புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

செப்டம்பர் 08, 2015

பாயும் புலி - ரொம்ப பாய்ந்து விட்டது...




புலியின் பாய்ச்சல்? கொஞ்சம் அடங்கட்டும் மெல்லமா பார்த்துக் கொள்ளலாம் என்று தான் காத்திருந்தேன், அதன்படியே தான் நேற்று இரவு காட்சிக்கு ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கை ஆக்கிரமித்தோம். வழக்கமாய் என்ன எதிர் பார்த்து சென்றேனோ அதே டெம்ப்ளேட் கதை தான். படத்தின் டைட்டில் கார்டில் துவங்கிய ஒரு தீம் இசை படம் முடிந்து வீட்டிற்கு வந்து உறங்கி, காலையில் எழுந்து அலுவலகம் வந்து இதோ சாயந்திரம் ஆகிவிட்டது இன்னும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது அந்த கருமாந்திர தீம் இசை. மூணே மூணு பிண்ணனி இசையை வைத்து முழுப் படத்தையும் ஒப்பேற்றி விட்ட இமானின் சாதூர்யத்தை கண்டு வியக்கிறேன். 

படத்திற்கு சம்பந்தம் சம்பந்தமில்லாத காட்சியை போன்று இருக்கிறது சூரியின் காமெடி??? காட்சிகள். எப்பவோ பரணில் ஏற்றி வைத்துவிட்ட காமெடி வசனங்களை தூசி தட்டி கொண்டு வந்து நிற்கும் இடங்களில் எல்லாம் சிரிப்புக்கு பதில் எரிச்சல் தான் வருகிறது. போதா குறைக்கு காஜல் அகர்வாலின் அறிமுகம் காட்சி மண்டையின் அனைத்துப் பக்கங்களிலும் அமிலத்தை தடவிய சுகத்தை தந்தது. காதல் காட்சிகள் அனைத்தும் ஆசம் என்று சொல்வதை தவிர வேறெந்த வார்த்தைகளும் இல்லை. 

கொலையும், கொலை சார்ந்த மனிதர்கள் வாழும் பூமியில் தர்மத்தை நிலைநாட்ட ஒரு நியாயமான போலீஸ் வந்தால் என்ன அதகளம் பண்ண முடியுமோ அவ்வளவும் யாரும் கேள்வி கேட்க இடம் வைக்காமல் மசாலா இம்மி அளவும் குறையாமல் பார்த்து கொண்டிருக்கிறார் திரு. சுசீந்திரன். யாரோ கொடுத்த அழுத்தத்திற்கு படம் எடுத்தால் உங்களை நம்பி வரும் என் போன்ற ரசிகன் மீண்டும் எப்படி ஜி அடுத்த படத்துக்கு வருவான்? ஒரு சுமார், படம் கொடுத்தால் அஞ்சி மொக்கை படங்கள் கொடுத்தே தீருவது என்று விஷால் கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறார் போலும். சின்ன சின்ன சுவாரசியங்கள் தவிர்த்து படம் கொட்டாவி விட வைக்கிறது. 



படத்துக்கு சென்ற முதன்மை காரணம் வேல்ராஜின் ஒளிப்பதிவு. ரொம்ப ஈர்க்கவில்லை என்றாலும் மோசம் என்று சொல்லக் கூடிய அளவிற்கு இல்லை. அந்தளவில் கொஞ்சம் மன நிறைவு. 

திரையில் ஓடிய படத்தைவிட எங்களுக்குப் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஸ்லீப்பர் செல் இருவரின் அதகளம் தான் தாங்க முடியவில்லை. திடீர் திடிரென்று கைத்தட்டுவதும், பயங்கரமாக சிரிப்பதும் ஏதோ பேய் பட எபெக்டை கொடுத்து பீதியில் உள்ளாக்கி மண்டை காய வைத்துவிட்டார் மொக்கை ஜென்டில் மென். இவனுங்க விழுந்து விழுந்து சிரிப்பதினால் தான் சூரி போன்ற காமெடி? நடிகர்கள் காமெடி என்கிற பெயரில் பேசிய வசனங்களையே பேசி நம்மளை சோகத்தில் ஆழ்த்துகிறார்கள் போலும். எனக்கு கூட பிரச்சினை இல்லை, ஆவியின் பின் மண்டைக்கு பின்னாடி தான் அடிக்கடி தபேலா வாசித்துக் கொண்டிருந்தான் அந்த ஸ்லீப்பர் செல்! 

மொத்தத்தில் இருநூறு கொடுத்து தூக்கத்தை கெடுத்துக் கொண்டது தான் மிச்சம். 


Post Comment

4 கருத்துரைகள்..:

aavee சொன்னது…

மூன்று அனாசின் போட்டும் தீரவில்லை அந்த குடைச்சல். அந்த இம்சை அரசர்களை பற்றி ஒரு குறும்படம் எடுக்கலாம் என்றிருக்கிறேன். உங்கள் கருத்து?

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் சொன்னது…

கஷ்டம் தான்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

//காட்சி மண்டையின் அனைத்துப் பக்கங்களிலும் அமிலத்தை தடவிய சுகத்தை தந்தது//
வார்த்தை ஜாலங்கள் ஆங்காங்கே மின்னுகிறது விமர்சனத்தில்

கார்த்திக் சரவணன் சொன்னது…

இத்தனை வருடங்களாகியும் விஷாலுக்கு கதைத்தேர்வு என்பது வரவில்லை....