புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜனவரி 31, 2013

செம்மண் தேவதை # 9 (Semman Devathai)கோப்பை நிறைய இருந்தும் 
விளிம்புத்துளிகளை 
தேடும் ஈ போல், 
உன் இதழ் ஒட்டிய 
அந்த மச்சத்தை 
சுற்றியே 
ரீங்காரமிடுகிறது மனசு!


பறித்துக்கொடுத்த 
புளியம் பிஞ்சியை 
உப்பில் தொட்டு 
கண்ணை மூடி 
நீ ருசிப்பதை, 
எச்சில் சுரக்க 
ரசிக்கிறேன்!

Post Comment

ஜனவரி 28, 2013

மீண்டுமொரு பயண வேதனை...சென்ற வாரம் ஊருக்கு செல்ல வேண்டி இருந்தது, இரயிலில் டிக்கட் கிடைக்காமல் போனதால் வேறு வழியின்றி பேருந்தை நோக்கியது என் கவனம்! கோயம்பேடு பேருந்து நிலையம் மாதிரி பெரியதும், சுகாதாரம் குறைந்ததும் இல்லை என்று சொல்வதில் தவறில்லை! பெரும்பாலும் எங்க ஊருக்கு செல்லும் பேருந்துகளை எத்தனை தொலைவில் இருந்தாலும் எளிதில் அடையாளம் காணலாம், அம்புட்டு அவ லட்சணமாய் தனியாக தெரியும்!
இந்த முறை அதே எண்ணத்தில் சென்ற எனக்கு பேரதிர்ச்சி, பளிச்சென்று கவர்ச்சி நடிகை போன்று காட்சி தந்து என்னை இன்பக்கடலில் ஆழ்த்தியது. இன்பக்கடலில் அப்படியே நீந்தி ஒருவழியாக பேருந்தில் ஏறினேன்! பிறகு தான் விளங்கியது இது அதே பழைய பல்லவிதானென்று! எம்பது வயசு கெழவிக்கு பட்டுப்பாவாடை கட்டி கூட்டிவந்த கணக்கா, வெளியே பவுசும் உள்ளே அதே பல்லு போன பழசும்! மண்டை கொஞ்சமாய் சூடேறியது! என்னா எழவுக்கு வெளிய மட்டும் பெயிண்ட் அடிச்சி ஊரை ஏமாத்தணும்! (என்னவோ போடா மாதவா?)

இருக்கையை தேடினால் கடைசி வரிசை தான் காலியாக இருந்தது, மற்ற இருக்கைகளில் பேக்குகள் இருந்தன, ஒரு இருக்கையில் காலண்டர் இருந்தது (தமிழண்டா!!!). எப்படி இடம் பிடிப்பதென்று பல்கலைகழகம் ஆரம்பிக்க தமிழன் ஒருவனுக்கே அந்த தகுதி இருக்கிறதுகடைசி வரிசையில் வலது புற சன்னல் ஓரம் என் பேக்கை வைத்து விட்டு, தண்ணீர் வாங்க சென்றேன்! இரண்டு பேருந்துகளுக்கு இடையில் ஒரு "குடிமகன்" வெகு அவசரமாக தாக சாந்தி நடத்திக்கொண்டிருந்தார்! (ம்ம்ம்ம் .. அவனவன் பிரச்சினை அவனவனுக்கு).

ஒருவழியாக பேருந்து கிளம்பியது நான் என்ன நடக்க கூடாது என்று எதிர்பார்த்தேனோ அதுதான் நடந்தேறியது, (என் எண்ணம் அம்புட்டு மோசமானது போல)அந்த குடிமகன் மிகச்சரியாய் என் அருகில் அமர்ந்து கொண்டார், அதன்பிறகு நான் பட்ட அவஸ்தை இருக்கே...... வேண்டாம் விடுங்க என் கஷ்டம் என்னோட போகட்டும்! அந்த சுக போக தருணத்தில் இன்னும் இனிமை கூட்டினார் நம் திடமான பதிவர், "போன் பண்ணியவர், யோவ் உனக்கா கால் வந்துடுச்சு சாரி, நான் அந்த புள்ளைக்கு தானே போட்டேன் எப்படி இவருக்கு வந்திருக்கும் என்று தானே பேசிக்கொண்டு கால் கட் செய்து களிப்பை? தந்தார் ".... (நீ நல்லா வருவைய்யா , நல்லா வருவ....)

இனி எந்தப்பேருந்தில் பின் வரிசை இருக்கைகளை கண்டால் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓட்டம் பிடிச்சிர மாட்டேன்!

Post Comment

ஜனவரி 23, 2013

மனக்கிடப்பில் ...(manakkidappil)அகம் மகிழ்ந்த,
ஆடி
பதினெட்டும்,

உள்ளம் கரைத்த  
கார்த்திகை
ஒளிக்கற்றையும்,


நெஞ்சோடு மஞ்சம் 
கொண்ட
மார்கழி குளிரும்,

வண்ணம் நிறைத்த 
தைப் 
பொங்கலும்,

அதன் வடிவம்
மாறாமல் அப்படியே
தான் இருக்கின்றன,


நடப்பில் அல்ல 
என் மனக்கிடப்பில்... 

Post Comment

ஜனவரி 21, 2013

வெதை சோளத்தையாவது...


தெக்கத்தி பொட்டல்காட்ட 
ஏர் கொண்டு நான் கூரிட, 


முந்தி என்னிரு 
புள்ளைகளும் எரு தூவ,
பிந்தி எம்பொஞ்சாதி 
வெதை தூவி 
முடிச்சி பார்த்தா, 

கெழக்க சிரிச்ச சூரியன் 
மேற்க முகம் சுருங்க,
தள்ளாடும் காளைக 
வழி பிடிச்சி வீடு 
சேர்ந்து நாளும் பத்தாச்சு!

போக மனமில்ல 
அவ்வழியா போனவங்க 
சொல்ல கேட்கையில!


வறண்ட வானம் முரண்டு புடிக்குது 
ஏகத்துக்கும் வேணாம், 
இந்த போகத்துக்கு பேஞ்சா போதும்,
வீசியெறிஞ்ச 
வெதை சோளத்தையாவது தேத்திபுடுவேன்! 

வஞ்சமில்லாம என்னைக்கு பேயுமோ ?
என் பஞ்சம் என்னைக்கு தீருமோ?

Post Comment

ஜனவரி 12, 2013

ஊர்ப்பேச்சு # 8 ( Oor Pechu)
என்னய்யா கனகசபை உன்னை பார்த்தே ஒரு மாசமிருக்கும் போல, எங்க போயிருந்தே , ஏதேனும் வேலையா? என்ன சுகம் தானே?

வாய்யா ரத்தினம், நல்லா இருக்கேன், எனக்கென்ன குறைச்சல். 

என்ன ஆச்சு, இம்புட்டு சோர்ந்து பேசுறியே, ஏதேனும் பிரச்சினையா?

அத ஏன் கேக்குற ரத்தினம், எம் பொண்டாட்டியும், புள்ளையும் சொல்லிச்சிங்க நான் கேட்டனா?, மொரண்டு பிடிச்சி இந்த பட்டம் கல்ல (கடலை) போட்டே தீரனும்னு போட்டேன், இப்ப மொதலுக்கே மோசமா போச்சு! சித்திர மாசத்து வெயிலு மாதிரி காந்துது! மொளைச்சி  நாலு எலை கூட விடல அம்புட்டும் கருகிப்போச்சி... 

உனக்கு என்ன முன்னமே இப்படி தெரியுமா? விடுப்பா ? நம்ம தலையில என்ன எழுதி இருக்குதோ அதுதான் நடக்கும் .. இதை வுட்டா அடுத்ததுல புடிச்சிக்கலாம், நம்பிக்கைய வுட்டா எப்படி?

இப்படி நம்பி நம்பி தான் நாலு பட்டமா வெரைப்பயிர் கூட வெலைக்கு வாங்கிப்போடுறேன், ஒன்னு பேஞ்சி கெடுக்குது , இல்ல காஞ்சி கெடுக்குது. இன்னும் என்னவெல்லாம் நடக்க போகுதோ ? இந்த லட்சணத்துல பொங்கல் ஒன்னு வருது, என்னத்த பண்ணுறது. ? இருக்குற அரசாங்கமும் எரியுற தீயுள எண்ணைய ஊத்துற கணக்கா இலவசம் இலவசம்னு கொடுக்குதே தவிர ஆக்கப்பூர்வமா செய்யுற மாதிரி தெரியல .

நம்ம புலம்பி என்னத்த ஆகப்போகுது, தேர்ந்தெடுக்கும் போதே நல்ல அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கணும் அத வுட்டுட்டு இப்ப பொலம்புரதுல என்ன வரப்போவுது கனகசபை... என்ன நடந்தாலும் வரது வராம போய்டுமா? நம்ம மக்களும் கந்து வட்டிக்காவது கடன வாங்கி பொங்கல கொண்டாடத்தான் போறாங்க. 

நம்ம பருவ வயசுல நெல்ல அறுத்தபிறகும் ஏரியில தண்ணி குறையாம சமுத்திரம் போல நிரம்பி வழியும், இப்ப பார்த்தியா ஆடு மாடு வாய் நனைக்க கூட தண்ணி இல்லாம வறண்டு போச்சைய்யா... என்னமோ ரத்தினம் மக்கள் ஒரேயடியா மாறுன மாதிரி இயற்கையும் வெரசா மாறி போச்சி .. எங்க போய் முடிய போகுதோ?கனகசபை அப்பவெல்லாம் மரத்தோடையும், இயற்கையோடும் மனுசன் பழகி வாழ்ந்தான், இப்ப எந்திரத்தோடு, செயற்கையோடு பழகி சீரழியுறான்!இயற்கையோடு பழகாம இருந்தாலும் சரி, அழிக்காம இருந்தாலே போதுமய்யா, சீர்குலைஞ்சி கிடக்குறத எப்படித்தான் சீராக்குறதோ?
"வெடிச்சி கெடக்கும் வயக்காட்டு விரிசலில் ஒட்டிக்கிடக்குதையா நம்மள போல பாவப்பட்ட மக்களின் இத்தனை வருஷ சேமிப்பும் 
எஞ்சியிருக்குற சொச்ச உசுரும்"... சரிய்யா ரத்தினம் எல்லாருக்கும் பொங்கல் வாழ்த்தை சொல்லிடு நாம கெளம்புவோம் ...

"அனைவருக்கும் தமிழர் பெருநாள் வாழ்த்துக்கள்"

Post Comment

ஜனவரி 10, 2013

நடைவண்டி...எனக்கு 
என் மாமியார் கொடுத்தது,
அவருக்கு அவங்க மாமியார் 
கொடுத்ததாம் என்று அடிக்கடி 
பெருமை கொள்வாள் அம்மா!

இரண்டு தலைமுறையோடு 
உறவாடிய 
மூன்று சக்கர நடைவண்டி
மூலையில் புழுதியண்டி கிடக்கிறது!

ஒன்னரை வயது என் மகன் 
சுழலும் நவீன வண்டியில் 
சுற்றிவருகிறான் நளினமாக!

இதுபோன்று எத்தனைகளை 
இழந்திருக்கிறோமென்று 
அசைபோடுகையில், 
இருநூறு இடிகள் 
ஒருங்கே இறங்குகிறது  
என்னுள்!Post Comment

ஜனவரி 08, 2013

இளஞ்சூட்டு முத்தமொன்றில் ....


Post Comment

ஜனவரி 03, 2013

உருண்டை கண்களும், குழி விழும் கன்னமும் ...
Post Comment