பட்டாம்பூச்சியின் தலையில்
பாரம் சுமத்திய
பாவிகளின் பூமியிது!
வறுமையை விரட்ட,
வாழ்க்கையை விற்ற
இறகை துறந்த
பொன்வண்டுகளின் பூமியிது!
எழுதுகோல் பிடிக்கும்
கரத்தில், ஏக்கத்தை
புகுத்திய நெருஞ்சிற்,
கூடாரமிது!
இளந்தென்றல் இவர்கள்
சேமித்த சில்லறைகளில்
கேட்கின்றது எதிர்கால
இந்தியாவின் அழுகை
குரல்!
இவர்களின் கைரேகை
மறைய, மறைய
உயர்கிறது
வறுமை கோட்டின்
வளர்ச்சி ரேகை!
அரசியல் முரடர்களே,
இனியும் சொல்லாதிர்
நாளைய இந்தியா
இளைஞர்கள்
கையிலென்று!
Tweet |