நேரிடையாகவே கேட்டேன். மிடுக்காக, கர்வமுடன் வேலைக்கு சென்றவன் சற்று சோர்வாக, அவன் வேலை நிலையை கூறியது கொஞ்சம் வருத்தத்திற்குரியது தான். எங்கள் பகுதியில் துணை ஆய்வாளாராக 28 வயதில் ஒரு வாலிபம் வந்திருந்தது, அவர் வந்ததிலிருந்து ஏரியாவில் ஆடிக்கொண்டிருந்த பலர் வாலை சுருட்டிக் கொள்ளும் நிலைக்கு தள்ளப் பட்டிருந்தனர். அனால் துரதிருஷ்டம் என்னவெனில் அவர் கூட பணி செய்யும் சக போலீசுகள் சிலர் தில்லாலங்கடி வேலை செய்து வேறொரு இடத்திற்கு தூக்கியடிக்கப்பட்டார். எல்லாம் ஆற்றாமையின் வெளிப்பாடு தான்.

உடலெரிக்கும் கத்திரி வெயிலிலும், சென்னையின் ஜெமினி மேம்பாலத்திலும், பீச் ரோட்டிலும் ஐந்தடிக்கு ஒரு காவலர் வீதம் நிற்கும் காக்கிகளை நினைத்து பாருங்கள். எந்த ஜென்மத்திலோ அவர்கள் மிகப்பெரிய குற்றம் இழைத்திருப்பார்களோ என்று சில நேரங்களில் வேடிக்கையாக நினைத்துக் கொள்வேன். அதுவும் பெண் போலீசுகள் நிலை பாவம். சரி எதையோ சொல்ல வந்து எங்கோ வந்து நிற்கிறேன் பாருங்கள்.

தேவையற்ற வீண் ஆடம்பரத்திற்காகவும், தன் இருப்பை நிலை நிறுத்தி, மீடியாவின் பார்வையிலே இருப்பதற்காகவும் தான் பல கட்சித் தலைமைகள், எதற்கு எடுத்தாலும் போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று அலப்பரையை கூட்டுகின்றனர். எந்த வொரு விசயத்தையும் தீர்ப்பதற்காக இவர்கள் போராடுவதில்லை, முடிந்தவரை பிரச்சினையை தீர்க்க விடாமல் சொரிந்து சுகம் காணவே அலைந்து கொண்டிருக்கும் கட்சிகள் பல இங்குள்ளன. தேவையற்ற விளம்பரத்திற்காக போராட்டம் நடத்தும் சில்வண்டுகளுக்கும் பத்திரிக்கையில் இடம் தந்து பணம் பார்க்கும் பத்திரிக்கை தர்மத்தை எப்படி மெச்சுவது என்று தெரியவில்லை.

நேற்று முளைத்த காளான்கள் போலிருக்கும் சின்ன சின்ன கட்சிகளுக்கும், காவல் துறை கைகட்டி வேடிக்கை பார்க்கையில் மனம் சற்று கோபமடைகிறது, இவர்களை கோபம் சொல்லி என்ன பயன், அதிகாரத்திலிருக்கும் அரசு ஆணையிட்டால் தானே இவர்கள் சுழல்வார்கள். அரசோ தனக்கு இலாபமில்லாத எந்தவொரு விசயத்திலையும் மூக்கை நுழைப்பதில்லை. நேற்று முளைத்த காளான்கள் என்று வேறு சொல்லிவிட்டேன், இப்படித்தான் 65 வருடத்திற்கு முன் திமுகவையும், 42 வருடத்திற்கு முன் அ திமுகவையும் அப்போதைய பலம் வாய்ந்த கட்சிகள் நினைத்திருக்கும். இப்போது இந்த இரு கட்சிகளின் வேர் மிக ஆழமாக இருக்கிறது. எதையும் நாம் சுலபமாக சொல்லிவிடக்கூடாது. தமிழக மக்களை அவ்வளவு எளிதில் கணித்து விட முடியாது.

நமது பணத்தை விரயமாக செலவு செய்வதை தட்டி கேட்க மனமில்லாத சமூகத்தில் இருந்து கொண்டு எப்படி எதிர்காலம் நன்றாக இருக்குமென்று ஆருடம் சொல்ல முடியும்? வாழ்க நானும், எனது குடும்பமும்.... 


     

Post Comment

12 கருத்துரைகள்..:

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அரசன்! மாறுதலாக இருக்கின்றதே! ஒயிலாய் நடை போட்டு வந்த எழுத்து இன்று நிமிர்ந்து வேடிக்கைப் பார்த்தது போல....நல்லாருக்குங்க...போலீஸ்காரர்கள் பல சமயங்களில் கோமாளிகளோ என்று எண்ணியதுண்டு. வேலை வெட்டி இல்லாத அரசியல்வாதிகளுக்கு வேண்டி, எங்கேயோ பார்த்தபடி, தாடியை வருடியபடி, தொப்பையையும் தடவியபடி...கடும் வெயிலில் .பொழுது போக்கிக் கொண்டிருப்பதாகத்தான் தெரிகின்றது...ஒருவேளை இங்கு காட்ட முடியாத தார்மீகக் கோபம்தான் பல சம்யங்களில் பொதுமக்களிடம் திரும்புகின்றதோ?!!

மெக்னேஷ் திருமுருகன் சொன்னது…

வாஸ்தவம் தாண்ணா ! நானும் பல இடங்கள்ல பாத்துருக்கேன் . 10 பேர் பன்ற ஆர்ப்பாட்டத்துக்கு பாதுகாப்புக்கு 100 போலிஸ் !!!

KILLERGEE Devakottai சொன்னது…


மானங்கெட்ட செயல், வெட்கக்கேடானது... நண்பர் துளசிதரன் அவர்களின் கருத்தை முழுமையாக ஆமோதிக்கிறேன்.

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

யதார்த்தம் சொல்லும் பதிவு, நம் வரிப்பணம் என்று மக்கள் உணர்ந்து கேள்வி கேட்க வேண்டும் ...அது மதிக்கப்படவும் வேண்டும்..
வாழ்த்துகள் சகோ

தினேஷ்குமார் சொன்னது…

அரசே...!
காவலர்கள் படும்பாடு பெரும்பாடு தான் நேர்மைக்கும் போட்டியென்பதே கிடையாது அங்கு நேர்மையை கண்டாலே தோண்டிவிடுவார்கள் குழி , ஆனாலும் பாருங்க கட்சி கொடி பிடித்தவனுக்கு மட்டும் தான் காவல் அவங்க மக்களுக்கு அல்ல, மக்கள் கட்சி காரர்களை தீண்டினால் துவம்சம் செய்துவிடுவார்கள் மக்களை காவலர்கள் சேர்ந்து ...

இப்படி வரிசையா படிச்சுட்டு மனசுக்குள்ள கருத்து சொல்லிட்டு வந்த என்னை ”தன் இரு(டு)ப்பை” இங்க தானுங்க மாற்றி படிச்சு தடுமாறிட்டேன் எல்லாம் குஷ்பூவும் , தமிழக போலீஸீசும் என்ற தலைப்பில் குஷ்புவால் வந்த வினைவு....

”தளிர் சுரேஷ்” சொன்னது…

நமது சமூகமே காவலர்களை கெடுத்து வைக்கிறது! என்னத்தை செய்வது?

KILLERGEE Devakottai சொன்னது…


நண்பா, வலைச்சரத்தில் நான்...
http://blogintamil.blogspot.ae/2014/12/blog-post_12.html?showComment=1418474635473#c4989795754924664076

Unknown சொன்னது…

காவல் துறையே அரசின் ஏவல் துறைப் போலத்தானே செயல்படுகிறது !
த ம +1

Unknown சொன்னது…

/***தமிழக மக்களை அவ்வளவு எளிதில் கணித்து விட முடியாது.
***/
மிக சரியான உண்மை.

Kasthuri Rengan சொன்னது…

ஆகா இப்படி ஒரு சமூகப் பார்வை ...
அருமை அரசரே..

Kasthuri Rengan சொன்னது…

I am taking legal action on this blogger for his delayed post...
he had failed my hope to read his new post..
who seconds this motion?

Kasthuri Rengan சொன்னது…

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்