புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஆகஸ்ட் 31, 2013

தமிழ்ப் பதிவர் சந்திப்பு நேரலை ...


Post Comment

ஆகஸ்ட் 28, 2013

கோலாகல பதிவர் திருவிழா ...


ந்த வருடத்திற்கான பதிவர் சந்திப்புக்கான துவக்கபுள்ளி மிக தாமதமாக போடப்பட்டாலும், ஆயத்தப் பணிகள் என்னவோ வெகு வேகமாக நடந்து, இதோ இன்னும் சில நாட்களில் வடபழனியை ஆக்கிரமிக்கப் போகிறது பதிவர்களின் புயல்! இறுதி கட்டப் பணிகள் மிக துல்லியமாக நடைபெற்று வருகிறது! குறிப்பாக வெளியூர் பதிவர்கள் தங்குமிடம், அவர்களை அழைத்து வரும் பொறுப்பு இப்படி சரியான திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் விழா ஒருங்கிணைப்பு தோழர்கள்! விழாவின் பிரமாண்ட வெற்றிக்கான அறிகுறி இப்போதே தென்பட ஆரம்பித்து விட்டது.




ரண்டு சிறப்பு அழைப்பாளர்கள் வருகை தந்து உரை ஆற்ற இருக்கின்றார்கள்! திரு. பாமரன், திரு. கண்மணி குணசேகரன் இவர்களின் எழுத்து பலருக்கும் பரிச்சயமாயிருக்கும், உரையை கேட்டு மகிழ்வோம் வாருங்கள்! அடுத்ததாய் பதிவர்களின் தனித்திறன் நிகழ்ச்சி இவ்வருடம் புதியதாய் இடம் பெற்றிக்கிறது! எழுத்தில் மின்னும் இவர்கள், மற்ற திறமைகளையும் வெளிக்கொணர வாய்ப்பாய் இருக்கும் என்று நம்புகிறேன்! கலந்து கொண்டு சிறப்பிக்க? போகும் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!  





சென்ற வருடம் போல் இந்த வருடமும் புத்தக அரங்கு அமைத்து பல முன்னணி பதிப்பகத்தாரின் புத்தகங்களை நமக்கு சிறப்பு விலையில் வழங்க இருக்கும் பதிவர்களின் வேடந்தாங்கல் அண்ணன் வேடியப்பன் அவர்களுக்கு என் நன்றிகள்!  புத்தகங்களை ஆன்லைனில் வாங்க இங்கு செல்லுங்கள்!  

அடுத்து சக பதிவர்களின் புத்தக வெளியீடும் இருக்கிறது, அவர்களுக்கு நம் மனங்கனிந்த வாழ்த்துக்களைக் கூறிக்கொள்வோம்! அதைப்பற்றிய விரிவான தகவல்களை மெட்ராஸ் பவனில் பாருங்கள்!

துவரை வருகையை உறுதி செய்தவர்களின் பட்டியலை காண இங்கே செல்லுங்கள்! சென்ற வருட பதிவர் சந்திப்பின் வெற்றி இந்த வருடத்தின் பட்டியலை பார்த்தாலே தெரிகிறது! இதுவரை வருகையை உறுதி செய்யாத தோழர்கள் விரைவில் உங்களின் வருகையை உறுதி செய்யுங்கள்! அதனை வைத்து தான் தங்குமிடம், உணவு  போன்றவற்றை தயார் செய்ய முடியும்! வருகையை உறுதி செய்ய கீழுள்ள நண்பர்களை தொடர்பு கொள்ளவும்!

மதுமதி – kavimadhumathi@gmail.com 9894124021
பட்டிகாட்டான் ஜெய் – pattikattaan@gmail.com 9094969686
சிவக்குமார் – madrasminnal@gmail.com 9841611301
ஆரூர்மூனா.செந்தில்குமார் – senthilkkum@gmail.com 8883072993
அஞ்சாசிங்கம் செல்வின் – selwin76@gmail.com 9444125010
பாலகணேஷ் – bganesh55@gmail.com
சசிகலா - sasikala2010eni@gmail.com

Post Comment

ஆகஸ்ட் 20, 2013

பதிவர்களின் இரண்டாமாண்டு திருவிழா




Post Comment

ஆகஸ்ட் 16, 2013

நான்காம் தலைமுறை

சில நாட்களாகவே ஊரின் நினைவுகள் கொஞ்சம் எட்டிப் பார்க்கின்றன இந்த நகரத்து பின்னிரவுகளில்! திட்டமிடல் ஏதுமின்றி மனம் போன போக்கில் பொழுதுகளை கழித்துக் கொண்டிருந்த காலக் கட்டம் அது. பெரிதாய் கவலையில்லை, வறுமையும் சொல்லும்படி இல்லை. இளமை முறுக்கு, வாலிபச் செருக்கு என்று விதவிதமாய் திட்டுவாள்  முத்தம்மாள் பாட்டி! 





சுருக்கம் விழுந்த தேகம் , சுருள் சுருளாய் முடி. இரவிக்கை அணியாத உடல். மனசு இன்னும் சுறுசுறுப்பாய் தான் இருக்கிறது, உடல் தான் ஒத்துழைக்க மறுக்கிறது என்று சமீப காலமாக அடிக்கடி அவள் சொல்லி கேட்கமுடிகிறது! என்பது வயதை கடந்தவள் . சோறின்றி கூட இருந்து விடுவாள், பேச ஆளின்றி அவளால் இருக்க முடியாது! பறவைகளோடு, மனிதர்களும் இரைதேடும் அறுவடைக் காலங்களில் நின்று கூட பேச நேரமிருக்காது. அந்த அவசரக் காலங்களில் இவளுக்கு அடை காக்கும் கோழி தான் தோழி!

தலைகுளித்து, வெயிலில் உணர்த்தி, எண்ணெய் தடவி சிக்கெடுக்கும் விதம் அவ்வளவு அழகு! இவள் வெற்றிலை போடும் முறையை யாரேனும் புதிதாய் காண நேரிட்டால், அவர்களுக்கும் வாய் சிவக்கும்! அவ்வளவு நேர்த்தி! வாழ்க்கையை அனுபவித்து வாழ்கிறேன் என்று அடிக்கடி அவள் சொல்லுவாள், அர்த்தம் அறியாமல் பேரப்பிள்ளைகள் உதாசீனப் படுத்தாமல் இல்லை, இருந்தும் கோபப் படமாட்டாள் முத்தம்மாள் பாட்டி!

சிலமுறை கேட்டிமிருக்கிறேன் ஏம் பாட்டி உனக்கு கோவமே வராதா என்று? சின்ன புன்னகைதான் பதிலாக தருவாள்! தங்கைகள் பெரியவர்களானதும் பாட்டி அவர்களிடம் மட்டுமே அதிக நேரங்களை செலவிடுவாள், நிறைய சொல்லிக்கொண்டே இருப்பாள், என்ன சொல்கிறாள் என்று விளங்கவும் விளங்காது, தங்கைகள் சிக்கி கொண்டதை எண்ணி உள்ளூர கொண்டாடி இருக்கிறேன்! என்னதான் பேசுகிறாள்  என்று கேட்க மனம் விரும்பியதுமில்லை! இப்போ என்ன கிழவி பேசியிருப்பாள் என்று யூகிக்க முடிகிறது!


வேலைக்காக ஊரைவிட்டு கிளம்புகையில் எல்லோரும் சற்று மனம் கனத்து நிற்கையில் இவள் மட்டும் எல்லாரையும் ஒரு அதட்டு அதட்டிவிட்டு விபூதி வைத்து, போயிட்டு வாடா ராசா என்று வாய் நிறைய சிரித்து வழியனுப்பினாள்! எந்த சூழலையும் பதட்டமின்றி கையாளுவாள், எப்படியென்று கேட்டால், எல்லாம் உன் தாத்தா சொல்லிக்கொடுத்தது தான்டா என்பாள்! வேலை கிடைத்து நகரத்திலே தங்கும்படி ஆன சூழ்நிலையில் இது உன் முப்பாட்டன் காலத்துலிருந்தே இங்கதாண்டா இருக்கோம், மண்ணை மறந்துடாதடா என்பாள்!

ஊருக்கு செல்லும் குறுகிய நாட்களிலும் பாட்டியிடம் முடிந்தவரை நிறைய நேரம் செலவிட ஆரம்பித்தேன்! வீரியமான ஆலமரம் போலிருந்தவள் சின்ன காய்ச்சலென்று படுத்த நான்கு நாட்களில் மூச்சை நிறுத்திக்கொண்டாள்! அடித்துப்பிடித்து ஓடி பார்க்கிறேன் கண்ணாடி  பெட்டிக்குள் உறங்கும் பாட்டி அப்போதும் அழகாகவே இருந்தாள், பாட்டி இறந்துவிட்டாள் என்று சில மணித்துளிகள் கழித்தே புத்திக்குள் உரைத்தது!

எத்தனை வலிகளையும், ஏமாற்றங்களையும், இன்பத்தையும், துன்பத்தையும் பார்த்தவள் இப்படி ஒடுங்கி கிடக்கிறாள்! மூன்று தலைமுறைகளை கண்டவள் இன்று கண்மூடி படுத்திருக்கிறாள்! சடங்கு முடித்து, சிதைக்கு தீ வைத்து விட்டு திரும்பாமல் நடக்கிறார்கள்! மனதுக்குள் எண்ணற்ற கேள்விகள் எழும்பி அடங்குகின்றன, முன்னோக்கி தான் நடந்துகொண்டே பின்னோக்கி பயணிக்கிறேன்! 


வீடு சேர்ந்ததும்  அவளின் பழைய படமொன்றை காண்கையில்  "உனது மன வலிமையில் பாதியளவு கொடு" பாட்டி என்று கத்த வேண்டும் போலிருந்தது !

  

Post Comment

ஆகஸ்ட் 12, 2013

உந்தனழகை! (Semman Devathai # 13)



எல்லா மழையும் 
ஒன்றாய் இருப்பதில்லை,
அதுபோல தான் 
அவளின் முத்தங்களும்,
தடத்தோடும், தடமற்றும்!




சன்னலை திறந்து வைத்து
உறங்காதே!
மின்மினிகள் 
உளவு பார்க்கின்றன 
உந்தனழகை!


Post Comment

ஆகஸ்ட் 05, 2013

வறுமை தின்னும் வாழ்க்கை



அலங்கோலமாய்
வாரியிருந்தாள் 
எண்ணெய் இல்லா கேசத்தை!

மானத்தை மறைக்கவேண்டிய துணி 
அவளின் 
வறுமையை காட்டுகிறது!

கிழிந்த புடவையொன்றை
முடிந்து,
வன்னிமரத்தில்
தூக்கு கட்டி
கிடத்தியிருந்தாள்
மூன்று மாத குழந்தையை!

நான்காம் வார எள்ளுக்கு
களை கொத்துகிறாள்
நாற்பது ரூபாய் சம்பளத்துக்கு!

மின்மினி போல் 
விட்டு விட்டு  வீறிடும்,  
குழந்தையை தூக்கி 
பாலூட்டுகிறாள்!

இரண்டு முறை உறிஞ்சிவிட்டு, 

காம்பிலிருந்து வாயெடுத்து 
மீண்டும் அழுகிறது குழந்தை!

பாலில்லா பரிதவிப்பில் 
நெஞ்சை பிடித்துக்கொண்டு 
அப்படியே சரிந்து விழுகிறாள் 
போன வருடம் 
புருசன், 
தூக்கு மாட்டிக்கொண்ட 
அதே மரத்தடியில்!


Post Comment