புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

மார்ச் 11, 2015

இன்றைய திருமணங்களும் அதன் வடிவங்களும்...


மற்ற நிகழ்வுகளைப் போல திருமணத்தை அவ்வளவு எளிதில் கடந்து வர இயலவில்லை, மனமும் அதற்கு ஒப்பவில்லை. ஏகப்பட்ட சங்கடங்கலிருந்தாலும் திருமணம் என்ற சொல் தரும் அலாதியே தனி தான். பாரம்பரியத்தின் துவக்கப்புள்ளியாக பார்க்கப் பட்டதை, அதன் வடிவத்தை மாற்றி பல்வேறு முகமூடிகளை வலுக்கட்டாயமாக அணிவித்து அழகு பார்த்துக் கொண்டு வரும் பெருமை நம்மவர்களை மட்டுமே சாரும். இந்த "நம்மவர்களில்" நானும் முதல் வரிசையில் வருகிறேன் என்பதை அடக்கத்துடன் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.  

ஒரு திருமணத்தை வைத்து அவர்களின் வழக்கத்திலிருந்து, பழக்கங்கள் வரை விலாவாரியாக சொல்லிவிடலாம், ஆனால் தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் திருமணங்களை வைத்து எதையும் சொல்ல முடியாது. பல சுக்கல்களாக உடைந்து/உடைத்துக் கொண்டு வரும் கட்டமைப்புகளில் இதுவும் ஒன்றாக கடந்து விடுவதை தவிற வேறுவழியில்லை. அதுதான் புத்திசாலித்தனம் என்று இன்றைய மொழியில் பதிந்திருக்கிறார்கள். 

மூட நம்பிக்கைகளை களைகிறோம் என்கிற பேர்வழியில் பல கோமாளித்தனங்களை செய்வதற்கு பெயர் தான் பகுத்தறிவா? சென்னையின் மிகப்பெரிய சொகுசு திருமண மண்டபம் என்றழைக்கப்படும் ஒன்றின் அருகில் அமைந்திருக்கிறது எனது அலுவலகம். மாதம் குறைந்தது 20 நிகழ்வுகள் நடைபெறும். திருமண வரவேற்புக்கு வைக்கப்படும் விளம்பர பேனர்களுக்கும், ஆடம்பர விளம்பரங்களுக்கும் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நீண்டு வெடிக்கும் வண்ண வெடிகளுக்கும் செய்யும் செலவில் ஊர்ப்புறங்களில் நான்கைந்து திருமணங்களை நடத்திவிடலாம். அவரவர் பணம், அவரவர் செலவு செய்கிறார்கள். அளவிற்கதிகமான பணமிருப்பவர்களின் பிரச்சினை என்பதினால் தவிர்த்து விடுகிறேன்.

என்னோட ஆதங்கம் என்னவெனில் இந்த நடுத்தரங்கள் பண்ற சேட்டைகள் தான் தாங்க முடியவில்லை.  நிச்சயம் பண்ணி, தாலி செய்ய சொல்கிறார்களோ இல்லையோ, பிளக்ஸ் பேனருக்கு போட்டோ புடிக்க கிளம்பி விடுகிறார்கள். பத்திரிக்கை வைக்குமுன்னே பகட்டான கேக்கிற்கு ஆர்டர் கொடுத்துவிடுகிறார்கள். இதையெல்லாம் ஒரு சடங்காகவே இணைத்துவிட்ட பெருமை இளைய தலைமுறையினரையேச்  சாரும். திருமணங்களின் அதி முக்கியமான செலவுகளில் இந்த வகையறா செலவீனங்களைத் தான் முதல் வரிசையில் எழுதுவார்களோ என்னவோ?

தேவையற்ற சம்பிரதாய சடங்குகளை களைந்தால் கை தட்டி வரவேற்கலாம், அதை விட்டுவிட்டு இன்னொருத்தவனின் சடங்குகளை மாய்ந்து மாய்ந்து உங்கள் இல்லத் திருமண நிகழ்வுகளில் செய்து கொண்டிருப்பதை பார்த்து சிரிப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை எனக்கு. மேலும், ஏதும் கேட்க முற்பட்டால், வந்தமா, தொந்திய நிரப்பிட்டு போனமான்னு இருக்கணும் என்கிற தோரணையில் இருக்கிறது அவர்களின் பேச்சுக்கள்.

உங்களது ஒவ்வொரு செய்கைகளையும் பின்வரும் வாரிசுகள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள், இன்று மாற்றம் என்கிற பெயரில்  நீங்கள் செய்யும் புரட்சியை? அவர்கள் அதை நாளை, சடங்காக கொண்டாடக் கூடிய அபாயம் இருக்கிறது என்பதை புரிந்து செயல்படுங்கள். நம்முடைய பாரம்பரியத்தை அழித்து அதன் தடயங்களை கூட இல்லாமல் செய்யுங்கள், ஆனால் ஒருபோதும் மேற்கத்திய கலாச்சாரத்தை கொண்டு நம்முடைய தொடர் "சம்பிரதாயங்களை" நிரப்பாதீர்கள்.

      
     

Post Comment

7 கருத்துரைகள்..:

KILLERGEE Devakottai சொன்னது…


அருமை நண்பரே தங்களின் ஆதங்கம் நியாயமானதே சுயநலமின்றி பொதுநலமான ஆதங்கமே,,, தங்களின் தங்கமான மனசு புரிகின்றது இந்த பதிவின் வழியே....
வாழ்க வளமுடன்
தமிழ் மணம் 1

கார்த்திக் சரவணன் சொன்னது…

சொல்ல வந்ததை ஆணித்தரமாக சொன்ன விதம் நன்று.... பதிவு பல இடங்களில் உரைநடையாகவும் சில இடங்களில் பேச்சு வழக்காகவும் இருக்கிறது...

தனிமரம் சொன்னது…

அருமையான கருத்து இப்போதெல்லாம் வீனான செலவுகள் கூடிவிட்டது ஆடம்பரம் ஆசை என்ற போர்வையில்.சிந்திக்கும் பகிர்வு.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வீண் தான் என்பதில் சந்தேகமில்லை... வாரிசுகளுக்கு தவறான வழிகாட்டியும் கூட...

”தளிர் சுரேஷ்” சொன்னது…

மிகவும் சிறப்பான பதிவு! ஆடம்பரத் திருமணங்கள் இன்று அதிகரித்து விட்டதுடன் மேற்கத்திய சடங்குகள் புகுந்து விட்டதும் நிஜம்தான்! சிறப்பான கருத்துக்கள்! நன்றி!

”தளிர் சுரேஷ்” சொன்னது…

மிகவும் சிறப்பான பதிவு! ஆடம்பரத் திருமணங்கள் இன்று அதிகரித்து விட்டதுடன் மேற்கத்திய சடங்குகள் புகுந்து விட்டதும் நிஜம்தான்! சிறப்பான கருத்துக்கள்! நன்றி!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அரசே மிக மிக அருமையான பதிவு! இனி ஒரு பதிவு இது போன்று அடுத்து எழுதினால் இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள். தமிழ் நாட்டில் ஒரு குறிப்பிட்டச் சமூகத்தில், வட இந்தியத் திருமணங்களில் நிகழும் மெஹந்தி, நடனம் என்று பல நிகழ்வுகள் கலக்கத் தொடங்கிவிட்டன. மட்டுமல்ல செலவு எவ்வலவு தெரியுமா? வரவேற்பதற்கு மாற்வேடம் அணிந்த மனிதர்கள்...இந்த கிஷ்கிந்தா போன்ற இடங்களில் இருக்குமே அது போன்று...பின்னர் ஸ்டால் போடுவது போன்று பல உணவு வகைகள்...இப்படி 20 லட்சம் செலவழிக்கின்றார்கள்! இது எப்படி?

அரசன் நீங்கள்! ஆட்சியைப் பிடித்து ஏதாவது செய்ய முடியுமா என்று பாருங்களேன் ப்ளீஸ்....நாங்கள் எல்லோரும் ஓட்டு போடுகின்றோம்....இங்கு தமிழ்மணத்தில் மட்டுமல்ல....அங்கும்....ஏனென்றால் இளைஞர்கள்தானே இந்தத் திருமண நிகழ்வுகளுக்குக் காரணம்...இளைஞர்கள் நீங்கள் அதை மாற்றி அமைக்கத்தான்...குருவி தலைல பனங்காயோ?!!!!