புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜூன் 30, 2011

எங்க ஊர் ...



மழைத்துளியின் வாசனை நாசியை அடையும் முன் மண் வாசனை நுரையீரலின் பக்கங்களை தொட்டுதழுவும் ஒரு மண் வாசம் நிறைந்த சிற்றூர் எங்க ஊர் ...அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் 
உகந்த நாயகன் குடிக்காடு...
எனது சிறு வயதில் எனது ஊரை ரசிக்க மறந்தேன் ... இப்போ நிறைய ஏங்கி கொண்டிருக்கிறேன்.. எல்லையற்ற எனது கிராம வாழ்வின் தாக்கம் இன்றைய நகர கட்டுப்பாடு வாழக்கையில் நிறையவே ஏங்க வைக்கின்றது ...

எங்க ஊரை பற்றி ஒற்றை வரியில் கூறவேண்டுமெனில் மண்ணை நேசிக்கும் மக்கள் வாழும் பூமி ..(கடந்த ஐந்தாறு வருடங்களாக நிலை வேறு மாதிரி செல்கிறது) 

விவசாயம் சார்ந்த மக்கள் அதில் ஏற்படும் நட்டத்தை ஈடு செய்ய அந்நிய நாடு நோக்கிய பயணம் அதிகமானதாலும், மேல் படிப்பு படித்த இளசுகள் அவர்களுக்கு ஏற்ற வேலை வாய்ப்பு இல்லா காரணத்தாலும் கூட்டை விட்டு சிறிது சிறிதாக வெளியேறி விட்டார்கள் .. இரைதேடி நகரம் நோக்கி சிறகடித்த பறவைகளுள் நானும் ஒருவன் ... இப்போ நான் காணும் எனது ஊருக்கும் பத்து வருடங்கள் நான் கண்ட ஊருக்கும் நிறையவே வித்தியாசமும் , முரண்பாடும் இருக்க செய்கிறது .. நாகரிக வளர்ச்சி கூட என்று பெயரிட்டு கொள்ளலாம் ...

படிப்பறிவு குறைந்த ஊர் என்ற பெயரை இன்றைய தலைமுறைகள் மாற்றி காட்டி வருகின்றனர் .. கடந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வில் எம் மண்ணின் மைந்தர்கள் நிறையவே நல்ல மதிப்பெண் எடுத்து சாதித்து காட்டி இருக்கின்றார்கள் என்பது இதற்க்கு சான்று ... 

அடுத்து நான் மிகவும் ரசிப்பது எனது ஊரின் திருவிழாக்களை ... ஊரே சேர்ந்து ஒற்றை இடத்தில் கூடி சாமி தரிசனம் செய்து பிரசாதங்களை பகிர்ந்து கொண்டு அன்பை நிலை நாட்டும் ஒரு உன்னத திருவிழா .. 

ஊரில் நல்லதோ , கெட்ட நிகழ்வோ உடனே அனைவரும் ஒன்று கூடி தன் வீட்டு நிகழ்வாக கருதி வேலைகளை பங்கிட்டு சுமைகளை கொஞ்சம் இறக்கி வைக்க முனைவர்... அங்கே தெரியும் அவர்களின் நேசம் ...


இதுவரையிலும் சிறு வயதில் ஒன்றாக விளையாடிய நட்புகளை பண்டிகை என்ற ஒற்றை நூலிழை இணைத்து வைக்கின்றது. ஒவ்வொரு பொங்கலோ, அல்லது தீப ஒளி திருநாளோ அன்றுதான் அனைத்து பறவைகளும் தாய் கூட்டை தேடி ஓடி வரும் சூழ்நிலைக்கு தள்ள பட்டிருக்கின்றோம்...(உள்நாட்டில் வசிக்கும் சிலர் பணியின் நிமித்தம் காரணமாய் வராமல் கூட போவர். வெளிநாட்டில் இருப்பவர்களின் நிலையை கூற வார்த்தைகளே இல்லை ...)


இன்னும் நிறைய பகிந்து கொள்ள நிறைய விடயங்கள் இருந்தும் பதிவின் நீளம் கருதி இத்துடன் விடை பெற்று கொள்கிறேன் ...

இறுதியாக என்னையும் பதிவுலகத்துக்கு அறிமுகம் செய்து நிறைகளை நிறைய பாராட்டி, குறைகளை கொஞ்சமாய் கூறி, அன்பு பாராட்டி வரும் எம் மண்ணின் மைந்தர் அன்புடன் நான் வலைப்பூ திரு . சி . கருணாகரசு அவர்களுக்கு இந்த நேரத்தில் என் நெஞ்சார்ந்த நன்றிகளை கூறிக்கொள்ள கடமை கொண்டுள்ளேன் ...

என்னை தொடர் பதிவுக்கு அழைத்த ஏஞ்சலின் http://kaagidhapookal.blogspot.com/
அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ...




Post Comment

ஜூன் 23, 2011

ஆசையாய்...





ஆலங்கட்டி மழைக் 
கட்டிகளை ஆசையாய் 
அள்ளும் சிறுவனாய்!

வீதியில் அவள் 
சிந்திப்போகும் அழகை 
சேகரித்து கொள்கிறேன்!







எதிர் வீட்டு குழந்தைகள் 
கொடுத்த பலூனில் 
காற்றையும்,

நான் கொடுத்த 
பலூனில் காதலையும்
நிரப்பி கொடுக்கும் 

அவனை என்னவென்று 
- சொல்வது...


Post Comment

ஜூன் 15, 2011

எனது கிராமத்தின் அழகை இரசிக்க வாருங்களேன் - 3

மாலைநேரத்து மயக்கம் 

கள்ளிக்குள் மலர்...

வம்பரம் மலர்...

குண்டு மணி...

இது மலரா? காயா?

எருக்கம் மலர்...

இலைகளின் எச்சிலோ?

மழைக்கிண்ணம்...

வேலம்பூ...

ஒரு வகை காட்டு மலர்...

(இவை அனைத்தும் எனது ஊரில் என்னால் எடுக்கப்பட்டவை ... படத்தின் மேல் சுட்டினால் பெரியதாக தெரியும்)


சென்ற வாரம் என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திய http://echumi.blogspot.com/ லக்ஷ்மி அம்மா அவர்களுக்கு நன்றி...

Post Comment

ஜூன் 07, 2011

எங்க ஊரின் வெற்றி பிள்ளைகள் ...

எங்கள் கிராமத்தில் படிப்பின் பெருமையை அறிந்திடாத மக்கள் அதிகம் இருந்தனர் இன்னும் இருக்கின்றனர். அவர்களும் படித்ததில்லை, பிள்ளைகளை படிக்க வைப்பதிலும்  ஆர்வம் காட்டுவதில்லை. பிள்ளைகளும் ஆர்வமாய் படிப்பதில்லை.


பொது தேர்வு வரை செல்லாத மாணவர்கள்தான் அதிகம். இடையிடையே படிப்பை நிறுத்தி விட்டு வேலைக்கு செல்வதே வழக்காமாய் இருந்து வந்தது.மூன்று, நான்கு வருடங்களுக்கு முன்னர் படிப்பவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு.இப்பொழுது தான் படிப்பின் அருமை தெரிய  ஆரம்பிதிருக்கின்றது. வெளியே நடைபெறும் நிகழ்வுகளை கவனிக்க ஆரம்பித்து இருக்கின்றார்கள் என்றுதான் எண்ண தோன்றுகிறது. 


இருள் சூழ்ந்த நிலையில் இவர்கள் தான் சிறு சிறு நட்சத்திரங்களாக மின்ன ஆரம்பித்து இருக்கின்றார்கள், இனி கவலை இல்லை வரும் தலைமுறைகளுக்கும் இவர்கள் ஒரு உந்து சக்தியாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.


கடந்த பத்தாம் வகுப்பு அரசுப் பொது தேர்வில் இதுவரை கிடைத்திடாத ஒரு பெரும் வெற்றியை எங்கள் ஊரில் பிள்ளைகள் பெற்று பெற்றவர்களுக்கும், பிறந்த மண்ணுக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்கள்.இதை கூறுவதற்கு என்ன காரணம் என்றால் ஒரு சில மாணவர்களை தவிர மற்ற அனைத்து மாணவர்களும் ஒரு சிறிய அரசு பள்ளியிலே பயின்று வென்றவர்கள்.மற்ற பள்ளிகளை போல் சிறப்பு பயிற்சிமுறை இல்லை, அதிக சிறப்பு வகுப்புகள் இல்லை.. இந்த சூழ்நிலையில் தான் இவர்கள் சாதித்து காட்டியிருக்கிறார்கள். கடின உழைப்பை கொண்டு சாதித்து காட்டிய எம் மண்ணின் மைந்தர்களை நட்புக்களாகிய நீங்களும் வாழ்த்துங்கள்.....





    1 ) தி. தமிழ் அருவி - 464 
கணிதத்தில் நூறு மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றிக்கிறார்.

2 ) மே. மணியரசி - 446

3 ) த. சுபலட்சுமி - 424 

4 ) ரா. பூவரசி - 418 

5 ) சு. நீலமணிவண்ணன் - 413 

6 ) சா. பாக்கியராசு - 397 

7 ) மா. தமிழ் நிலா - 335 

8 ) கொ. பாலமுருகன் - 296

9 ) நா. இளையராசா - 264

10 ) வீ. திருமுருகன் - 253

11 ) கோ. செல்வகுமார் - 233  


12 ) தி. பாலமுருகன் - 207




Post Comment