புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஏப்ரல் 26, 2012

வழியும் விழி நீர்...


கருவேலமுள் 
தீண்டி உயிரை 
துறந்த பலூனாய், 
கணப்பொழுதில் 
காயம்பட்டு கிடக்கிறேன்,
அவளின் 
ஒற்றை சொல்லில்!

நிதானித்து உதிர்த்த 
வார்த்தை - நெஞ்சை 
உளியாய் உரசுகின்றது!
உதிரம் உறைகின்றது!
வழியும் விழி நீருடன்
உயிரும் வெளியேறுவதை 
அவளும் அறிந்திருக்க 
வாய்ப்பில்லை...

Post Comment

ஏப்ரல் 23, 2012

கருணையே இல்லாமல்!!!திட்டமிடா நம் சந்திப்பில் 
திட்டமிட்ட உனக்கான 
என் வார்த்தைகள் 
உள்ளிருந்து கிள்ளுதடி,
உயிர்தனை மெல்லுதடி!
தொலைந்த வார்த்தைகளை 
வம்படியாய் வரவழைத்து,
உளறி, விடைபெற்று 
திரும்புகையில் 
என்னை கைவிட்ட 
வார்த்தைகள் மீண்டும் 
வந்து கரம் பற்றுதடி!
கருணையே இல்லாமல்!!!

Post Comment

ஏப்ரல் 19, 2012

நாளை உனதாகும்!நீ கடக்கும் பாதைக்கும்
உன்னை கடத்தும்
பாதைக்கும் 
வழிகாட்டி கல்லாய் 
நீயே இரு!

எரிந்து விழும் 
எச்சிற் சொற்களும் 
வலிய வாழ்த்தும்,
வழியை மட்டும் 
மாற்றாதே!

வலிகளின் ரேகைகளை 
உள்ளுக்குள் 
புதைத்து வை!
வாழ்க்கையின் மறுபக்கம்
வசந்தமாக்கும்!

நெஞ்சுரத்தோடு 
நேர்க்கோட்டில் 
சீர்தூக்கி நட!
கவலை துற,

நாளை உனதாகும்!
கனவும் கை கூடும்!

(மை கசிந்த எழுதுகோல் என்னைத்தான் முதலில் சுட்டுகிறது)

Post Comment

ஏப்ரல் 11, 2012

எச்சில் கொய்யா...


அழுந்த கடித்துவிட்டு 
என்னிடம் நீட்டிய 
எச்சில் கொய்யா 
நினைவூட்டுகிறது!

என் கன்னத்தில் 
தடம் பதித்த 
அழகிய உன் 
நினைவுகளை!

Post Comment

ஏப்ரல் 08, 2012

மௌனம் ...அன்பின் ஆழத்தை 
அழுத்தமாய் உணர்த்தும், 
       - அம்மாவின் மௌனம்!

இதய வலியை 
இயல்பாய் உணர்த்தும், 
       - காதலியின் மௌனம்!

நாளைய இரணங்களை 
நாசூக்காய் உணர்த்தும், 
     - நட்பின் மௌனம்!

பொருளாதார பொதியை 
புரிய உணர்த்தும், 
     - தந்தையின் மௌனம்!

மன்னிப்பின் மகிமையை 
மறைமுகமாய் உணர்த்தும், 
     - மனைவியின் மௌனம்!

பிரிவின் வலியை 
புதிராய் உணர்த்தும்,
     - பிள்ளையின் மௌனம்!

ஐம்புலன்களின் ஆதிக்கத்தை
அசையாமல் கட்டிவைக்கும்,
     - அதிரா மௌனம்!

இன்றைய அகங்காரத்தை,
நாளைக்கு உணர்த்தும்,
      - எதிராளியின் மௌனம்!

கடுஞ்ச்சொல்லின் காயத்தை 
காலம்தாழ்ந்து உணர்த்தும், 
    - கலையாத மௌனம்!


Post Comment

ஏப்ரல் 02, 2012

எப்படி செல்கிறாய் நீ மட்டும்...
(படத்தின் மேல் சுட்டினால் படம் பெரியதாக தெரியும்)

Post Comment