புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜூன் 24, 2015

சண்டி வீரன் ...


நையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இனி,  இவரின் படங்களை முதல் நாளில் பார்க்கவே கூடாது என்று முடிவெடுத்த என்னை மறுபரிசீலனை செய்ய வைத்திருக்கிறது சண்டி வீரன் முன்னோட்டம். தஞ்சை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பாய்ச்சலால் பாய்ந்திருப்பார் என்று தெரிகிறது. ஆடியோ வெளிவந்து சில நாட்கள் ஆகியும் பெரிதாய் கண்டு கொள்ளாமல் தான் இருந்தேன், பின்பொரு பொழுது போகாத சாயந்திர வேளையில் இணையத்தில் மேய்ந்து கொண்டிருக்கையில் தான் சண்டிவீரன் பற்றிய நினைப்பு வர பாடல்களை தரவிறக்கினேன். 



எடுத்த எடுப்பிலையே அல்டாப்பு மாப்பு என்னும் பாடலை கிளிக்க ஒருவித  கிலியை ஏற்படுத்த, ஒருவித தயக்கத்துடன் தான் "கொத்தாணி கண்ணால என்னை கொத்தோடு கொன்னானே, உச்சாணி கொம்பெத்தி என்னை உக்கார வைச்சானே" வரிகள் மனதை என்னமோ பண்ணியது. அன்றிரவு மட்டும் சுமார் நாற்பது தடவைக்குள் மேல் கேட்டிருப்பேன். என்னவென்று தெளிவாக சொல்ல தெரியவில்லை அப்படியொரு ஈர்ப்பிருக்கிறது இந்த பாடல் வரிகளில்! பாரதிராஜா அவர்களின் அன்னக்கொடி படத்தில் வரும் "பொத்தி வைச்ச ஆசை தான்", ரம்மி யில் வரும் "கூட மேல கூட வைச்சி" இப்படியான பாடல்களுக்குப் பின், என் மனதை பிசையும் பாடலாக இதுதான் இருக்கிறது. எத்தனையோ பாடல்கள் வந்தாலும் ஒரு சில பாடல்கள் மட்டுமே நம்முடைய பால்யத்தையோ, அதனுள் ஒளித்து வைத்திருக்கும் நினைவுகளையோ கிளறிவிட்டுச் செல்லும், அந்த ரகமென்று இந்த பாடலை உறுதியாகச்  சொல்வேன். 

இந்தப் பாடலை யார் எழுதியது என்று தெரியவில்லை, பாடியது கூட அனிதா மற்றும் MLR கார்த்திகேயன் என்று இருக்கிறது, இரண்டு பேரின் குரலும் இந்த வரிகளுக்கு உயிரூட்டி இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். ரொம்ப எளிமையான வரிகள், இந்த பாடல் முடிகையில் 

"ஒரு கடுகும் எண்ணெயும் போல காதல் சோடியில்லையடி, 
ரெண்டும் ஒண்ணா சேரும் நேரம் வந்தா, 
ஒன்னு கொதிக்கும், 
ஒன்னு வெடிக்கும் 
காதல் இதுதாண்டி"! இது போதும் நின்னு பேசுமென்று நம்புகிறேன்! இந்தப் பாடலை கேட்கும்போதே இதன் காட்சிவடிவம் எப்படி இருக்குமென்ற ஆவல் மேலோங்குகிறது. 

 வழமையான காதல் பாடல்களைப் போல தான் இருக்கிறது இன்னொரு பாடலான "அலுங்குறேன், குலுங்கிறேன்" என்கிற பாடல்! 

இயக்குனர் பாலா தயாரிப்பில், அதர்வா மற்றும் ஆனந்தி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் சண்டிவீரனை காண ஆவல் அதிகமாகிறது. 

SN அருணகிரி என்பவர் இசையமைத்திருக்கும், இப்படத்தின் பாடல்  நகரத்தில் எப்படியோ, ஊர்ப்புறங்களில் ஒரு ரவுண்டு வருமென்று நம்பலாம் அதுவும், இந்த "கொத்தாணி" பாடல் பட்டையை கிளப்புமென்று நம்புகிறேன், பொறுத்திருந்து பார்ப்போம்!     
       

Post Comment

5 கருத்துரைகள்..:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தரமிறக்கி ரசிக்க வேண்டும்...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அறிமுகத்திற்கு நன்றி. தரவிறக்கம் செய்து கேட்டுப் பார்க்கிறேன்.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சிறப்பான விமர்சனம்! நன்றி!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ரம்மியில் அந்தப் பாடல் சூப்பரா இருக்கும்....

சண்டிவீரன் புதுசா இருக்கு....பாலா தயாரிப்பா!!? பாடல்கள் கேட்டுப் பார்க்கணும்....

சத்ரியன் சொன்னது…

அப்படியே பாடல் பதிவிறக்கச் சுட்டியையும் இணைத்திருக்கலாமே தம்பி.