இந்த சினிமா உலகம் மிகவும் வேடிக்கையானது என்பதை அடிக்கடி ஏதாவது ஒரு நிகழ்வு உணர்த்திக் கொண்டே இருக்கிறது. வலிமையான, திறமையான படைப்பாளிகளுக்கு மத்தியில் சில அரைகுறை ஆர்வக் கோளாறுகளும் அவ்வப்போது வந்து நம்மை கிச்சு கிச்சு மூட்டிகொண்டிருக்கிறார்கள். குறிப்பிட்ட சிலரால் மட்டும் தொடமுடிந்த சினிமாக் கனவை, அதீத ஆசையும், திறமையான சினிமா அறிவும் கொண்ட இன்றைய கிராமத்து இளைஞனால் தொடக் கூடிய அளவிற்கு தொழில் நுட்ப வளர்ச்சி இருக்கும் இன்றைய காலகட்டத்தில் சிலர் அரைத்த மாவையே மீண்டும் அரைக்க வந்திருப்பது தான் கொடுமை.
கடந்த சில மாதங்களாக நதிகள் நனைவதில்லை என்ற படத்தின் விளம்பரங்கள் கண்ணில் பட்டாலும் பெரிதாய் கண்டுகொள்ளாமல் தான் இருந்தேன். நானும் நண்பர் ஆவியும் ஒரு குறிப்பிட்ட இடத்தை கடக்கையில் இப்படத்தை பற்றி தொடர்ந்து மூன்று நாட்களாக பேசிய சுகானுபவமும் நடந்திருக்கிறது. நதிகள் நனைவதில்லை என்ற தலைப்பும், அவர்கள் கொடுத்த விளம்பரங்களும் செம அட்ராசிட்டி.
காதலிக்காதவர்களிடம் மட்டும் காதல் பாதுகாப்பாக இருக்கிறது என்று சலம்பல் வேறு அந்தப் படத்தின் போஸ்டர்களில் கண்ணை களவாடியது. பென்சில் fit காலத்தில், பெல்பாட்டம் பற்றி பாடம் எடுக்க வந்திருக்கிறார் என்று சாதரணமாக கடந்து போனாலும் நாஞ்சில் பி. சி. அன்பழகனின் கவித்துவ இயக்கத்தில் என்று வம்படியாய் கழுத்தை நீட்டுபவர்களை என்ன சொல்வது.
பொங்குவது மட்டுமே உங்க வேலை மிஸ்டர் அன்பு பெயரை நாங்க வைச்சிக்குறோம், நீங்களே கவித்துவ பொங்கல் என்று பொங்கவேண்டாம் ப்ளீச். உங்க படத்தின் போஸ்டர் வடிவமைப்பே சொல்கிறது உங்களின் கவித்துவ லட்சணத்தை சாரி லட்சியத்தை. இன்று காலை உங்களின் கவித்துவத்தின் விளம்பர பதாகையை பார்த்ததின் விளைவு தான் இந்த பதிவு.
தமிழ் சினிமாவில் படமெடுப்பது
தற்கொலைக்கு சமமென்றும்,
கதையை,
கதா நாயகனாக்கியவனை
ஊசலாட்டாமல்
ஊஞ்சலாட்டுமாறு கேட்டுக் கொண்ட உங்களின் தைரியத்தை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்.
ஆமாம் மிஸ்டர் அன்பு உங்களை யாரு தற்கொலைக்கு முயற்சிக்க தூண்டியது? பிரியாணி கிண்டும் அடுப்பு தகதகவென்று எரிந்து கொண்டிருக்கிறது என்று தெரிந்தும் அடுப்பின் மேல் அமர்ந்து கொண்டு குத்துதே குடையுதே என்றால் நாங்க என்ன ஸார் பண்ண முடியும்?
நல்லக் கதைகளை படமாய் எடுத்துக் கொண்டு திரையிட முடியாமல் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில், மொக்கை கதையொன்றை படமெடுத்துவிட்டு இம்புட்டு பேச்சு உங்களுக்கு ஆகாது பாஸ்.
வலுவான கதையாகவும், உண்மையில் கவித்துவ இயக்கமாக இருந்தால் இன்றைய இரசிகன் நிச்சயம் கொண்டாடுவான், சோ கவித்துவ பொங்கலை ஓரங்கட்டிவிட்டு நல்ல சினிமா எடுங்க அன்பு, நிச்சயம் பேசப்படும். இல்லையெனில் உங்களின் நதி எப்போதும் நனையவே நனையாது...
Tweet |
5 கருத்துரைகள்..:
தினமும் கொஞ்சமாக பொங்கியதை இன்று பொங்கலாகவே போட்டுட்டீங்களா.. பலே
பிரியாணி கிண்டுற அடுப்புல உட்கார்ந்து கொண்டு குத்துதே, குடையுதேனு சொன்னவருக்கு சுடுமே அப்படினு யோசனை வரலையே நண்பரே....
தமிழ் மணம் 1
இந்தப் பெயரிலெல்லாம் படம் வந்ததா?
போட்டு தாக்கிட்டீங்க
இப்படி ஒரு படம் வந்திருக்கா...? வரப் போகுதா...?
கருத்துரையிடுக