புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜனவரி 26, 2011

கொடுந்தொடர்...


அறிவியலின் வளர்ச்சியில் 
ஆடம்பரமாய் உலாவும் சனி ...

இயல்பான உறவையும் 
இழிவுபடுத்தும் அவலம்...

கற்புகளின் களவை
கைத்தட்டி இரசிக்கும் கொடூரம்...

பொழுதுபோக்கின் உச்சம் 
வாழ்வியலின் எச்சம்...

வசதி , வறுமை பாரா 
பரவிவரும் பண்பாட்டுக்கொல்லி...

அற்ப குண அலகுகள் 
சொற்ப ஆசைக்கு இணங்கி 
பெண்ணியத்தை பிரித்து மேயும் 
- பிணிகள்...

உறவுகளுக்குள்ள விரிசலை காட்ட 
உறக்கமின்றி தவிக்கும் தரகுகள்...

சகுனி குணத்தில் 
சாக்கடை புழுக்களாக 
நெளிகின்றன நெடுந்தொடர் (எ) 
கொடுந்தொடர் முகவரியில்....

Post Comment

ஜனவரி 07, 2011

ஒளியிழந்த நிலவு ...



















வறுமைக்கு வளர்ப்பு பிள்ளை, 
வழிதவறிய ஆணுக்கு அவசரத்துணை... 


பலரது பசிக்கு பலியான 
பாதை தவறிய பேதை...


பருவங்களின் மோகப்பார்வைக்கு 
பலமிழந்த பாவை...


மதிமங்கிய மன்மதர்கள் 
அருந்திப்போன மதுக்கிண்ணம்...


எனக்கான பெயரும் மறைந்து, 
அரிதாரம் பூசிய முகமே முகவரியுமானது...


மலர்மணம் விரும்பிய நான் 
பணவாசனை நுகர்ந்து 
பிணமாகி போகிறேன்...


வண்ணக்கனவுகளும்,
நெஞ்சுக்குழி காதலும்,
கலைந்தே போயின...


சுகம்தரும் புதையல் என 
சுரண்ட முயலுகின்றன 
முகவரி தெரியா 
மனித முண்டங்கள் - என் 
சுகங்களை கேளாமலே...


அடுக்கடுக்கான படையெடுப்புகளினால் 
சிதைந்த சிற்பமானேன்...
சிறு எச்சமாகியும் போனேன் ...
******************************************************************


சென்ற வாரம் என்னை வலைச்சரத்தில் அறிமுகபடுத்திய 
நண்பர் ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்...

Post Comment