புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

பிப்ரவரி 06, 2015

கள்ள உறவு...







திரும்பும் திசையெங்கும்
நீர்த் தொட்டி புழுவாய்
நெளிந்து கொண்டிருக்கிறது
மீட்சியற்ற 
உன் நினைவுகள்!

இருள் கவிழ்ந்த மரத்தடியில்
உதடு சுழித்து
நீ உளறிய 
சொற்களனைத்தும்
புழுதிப் படிந்து கிடக்கிறது.

கொதித்துக் கொண்டிருக்கும்
மணல் பெருவெளியில்
நம் 
முயங்கல் தடத்தினை
தேடித்தேடி 
அழித்துக் கொண்டிருக்கிறேன்!

பிணைச்சல் முடிந்து
வீடு திரும்புகையில்
பாம்புத் தீண்டி இறந்த
உன்னின்,  
"கொட்டுச்சத்தம்"
எனக்கும் சேர்த்துதான்
இரைந்து கொண்டிருக்கிறது!
  
நாளை, 
எப்படி இறந்தான் 
உன் அப்பனென்று 
யாராவது கேட்டால், 

என் பிள்ளை 
என்ன, சொல்லி சமாளிப்பானோ?

Post Comment

4 கருத்துரைகள்..:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அளித்ததை அழிக்க முடியாதே...!

வெற்றிவேல் சொன்னது…

அண்ணா... நீங்க கமென்ட் பொட்டிய குளோஸ் பண்ணிடலாம்!

மெக்னேஷ் திருமுருகன் சொன்னது…

எப்படிங்ணே இப்படியெல்லாம் கவிதை எழுத முடியுது ? நானும் எவ்வளோ முயற்சித்துப்பார்த்தும் காற்றுதான் வருகிறது . கவிதை வரமாட்டேன் என்று அடம்பிடிக்கிறது . இந்த கமெண்ட் வெரிபிகேசன முதல்ல தூக்குங்ணே . நா ரோபட் இல்லைனு சொன்னாலும் ப்ளாக்கர் நம்ப மாட்டேங்குது .

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல கவிதை அரசன்...