புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

செப்டம்பர் 24, 2015

49 - ஓ & மாயா ....


சில வருட இடைவெளிகளுக்குப் பிறகு கவுண்டரை திரையில் காணும் ஆவலில் முதல் நாள் இரவுக் காட்சிக்கு சென்றிருந்தேன். படம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை, நமக்கு கவுண்டர் தான் முக்கியம் என்பதினால் படம் மொக்கையாகவே இருந்தாலும் அதை அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம் என்ற மன நிலையில் தான் சென்றேன்! கவுண்டருக்கான ரசிகப் பட்டாளம் குறைவதற்கு வாய்ப்பே இல்லை என்று நிறைந்திருந்த அரங்கம் உணர்த்தியது.



இப்போதையே தமிழ் ரசிகர்களை கணிப்பது அவ்வளவு எளிதல்ல போலும், எதற்கு சிரிக்கிறார்கள் எதற்கு வெறுக்கிறார்கள் என்று தெரியாமலையே படத்தை காண வேண்டியதாய் இருக்கிறது. படு மொக்கையான நகைச்சுவைகளுக்கு விழுந்து விழுந்து சிரிப்பவர்களைப் பார்த்து ஒருவேளை நம்மளோட ரசனை மழுங்கி விட்டதோ என்ற பயம் உள்ளூர ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. 

49 ஓ வின் முதல் பாதி சுமாருக்கும் படு கீழ், இரண்டாம் பாதி சுமார் ரகம். தலைவரின் தலையில் மொத்த சுமையை வலிந்து திணித்திருக்கிறார்கள். படத்தின் மைய பிரச்சினையான விவசாயத்தை விட்டு நழுவாமல் அதைப் பற்றி பேசி இருப்பதற்காகவே  இயக்குனருக்கு பெரிய கை குலுக்கல். 

குடி, கொலை, கொள்ளை, ஆபாசம், கேவலமான வசனத் தொகுப்புகள் என்று வந்து கொண்டிருக்கும் சினிமாக்களுக்கு மத்தியில், நலிந்து கிடக்கும் விவசாயியைப் பற்றி, விளை நிலங்கள் எப்படி அபகரிக்கப் படுகிறது பற்றி, எதைப் பற்றியும் கவலைப் படமால் எனக்கென்ன என்று ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கும் கேடு கெட்ட அரசியல் வாதிகளைப் பற்றியும், நமக்கு சோறு தான் முக்கியம் எவன் எக்கேடு கெட்டாலும் எனக்கென்ன என்று செல்லும் இன்றைய சராசரி மனிதர்களைப் பற்றியும் துணிந்து பேச முனைந்திருக்கும் இயக்குனர் ஆரோக்கிய தாஸ் அவர்களுக்கும் அதற்கு துணையாய் ஆதரவு தந்து தயாரித்த திரு. சிவபாலன் அவர்களுக்கும், மேலும் மக்களின் தலையாய பிரச்சினைகளின் மூலமாக மீண்டும் திரை பிரவேசம் செய்திருக்கும் கவுண்டருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!  என்ன இப்படியான பிரச்சினைகளை பேசும் படங்களுக்கு நாம் எப்போதும் ஆதரவு தருவதில்லை அதுதான் இங்கு பிரச்சினையே, அந்த வகையில் இது மக்களிடம் எந்த வகையில் சேர்ந்திருக்கிறது என்பது பெரிய வினாக்குறி தான்?

சீரியல்களே விறு விறுவென நகரும் காலத்தில் போய், சவ சவ என்று காட்சியை வைத்து பொறுமையை மிகவும் சோதிக்கிறார் இயக்குனர். அரசியல் நையாண்டி பேசும் காட்சிகளில் எல்லாம் இயக்குனர் அமரர் மணி வண்ணனை நினைவில் நிறுத்தினார். அரசியல் நையாண்டியை மணி வண்ணனைத் தவிர்த்து வேறு எவராலும் அவ்வளவு நாசூக்காக, நறுக்கென்றும் சொல்ல முடியாது என்பதை உறுதி படுத்திக் கொள்ள முடிந்தது. 

இந்த வயதில் போயி கவுண்டரை ஆட வைத்து இம்சை செய்தது, பல சவ சவ காட்சிகள் தவிர்த்துவிட்டு சொன்னால் பார்க்க கூடிய படம் தான் இந்த 49 ஓ!

-----------------------------------------------------------------------------------------------------------

மாயா 

கருப்பு வெள்ளை காட்சியமைப்பு, கண்ணை மட்டும் அல்ல நெஞ்சையும் கொள்ளை கொள்ளும் ஒளி அமைப்பு இவற்றிற்காகவே இந்த மாயாவை பலமுறை பார்க்கலாம்! 



வயசு கூட கூட அழகு குறையும் என்பார்கள் ஆனால் நயன்தாராவின் அகராதியில் தலைகீழாக எழுதி இருக்கும் போல! பார்த்து பார்த்து செதுக்கி இருப்பார்கள் போலும் ஒவ்வொரு காட்சியையும் அவ்வளவு நேர்த்தியாய் வந்திருக்கிறது காட்சிகள் அனைத்தும்! 

பேய் படம் எடுக்கிறேன் என்று குப்பைகளை எடுத்து இம்சிக்கும் இயக்குனர்கள் இந்தப் படத்தை சுமார் முன்னூறு தடவை பார்த்துவிட்டு படமெடுக்க வரட்டும் என்று மாயாவை வேண்டிக் கொள்கிறேன்!

பீசா விற்கு பிறகு நான் பார்த்து வியந்த படம் மாயா தான், நேர்த்தியான சினிமாவை தந்த குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் !   

Post Comment

2 கருத்துரைகள்..:

அம்பாளடியாள் சொன்னது…

சிறப்பான விளம்பரம் கண்டு மகிழ்ந்தேன்! படத்தைப் பார்க்கத் தூண்டும் ஆவலை விளைத்த அன்புச் சகோதரனுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தொடரட்டும் பணி .

”தளிர் சுரேஷ்” சொன்னது…

இரண்டும் பார்க்க நினைக்கும் படங்கள்! பார்ப்போம்! விமரிசனத்திற்கு நன்றி!