புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

அக்டோபர் 31, 2012

சும்மா ஒரு விளம்பரம் ...


இந்த பய சும்மா இருந்தாலும் ஒரண்ட இழுக்குறான் 



இந்த நீலம் புயல் ரொம்ப நீளமா இருக்குமோ ? கொட்டி தீக்குது ..



இன்னொரு தபா மொறைச்சே வசுவிடம் சொல்லிடுவேன்...



சக்ரவர்த்தி திருமகன் பார்த்துட்டாரா என்று மிஸ்டர் சீனுவிடம் கேளு ...



அவர் சக்ரவர்த்தி என்று கேட்டதுமே ஓட ஆரம்பித்துவிட்டார் அம்மா 



இம்மாம் பெரிய அணைய கட்டினவரு அமைதியா போய்ட்டார், தம்மாதூண்டு சிமென்ட் ரோடு போட்டவனெல்லாம் அலப்பரைய கூட்டுரானுவோ?



டிபன் சாப்பிடும் போது டிஸ்டர்ப் பண்ணாதே ....




Post Comment

அக்டோபர் 30, 2012

விரும்பி சொன்னவைகள்.(சத்தியமா அரசியல் அல்ல)


நீதிமன்றத்திற்கு தலைவணங்கி நித்தியானவந்தாவை நீக்கினேன் : 
அருணகிரி அதிரடி பேட்டி//


வர வர இந்த ஆளும் நாராயணி மாதிரி பேசுறாரே ...(இந்த ஈரவெங்கயாம் இங்க வேகாது நீங்க முன்னாடி பேசினது எல்லாத்தையும் நாங்க மறக்கல ஆதீனமே)


ப.சிதம்பரம் வெற்றிக்கு எதிரான வழக்கு: சாட்சி விசாரணையை நடத்தும்படி ஐகோர்ட் உத்தரவு// 
மாண்புமிகு நீதிபதி அவர்களே சற்று பொறுங்கள் இன்னும் ஒரு வருடம் தான் இருக்கிறது இவரின் பதவி காலம் முடிய,, பிறகு மனுவை பற்றிய விசாரணை வைத்துக்கொள்ளலாம் ..(இந்த கருமம் எல்லாம் இந்தியாவில் மட்டும் சாத்தியம் )

விஜயகாந்த் இனி எங்கு நின்றாலும் டெபாசிட் கூட கிடைக்காது: ஓ.பன்னீர்செல்வம்// 
எதுத்தாப்புல இருக்குற டீ கடையில நின்னாலுமா தலைவரே

நான் பிரபலமாவது சிலருக்கு பிடிக்கவில்லை: பவர் ஸ்டார் சீனிவாசன் வருத்தம் 
......................................//

இதுக்கு மேலையும் நீங்க பிரபலம் ஆகணுமா தலைவா ?


தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தொகுதியில் சுகாதார சீர்கேடு! டெங்கு காய்ச்சலில் மாணவி பலி!//

அங்க மட்டுமா நாறுது, தமிழ் நாடே நாறுது ...


ஆசிரியர் திட்டியதால் தீ குளித்த மாணவன் சாவு//

ஏதோ டீ குடிக்கிற மாதிரி தீ குளிக்கிறது நல்லதுக்கு அல்ல ..

படிக்கட்டில் பயணம் செய்த கல்லூரி மாணவர் பலி : 
கும்பகோணத்தில் சாலை மறியல்//

பையன் இறந்ததுக்காக சாலை மறியல் செய்யும் மக்கள் 
படியில் தொங்கி பயணம் செய்யும் போதும் கண்டனம் செய்வது நலம் ...



(இதில் வேறு உள்குத்தும் இல்ல, சும்மா என் கருத்தை இதில் பதிவு செய்கிறேன் அட சத்தியமா நம்புங்க நான் வாக்கு கேட்டு உங்களை எல்லாம் தொந்தரவு பண்ணமாட்டேன் , முக்கியமா விலையில்லா பொருள் தருவேன் என்றும் சொல்ல மாட்டேன்)

Post Comment

அக்டோபர் 29, 2012

ஊர்ப்பேச்சு # 5 ( Oor Pechu)





என்ன ரத்தினம் எப்படி இருக்கே, பாத்து ஒரு வாரம் ஆச்சே, என்ன வேலை நடக்குது என்று கேட்டுக்கொண்டே கையில புடிச்சிருந்த கன்னுக்குட்டிய பக்கத்துல இருந்த புளியங்கண்ணுல கட்டினார் கனகசபை.



என் கதைய ஏன் கேக்குற கனகசபை, பொழப்பு சிரிப்பா சிரிக்குது, வெளிநாட்டுல இருந்து வந்த மூணு வாரம் நல்லா இருந்தா, இப்ப சட்டி போட்டு கடைஞ்சி தள்ளுறா என் பொஞ்சாதி.

என்னாச்சி ரத்தினம்? மதியழகி அப்படி ஏதும் பண்ணாதே, நீ ஏதாவது வம்பு வளத்துருப்ப, அதான் எதாச்சும் சொல்லிருக்கும். நீ வந்தும் மூணு மாசம் ஆச்சு, சும்மா வீட்டுல இருக்குறதுனால அப்படி எதாவதும் பேசி இருக்கும் 
இதுக்கெல்லாம் எதுக்கு மனச போட்டு கொழப்பிக்கிற...

நீ சொல்றதும் வாஸ்தவம் தான் கனகசபை, வெளிநாட்டுல இருக்குறத குடிச்சோமோ, வேலைய பார்த்தோமான்னு பொழப்பு ஓடுச்சி, சரி வாழ்நாளுல பாதிய அங்க கெடந்தே கழிஞ்சி போச்சு, மீதி நாளையாவது நம்ம மண்ணோட, மக்களோட இருக்கலாம்னு இங்க வந்தா நெலமை தலை கீழா இருக்குது.

நீயும் புள்ள, பொஞ்சாதிய விட்டுட்டு பாதி வாழ்க்கைய அந்நிய மண்ணுலையே கழிச்சி புட்ட, இனி அதெல்லாம் வேண்டாம் இருக்குறத வைச்சி ஏதாவது கடை வைச்சி பொழப்ப பாரு ரத்தினம்.

நானும் அதை நெனச்சிகிட்டு தான் இருக்கேன் கனகசபை, ஆனா மதியழகியோட தங்கச்சி புருஷன் வெளிநாடு போயிட்டு வந்துட்டு இப்ப பைனான்ஸ் பண்ணிட்டு இருக்காராம் , அதையே என்னையும் பண்ண சொல்லி தொந்தரவு பண்றா, அதான் பிரச்சினையே!

என்ன ரத்தினம் போயும் போயி அந்த வட்டிக்கு விடுற வேலைய எவனாவது பண்ணுவானா, ஆளு இருக்குறவன், மிதமிஞ்சிய பணம் இருக்குறவன், கொஞ்சம் அரசியல் செல்வாக்கு இருக்குறவன், உடம்பு வளையாம நோகாம சம்பாதிக்க நினைக்கறவன் தான் அத பண்ணுவான், உனக்கு இது சரி பட்டு வராதுன்னு எனக்கு தோணுதுப்பா. 
இதுல கொடிகட்டி பரந்தவங்க எல்லாம் இன்னைக்கு இருக்குற எடம் தெரியாம போயிட்டாக, இது கொஞ்சம் வெவகாரம் புடிச்ச தொழில்.நான் வேணுமுன்னா மதியழகி கிட்ட இதை பத்தி பேசுறேன். சரி ரத்தினம் மாடுக மேய்ச்சலுக்கு போகணும், அப்புறம் சந்திப்போம்!

சரி கனகசபை போயிட்டு வா, நேரம் கெடைச்சா இதை பத்தி அவகிட்ட கொஞ்சம் எடுத்து சொல்லு.... 

Post Comment

அக்டோபர் 25, 2012

செம்மண் தேவதை # 6 (Semman Devathai)








Post Comment

அக்டோபர் 22, 2012

என் மொழிகள் # 3(En Mozhigal)



"பின்னுக்கு இழுக்க முயற்சி நடைபெறுகிறது என்றால் 
நீ முன்னேறி கொண்டிருக்கிறாய் என்று அர்த்தம் ..."

"பேரிரைச்சலுடன் அழுதாலும் 
சிரிக்கையில் அமைதியாய் சிரி
இங்கு பலர் வயித்தெரிச்சலுடன் இருக்க கூடும்"

"என்றோ ஒருமுறை செய்த சிறிய தவறுதான் 
பலமுறை செய்த நல்லதுகளை 
புறந்தள்ளி பல்லிளிக்கிறது,பல நேரங்களில்" 

"சாவகாசமாக உறங்கவேண்டுமெனில் 
சக்கரமாக சுழல வேண்டும் - இளமையில்!"


"வெற்றி கண்டவுடன் ஓய்ந்தவர்கள் 
பிறகு வெற்றி காண்பது 
அவ்வளவு எளிதல்ல ..."

சும்மா தமாசு :





Post Comment

அக்டோபர் 19, 2012

ஊர்ப்பேச்சு # 4


ஊர்ப்பேச்சு # 1                        ஊர்ப்பேச்சு # 2                                 ஊர்பேச்சு # 3

என்ன கனகசபை, என்னய்யா காலையிலே கூடையோட வர, என்ன வேலை இன்னைக்கு 


வேலை ஒண்ணுமில்ல ரத்தினம், தோட்டத்துல கொஞ்சம் சாணம் கெடந்தது அதை அள்ளி கொட்டிட்டு வாறன்...

சரி வா அந்த கல்லு பக்கம் உக்காந்து பேசுவோம், வர வர பனி அதிகமா கொட்டுற மாதிரி தெரியுதே கனகசபை 

என்ன ரத்தினம் இந்த பனிக்கே இப்படி சொன்னா எப்புடி மார்கழி, தை மாசம் கொட்டுற பனிய என்னத்த சொல்லுவ...கை கால் எல்லாம் வெறச்சி போய்டும்...

பழகிக்க வேண்டியது தான் கனகசபை, ஆமா அன்னைக்கு ஏதோ பேசிட்டு இருந்தோம் கொஞ்சம் அவசர வேலை இருக்கு என்று சொல்லிட்டு போனியே அது என்ன தான் சமாச்சாரம் கனகசபை கொஞ்சம் வெளக்கமா தான் சொல்லேன்.



அது வந்து ரத்தினம் மக்கள் வேலை இல்லாம இருக்குறாங்க, வறுமை கோட்டுக்கு கீழுள்ள மக்களை வளப்படுத்தனும் என்று தான் இந்த நூறு நாள் திட்டத்தை அறிமுகபடுதுச்சு இந்த மத்திய அரசு, அதுவே நம்ம உழைப்பாளிகளை சோம்பேறி பெரிச்சாளிகளா மாத்திடுச்சி, விடிஞ்சு எழுந்துருச்சா வேலை எங்கு கெடைக்கும் என்று கூடி பேசி வேலைக்கு போயிட்டு வந்த நம்ம சனம் இப்ப என்னடானா எட்டு மணி வரைக்கும் தூங்குதுங்க, சாவகாசமா எழுந்துருச்சி பாழாப்போன இந்த வேலைக்கு கெளம்பி போயிட்டு வந்து மறுபடியும் வந்து தூங்குதுங்க. ஏதோ கொஞ்சநஞ்சம் காணி வச்சிருக்குரவங்க மட்டும் பேருக்கு அல்லாடிட்டு இருக்காங்க, இப்படியே போச்சுனா இப்ப விவசாயம் பண்ணிட்டு இருக்குற கொஞ்ச பேரும் இருக்குற பூமிய வித்துட்டு நகரத்துக்கு போயிருவாங்க, அதுக்கும் நம்ம காசி மகன் வழி காட்டிட்டான், காசி இருக்குற வரைக்கும் இந்த மண்ணுல ஓடா உழைச்சார், அவர் போனதுக்கு அப்புறம் அவர் மகன் வந்தான் இருக்குறத துண்டு துண்டா மனைகளா கூறு போட்டு வித்துட்டு பணத்த மூட்டையா கட்டிக்கிட்டு டவுனுக்கு போய்ட்டான்!

நானும் கேள்விபட்டேன், என்ன பண்றது கனகசபை நம்மதான் கெடந்து புலம்புறோம், ஒரு பயலுக்கும் புரிய மாட்டேங்குது, சொல்றத காது கொடுத்து கேக்குறதுமில்ல, ஊரு போற போக்க பார்த்தா சரியில்லைப்பா!

நம்ம மூத்தோர் எல்லாம் உழப்ப தான் பொழப்பா வச்சிருந்தாங்க, நாலு ஆளு வேலைய ஒத்தையா பார்த்தாங்க, உடம்பும் கருங்கல்லு கணக்கா கூட ஒத்து உழைச்சது, இப்ப இருக்குற இளவட்டம் அப்படி இருக்குதா, கொஞ்சம் கம்மங்கருத தூக்கிட்டு வரதுக்குள்ள என் தம்பிக்கு மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்குது என்னத்த சொல்ல!

ஒண்ணுமில்ல கனகசபை இரும்பை துரு புடிக்க விட்டா கொஞ்ச நாளுல அதோட வலுவ இழந்திடும், நம்ம ஊர்க்காரங்களும் அப்படி தான் மனச துரு புடிக்க விடுறாங்க, பாரு வரும் சந்ததி என்ன நிலையில் இருக்குமென்று! நல்லா விளைஞ்ச மண்ண தரிசா போட்ட பாவம் சும்மா விடாது! 

நொடிச்சி நிக்கிற விவசாயத்த வர எந்த அரசும் தூக்கி நிறுத்துற வழிய கண்டு பிடிக்குறதில்ல ரத்தினம், மாறா அரிசி இலவசம், டிவி இலவசம் , காத்தாடி, இப்படி இலவசமா கொடுத்து மக்களை சோம்பேறி ஆக்கி அடுத்த நிலைய பத்தி சிந்திக்க அவகாசம் கொடுக்காம மழுங்கடுச்சி வைச்சிருக்கு, இந்த தலைமுறை இப்படி இலவசத்தை அனுபவிச்சு உழைப்பை மறந்து வைச்சிருந்தா அவர்களுக்கு பிறக்கும் புள்ளைகள் கூட சோம்பேறியா தான் இருக்குமையா! 
அதுசரி 

"மோழி புடிக்கிறவன் சரியா புடிச்சா உழவு ஏன் கோணலா போவும்" 

சரி வா கெளம்புவோம் ரத்தினம் பேச ஆரம்பிச்சம்னா நேரம் போறதே தெரியாது ...





Post Comment

அக்டோபர் 17, 2012

பலவீனமாகிறேன் உன்னிடம் ...


நீ 
பரிசளித்த கடிகாரம் 
நேரத்தைவிட 
உன்னைத்தான் அதிகம் காட்டுகிறது ...



சிணுங்கிக்கொண்டே 
கையிலிருந்த பொருளை 
நீ பிடுங்குகையில், 
என் மொத்த பலமும் 
பலவீனமாகிறதடி உன்னிடம்!

நன்றி : கூகுள் 

Post Comment

அக்டோபர் 15, 2012

நாங்களும் படம் காட்டுவமில்ல ...


இவனுக்கு கை கால் எல்லாம் நல்லாத்தான் இருக்கு ... இருந்தும் என்ன பயன்?


மம்மியால் அம்மிக்கு வந்த வாழ்வு 


எப்படியோ நாமும் வரலாற்றில் இடம் பிடிச்சாச்சு 


என்ன லுக்கு ?
 

தெரியாம இந்த பக்கம் வந்துட்டேன் ...


சிவப்பு விளக்கு பகுதியில்ல ..


இவங்க கிட்ட படிக்கிறவன் எப்படி உருப்படுவான் ...


நீங்க பெரிய விஞ்சானியா வருவிங்க 


மிஸ்டர் சீனு உங்களைதான் அமெரிக்காவே நம்பி இருக்கு ...

கடைசி இரு பட உதவி : கூகுள்


Post Comment

அக்டோபர் 11, 2012

என் மொழிகள் # 2




"நீ ஓடும் பாதை 
ஒருவருக்கு வழியாக இல்லாமல் 
இருந்தாலும்,
தடையாக வேண்டாம்"

"இலக்கை நோக்கி 
வெறி கொண்டு ஓடு...
ஆனால் 
நெறியோடு செய்"

" உன் திசையில் செல்லும் முன் 
எதிர்த்திசையை அறிந்து கொள்"

"ஒருவன் மனிதனாவதும் 
மிருகமாவதும் 
உச்சபட்ச கோபத்தில் தான்"

" உன் லட்சிய சிந்தனைகள் 
குடுவைக்குள் அடைபட்ட 
கற்றாய் இருக்கட்டும்,
வெற்றி என்ற திறப்பை 
நோக்கியே சுழலும்"

(சத்தியமா யாருக்கும் கூறப்பட்ட உபதேசமல்ல)

நன்றி : கூகுள் 

Post Comment

அக்டோபர் 10, 2012

செம்மண் தேவதை # 5 (semman thevadhai)



நீ பயன்படுத்தும் 
மஞ்சள் நிற சாந்து பொட்டில் 
துளி கொடு,
வானவில்லின் வண்ணம் 
ஒன்று குறைகிறதாம்!




நான் வேண்டும் என்கிறேன், 
நீ வேண்டாம் என்கிறாய் 
சரி 
வேண்டா வெறுப்பாக 
முத்தமொன்று கொடு!

நன்றி : கூகுள் 

Post Comment

அக்டோபர் 08, 2012

எனது கிராமத்தின் அழகை இரசிக்க வாருங்களேன் # 10


ஆறுக்கு அஞ்சு சொல்லித்தரும் தாய்ப்பாசம் 


என்னை கவர்ந்த கொடி வகை 


இதுவும் ஒரு பூண்டு செடிதான்.


குமுளம் காயும், மலரும் 


முறுக்கி நிற்கும் குருத்து 


கண்ணை பறித்த மஞ்சள் மலர் 


கம்பு 


ஆமணக்கு தழை 


இதுக்கும் பெயர் தெரியலைங்க 



ரெட்டை இலை (உள்குத்து இல்லைங்க )


(இவை அனைத்தும் எனது ஊரில், நான் எடுத்தது. படத்தின் மேல் சுட்டினால் பெரியதாகும்)

Post Comment

அக்டோபர் 04, 2012

என் மொழிகள் # 1



"எழுதுகோலாய் 
இருக்கும் பட்சத்தில் 
பேனாவாகவும்
பென்சிலாகவும் 
மாற தெரிந்தவர்களே 
புத்திசாலிகள்"

"விருப்பத்தின் அடுத்த நிலை 
வெறுப்பாக இருக்கலாம்"

"காதல் என்ற காற்று நிறைந்த பலூன் 
எல்லோருக்கும் கிடைத்தாலும் 
வெகு சிலரே 
லாவகமாக கையாளுகிறார்கள்"

"விட்டில் பூச்சியாய் 
விளக்கை தேடிச்செல், 
முட்டாள் பூச்சியாக 
அதில் விழுந்து விடாதே"

"வாழ்க்கையை 
உணர்ந்தவன்  விற்பனையாளனாகிறான்
உணராதவன் விற்பனை பொருளாகிறான்"

(சத்தியமா இது யாருக்கும் உபதேசமில்லை, எனக்கு நானே கொடுத்துக்கொள்ளும் உற்சாகவரிகள்)

Post Comment

அக்டோபர் 03, 2012

பரபரப்பான முத்தம் ...

arasan, sekar, raja, u. n. kudikkadu, sendurai, tamil love poem, 



tamil kavidhai, tamil love, arasan, S. Raja, SEKAR, U. N. KUDIKKADU, ARIYALUR DISTRICT


படஉதவி: கூகுள் 

Post Comment

அக்டோபர் 01, 2012

இந்த கலாச்சாரம் தேவையா?


"நாளைய விடிவெள்ளி", "இந்தியாவின் அரண்", "மக்களை காக்க வந்த கடவுள்" இப்பேற்பட்ட வாசகங்களை கொண்டு போஸ்டர் அடிச்சி திரும்பும் இடமெல்லாம் ஒட்டி, மக்களை கதி கலங்க வைத்தது மட்டுமில்லாமல் பாவம் பாதி பேருக்கு கண் பார்வை பறி போகவும் காரணமாக இருந்த அரசியல் கட்சிகளும், அதன் தலைவர்களும் சற்று ஒரு படி மேல் முன்னேறியுள்ளனர்! (ரொம்ப முக்கியம் இந்த முன்னேற்றம்)

அட ஆமாங்க, ரெண்டு மண்பானை, ரெண்டு மடக்கு, ரெண்டு பிளாஸ்டிக் டம்ளர் வாங்க எவ்வளவு செலவாகி இருக்கும் என்று நீங்களே கணக்கு போட்டு கொள்ளுங்கள் தோழமைகளே! இந்த தண்ணீர் பந்தல் திறப்பு விழாவிற்கு வருகை புரிந்த அரசியல் தலிவருக்கு போஸ்டர் அடிச்சி அந்த ஏரியாவை கன்னாபின்னமாக்கிய செலவு எப்படியும் லட்சத்தை தொடும், இதே பாணியில் பக்கத்துக்கு தெருவில் ஒரு முன்னணி நடிகர்? அதகளப்படுத்தினார்! (உனக்கு ஏண்டா பொறாமை, பல்லு இருக்குறவன் பக்கோடா திங்கிறான்)

வடக்குபட்டி ராமசாமியை மத்திய பிரதேசத்தில் மத்தால் அடித்து விட்டார்கள் என்கிற வதந்தி வந்தால் போதும், வடக்குபட்டி முழுதும் "ராமசாமியை அடித்தவர்களை உடனே கைது செய்!" என்கிற சுவரொட்டி தான் பல்லிளிக்கும்! ஹிந்தி காரனுக்கு எதுக்கய்யா தமிழில் சுவரொட்டி அதுவும் நம்ம ஊரில் எதற்கு! நேராக சென்று அங்கு முறையிடு அதுதானே முறை! (என் காசு நான் என்னவேணும் என்றால் பண்ணுவேன், உனக்கு எங்கே வலிக்குது)

அதை கூட ஒருவகையில் பொறுத்துக்கொள்ளலாம், இதை தான் சகித்து கொள்ள முடியவில்லை, ஒசாமாவுக்கும், ஒபாமாவுக்கும் கண்டன சுவரொட்டி ஒட்டுவது தான் உச்சபட்ச காமெடி, எங்கேயோ இருக்கும் அவர்களுக்கு இவர்கள் ஒட்டும் சுவரொட்டி எந்த பாதிப்பையும், பலனையும் தரப்போவதில்லை என்பது தான் நிதர்சன உண்மை! தன் இருப்பை நிலை நிறுத்த, இப்படி ஒரு கட்சி இருக்கிறது என்பதை அறிவிக்க தான் இப்படி ஒரு கலாச்சாரம்! (பெரிய அறிவாளி சொல்ல வந்துட்டார்) 

தன் கண்டங்களை பதிவு செய்ய விரும்பினால் நேரிடையாகவே உங்களது எதிர்ப்பை அளியுங்கள், இல்லை குறைந்த பட்சம் மின்னஞ்சலாவது அனுப்புங்கள், உங்களது குறைகளை அவர்கள் அறிந்து கொள்ள வாய்ப்பாவது கிட்டும், அதைவிட்டுட்டு எங்கோ இருக்கும் தலைவர்களுக்கு இங்கு சுவரொட்டி அடித்து சூழலை மாசுபடுத்துவதுடன் விளம்பரம் என்கிற பெயரில் உங்களை நீங்களே தரம் தாழ்த்தி கொள்ளாதிர் என்பது என் தாழ்மையான கருத்து . 


Post Comment