வேருக்கு எவரும்
சொல்லித்தரவில்லை,
வளர்வதற்கு!
எறும்புக்கு எவரும்
உணர்த்தியதில்லை,
அதன் சுறுசுறுப்பை!
காய்க்கு எவரும்
கற்றுத்தரவில்லை,
கனிவதற்கு!
மலர்களாய் இருக்க
முயலு- அதற்குமுன்
காம்பின் வலிகளை
அறிந்துகொள்!
கிழிபடும் நாட்காட்டி
தாளாய்-இராதே,
நாட்களை சுமக்கும்
அட்டையாய் முயலு!
துவண்டால் சாய,
தோளினை தேடாதே!
நிமிர்ந்து நிற்க
கால்களை நம்பு!
நேற்றைய உலகம் எவர்
பெயரையோ உச்சரித்திருந்தாலும்,
நாளைய உலகம் உனது
பெயரை உச்சரிக்கட்டும்!
சென்ற வாரம் என்னை வலைச்சரத்தில் அறிமுகபடுத்திய நண்பர் ! ♥ வேடந்தாங்கல் ♥ ! கருண் அவர்களுக்கு நன்றி ....
Tweet |