புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜூன் 30, 2011

எங்க ஊர் ...



மழைத்துளியின் வாசனை நாசியை அடையும் முன் மண் வாசனை நுரையீரலின் பக்கங்களை தொட்டுதழுவும் ஒரு மண் வாசம் நிறைந்த சிற்றூர் எங்க ஊர் ...அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் 
உகந்த நாயகன் குடிக்காடு...
எனது சிறு வயதில் எனது ஊரை ரசிக்க மறந்தேன் ... இப்போ நிறைய ஏங்கி கொண்டிருக்கிறேன்.. எல்லையற்ற எனது கிராம வாழ்வின் தாக்கம் இன்றைய நகர கட்டுப்பாடு வாழக்கையில் நிறையவே ஏங்க வைக்கின்றது ...

எங்க ஊரை பற்றி ஒற்றை வரியில் கூறவேண்டுமெனில் மண்ணை நேசிக்கும் மக்கள் வாழும் பூமி ..(கடந்த ஐந்தாறு வருடங்களாக நிலை வேறு மாதிரி செல்கிறது) 

விவசாயம் சார்ந்த மக்கள் அதில் ஏற்படும் நட்டத்தை ஈடு செய்ய அந்நிய நாடு நோக்கிய பயணம் அதிகமானதாலும், மேல் படிப்பு படித்த இளசுகள் அவர்களுக்கு ஏற்ற வேலை வாய்ப்பு இல்லா காரணத்தாலும் கூட்டை விட்டு சிறிது சிறிதாக வெளியேறி விட்டார்கள் .. இரைதேடி நகரம் நோக்கி சிறகடித்த பறவைகளுள் நானும் ஒருவன் ... இப்போ நான் காணும் எனது ஊருக்கும் பத்து வருடங்கள் நான் கண்ட ஊருக்கும் நிறையவே வித்தியாசமும் , முரண்பாடும் இருக்க செய்கிறது .. நாகரிக வளர்ச்சி கூட என்று பெயரிட்டு கொள்ளலாம் ...

படிப்பறிவு குறைந்த ஊர் என்ற பெயரை இன்றைய தலைமுறைகள் மாற்றி காட்டி வருகின்றனர் .. கடந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வில் எம் மண்ணின் மைந்தர்கள் நிறையவே நல்ல மதிப்பெண் எடுத்து சாதித்து காட்டி இருக்கின்றார்கள் என்பது இதற்க்கு சான்று ... 

அடுத்து நான் மிகவும் ரசிப்பது எனது ஊரின் திருவிழாக்களை ... ஊரே சேர்ந்து ஒற்றை இடத்தில் கூடி சாமி தரிசனம் செய்து பிரசாதங்களை பகிர்ந்து கொண்டு அன்பை நிலை நாட்டும் ஒரு உன்னத திருவிழா .. 

ஊரில் நல்லதோ , கெட்ட நிகழ்வோ உடனே அனைவரும் ஒன்று கூடி தன் வீட்டு நிகழ்வாக கருதி வேலைகளை பங்கிட்டு சுமைகளை கொஞ்சம் இறக்கி வைக்க முனைவர்... அங்கே தெரியும் அவர்களின் நேசம் ...


இதுவரையிலும் சிறு வயதில் ஒன்றாக விளையாடிய நட்புகளை பண்டிகை என்ற ஒற்றை நூலிழை இணைத்து வைக்கின்றது. ஒவ்வொரு பொங்கலோ, அல்லது தீப ஒளி திருநாளோ அன்றுதான் அனைத்து பறவைகளும் தாய் கூட்டை தேடி ஓடி வரும் சூழ்நிலைக்கு தள்ள பட்டிருக்கின்றோம்...(உள்நாட்டில் வசிக்கும் சிலர் பணியின் நிமித்தம் காரணமாய் வராமல் கூட போவர். வெளிநாட்டில் இருப்பவர்களின் நிலையை கூற வார்த்தைகளே இல்லை ...)


இன்னும் நிறைய பகிந்து கொள்ள நிறைய விடயங்கள் இருந்தும் பதிவின் நீளம் கருதி இத்துடன் விடை பெற்று கொள்கிறேன் ...

இறுதியாக என்னையும் பதிவுலகத்துக்கு அறிமுகம் செய்து நிறைகளை நிறைய பாராட்டி, குறைகளை கொஞ்சமாய் கூறி, அன்பு பாராட்டி வரும் எம் மண்ணின் மைந்தர் அன்புடன் நான் வலைப்பூ திரு . சி . கருணாகரசு அவர்களுக்கு இந்த நேரத்தில் என் நெஞ்சார்ந்த நன்றிகளை கூறிக்கொள்ள கடமை கொண்டுள்ளேன் ...

என்னை தொடர் பதிவுக்கு அழைத்த ஏஞ்சலின் http://kaagidhapookal.blogspot.com/
அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ...




Post Comment

36 கருத்துரைகள்..:

athira சொன்னது…

அரசன்.... உங்கட ஊரை அழகாகச் சொல்லிட்டீங்க... கொஞ்சம் படங்களையிம் எமக்காக இணைத்திருக்கலாமே...

//இதுவரையிலும் சிறு வயதில் ஒன்றாக விளையாடிய நட்புகளை பண்டிகை என்ற ஒற்றை நூலிழை இணைத்து வைக்கின்றது//

உண்மையே.

மாணவன் சொன்னது…

வணக்கம்ணே,

நமது கிராமத்தின் நிகழ்வுகளை அழகாக பகிர்ந்துகொண்டுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

மாணவன் சொன்னது…

//இதுவரையிலும் சிறு வயதில் ஒன்றாக விளையாடிய நட்புகளை பண்டிகை என்ற ஒற்றை நூலிழை இணைத்து வைக்கின்றது. ஒவ்வொரு பொங்கலோ, அல்லது தீப ஒளி திருநாளோ அன்றுதான் அனைத்து பறவைகளும் தாய் கூட்டை தேடி ஓடி வரும் சூழ்நிலைக்கு தள்ள பட்டிருக்கின்றோம்...(உள்நாட்டில் வசிக்கும் சிலர் பணியின் நிமித்தம் காரணமாய் வராமல் கூட போவர். வெளிநாட்டில் இருப்பவர்களின் நிலையை கூற வார்த்தைகளே இல்லை ...)//

உண்மைதாண்ணே, நானே இங்கு (சிங்கை)வந்த நான்கு ஆண்டுகளில் நிறைய உணர்ந்திருக்கிறேன் அதுவும் எனது சொந்த தங்கையின் திருமணத்திற்கு வரமுடியாமல் போன வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு. :(

மாணவன் சொன்னது…

உங்களின் இந்த பதிவின் மூலம் நமது கிராமத்தின் நினைவுகளை அசைபோட உதவிய உங்களுக்கு மீண்டும் எனது வாழ்த்துக்களும் நன்றிகளும் பல...

Unknown சொன்னது…

அருமை அரசன்! அழகாக இருக்கிறது அந்தப்படம்! இன்னும் படங்கள் போட்டிருக்கலாம்!

சக்தி கல்வி மையம் சொன்னது…

good post..

Angel சொன்னது…

//எனது சிறு வயதில் எனது ஊரை ரசிக்க மறந்தேன் ... இப்போ நிறைய ஏங்கி கொண்டிருக்கிறேன்..//இது நம்ம எல்லாருக்கும் பொருந்தும் அரசன் .அப்ப சந்தோஷமா அனுபவிக்கல.இப்ப திரும்ப அந்த நாட்கள் வராதான்னு இருக்கு .
எனது அழைப்பை ஏற்று அழகாக எழுதியமைக்கு நன்றி .முதல் வரியே அட்டகாசம் உங்க ஊர் எவ்ளவு அழகுன்னு சொல்லுது .

அன்புடன் நான் சொன்னது…

வெளிநாட்டில் இருந்தாலும்.... நான் கூடு கட்டியிருப்பது நம்ம மண்ணில்தான்.... அங்குதான் நிகழ்ந்தது என் பிறப்பு.... அங்குதான் நிகழனும் என் இறப்பு.....

பகிர்வு அசத்தல்.

அன்புடன் நான் சொன்னது…

இறுதியாக என்னையும் பதிவுலகத்துக்கு அறிமுகம் செய்து நிறைகளை நிறைய பாராட்டி, குறைகளை கொஞ்சமாய் கூறி, அன்பு பாராட்டி வரும் எம் மண்ணின் மைந்தர் அன்புடன் நான் வலைப்பூ திரு . சி . கருணாகரசு அவர்களுக்கு இந்த நேரத்தில் என் நெஞ்சார்ந்த நன்றிகளை கூறிக்கொள்ள கடமை கொண்டுள்ளேன் ...//

உங்க திறமையை உணர்ந்தேன்.... அதற்கான களம் இருப்பதை சொன்னேன்.... மற்றப்படி... உங்களின் உயர்வுக்கு உங்க படைப்பே காரணம்.

ஒரு சின்ன கிராமத்தில் என் மண்ணுக்கு “சொந்த”க்காரனே பதிவுலகில் இருப்பது ஒன்றே என் மகிழ்ச்சி... பெருமிதம்.

r.v.saravanan சொன்னது…

உங்கள் மண்ணை பற்றி மன்னிக்கவும் நம் மண்ணை பற்றி சொன்னதற்கு நன்றி வாழ்த்துக்கள் எல்லோரும் சொல்வது போல் படங்கள் சில வெளியிட்டிருக்கலாம்

thendralsaravanan சொன்னது…

மண்ணின் மைந்தா,தம்பி, உங்கள் கிராமத்தின் வாசனையை நகரத்தாரும் நுகரும் வண்ணம் அழகாக எழுதியுள்ளீர்கள்... நல்ல மாற்றம் கிராமத்தில் வந்தால் சந்தோசம்தானே ...இன்னும் நிறைய படங்களை வெளியிடுங்கள்!

ஹேமா சொன்னது…

கொடுத்து வைத்தவர் நீங்கள் அரசன்.அழகான கிராமம்.இயற்கைப் பூக்களின் வாசனையோடு பதிவு அசத்துகிறது !

ரிஷபன் சொன்னது…

சொந்த மண் எப்போதுமே ஈர்க்கும்தான். தாய் மடி போல

vidivelli சொன்னது…

nalla pathivu.......
arumaiyaana ,,,,,,,,,,,,,kiraamam,,,,,,,,
valththukkal



namma pakkam
இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.........neenkalum paarunka

arasan சொன்னது…

athira சொன்னது…
அரசன்.... உங்கட ஊரை அழகாகச் சொல்லிட்டீங்க... கொஞ்சம் படங்களையிம் எமக்காக இணைத்திருக்கலாமே...

//இதுவரையிலும் சிறு வயதில் ஒன்றாக விளையாடிய நட்புகளை பண்டிகை என்ற ஒற்றை நூலிழை இணைத்து வைக்கின்றது//

உண்மையே.//

அன்பு வாழ்த்துகளுக்கு நன்றிங்க அக்கா..
இனிமேல் படங்களையும் இணைத்து கொள்ள முயல்கிறேன்

arasan சொன்னது…

மாணவன் சொன்னது…
வணக்கம்ணே,

நமது கிராமத்தின் நிகழ்வுகளை அழகாக பகிர்ந்துகொண்டுள்ளீர்கள் வாழ்த்துக்கள்//

வணக்கம் அண்ணே...
நன்றிங்க அண்ணே

arasan சொன்னது…

மாணவன் சொன்னது…
//இதுவரையிலும் சிறு வயதில் ஒன்றாக விளையாடிய நட்புகளை பண்டிகை என்ற ஒற்றை நூலிழை இணைத்து வைக்கின்றது. ஒவ்வொரு பொங்கலோ, அல்லது தீப ஒளி திருநாளோ அன்றுதான் அனைத்து பறவைகளும் தாய் கூட்டை தேடி ஓடி வரும் சூழ்நிலைக்கு தள்ள பட்டிருக்கின்றோம்...(உள்நாட்டில் வசிக்கும் சிலர் பணியின் நிமித்தம் காரணமாய் வராமல் கூட போவர். வெளிநாட்டில் இருப்பவர்களின் நிலையை கூற வார்த்தைகளே இல்லை ...)//

உண்மைதாண்ணே, நானே இங்கு (சிங்கை)வந்த நான்கு ஆண்டுகளில் நிறைய உணர்ந்திருக்கிறேன் அதுவும் எனது சொந்த தங்கையின் திருமணத்திற்கு வரமுடியாமல் போன வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு. :(//


நிச்சயம் அந்த வலிகளை வார்த்தைகளில் கூறிட இயலா..
அண்ணே எல்லாம் நம்மோட பொருளாதாரமும் ஒரு காரணம் அண்ணே...
இனிமைகளை விட இழப்புகள்தான் அண்ணே அதிகம் ...

arasan சொன்னது…

மாணவன் சொன்னது…
உங்களின் இந்த பதிவின் மூலம் நமது கிராமத்தின் நினைவுகளை அசைபோட உதவிய உங்களுக்கு மீண்டும் எனது வாழ்த்துக்களும் நன்றிகளும் பல...//

அன்புக்கு நன்றிங்க அண்ணே,..
நமது மண்ணின் நிகழ்வுகளை கூறுவதில்
எப்போதும் ஒரு ஈர்ப்பு உள்ளது அண்ணே..

arasan சொன்னது…

ஜீ... சொன்னது…
அருமை அரசன்! அழகாக இருக்கிறது அந்தப்படம்! இன்னும் படங்கள் போட்டிருக்கலாம்!//

மீண்டும் பதிவிடும் பொது இணைக்கிறேன் சார்,,,
அன்புக்கு நன்றிங்க சார்

arasan சொன்னது…

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…
good post..//

thank you boss

arasan சொன்னது…

angelin சொன்னது…
//எனது சிறு வயதில் எனது ஊரை ரசிக்க மறந்தேன் ... இப்போ நிறைய ஏங்கி கொண்டிருக்கிறேன்..//இது நம்ம எல்லாருக்கும் பொருந்தும் அரசன் .அப்ப சந்தோஷமா அனுபவிக்கல.இப்ப திரும்ப அந்த நாட்கள் வராதான்னு இருக்கு .
எனது அழைப்பை ஏற்று அழகாக எழுதியமைக்கு நன்றி .முதல் வரியே அட்டகாசம் உங்க ஊர் எவ்ளவு அழகுன்னு சொல்லுது .//

நான் தான் மேடம் தங்களுக்கு நன்றி கூறனும்..
மீண்டும் அந்த பசுமையான நிகழ்வுகள் கிடைக்காது மேடம் ..

arasan சொன்னது…

சி.கருணாகரசு சொன்னது…
வெளிநாட்டில் இருந்தாலும்.... நான் கூடு கட்டியிருப்பது நம்ம மண்ணில்தான்.... அங்குதான் நிகழ்ந்தது என் பிறப்பு.... அங்குதான் நிகழனும் என் இறப்பு.....

பகிர்வு அசத்தல்.//


உண்மைதான் மாமா..
உங்களைப்போல் சிலர்தான் இருக்கின்றார்கள் ...
நிறைய மனிதர்கள் கூட்டை கலைத்து விட்டு நகரத்தில் வாழ முயலுகிறார்கள் அது நரகம் என்று தெரியாமல்,..

arasan சொன்னது…

சி.கருணாகரசு சொன்னது…
இறுதியாக என்னையும் பதிவுலகத்துக்கு அறிமுகம் செய்து நிறைகளை நிறைய பாராட்டி, குறைகளை கொஞ்சமாய் கூறி, அன்பு பாராட்டி வரும் எம் மண்ணின் மைந்தர் அன்புடன் நான் வலைப்பூ திரு . சி . கருணாகரசு அவர்களுக்கு இந்த நேரத்தில் என் நெஞ்சார்ந்த நன்றிகளை கூறிக்கொள்ள கடமை கொண்டுள்ளேன் ...//

உங்க திறமையை உணர்ந்தேன்.... அதற்கான களம் இருப்பதை சொன்னேன்.... மற்றப்படி... உங்களின் உயர்வுக்கு உங்க படைப்பே காரணம்.

ஒரு சின்ன கிராமத்தில் என் மண்ணுக்கு “சொந்த”க்காரனே பதிவுலகில் இருப்பது ஒன்றே என் மகிழ்ச்சி... பெருமிதம்.//

நிறைவான மனம் திறந்த வாழ்த்துகளுக்கும் , ஊக்கத்திற்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள் மாமா...

arasan சொன்னது…

r.v.saravanan சொன்னது…
உங்கள் மண்ணை பற்றி மன்னிக்கவும் நம் மண்ணை பற்றி சொன்னதற்கு நன்றி வாழ்த்துக்கள் எல்லோரும் சொல்வது போல் படங்கள் சில வெளியிட்டிருக்கலாம்//

நம் மண்ணை மறப்பது அவ்வளவு எளிதான காரியமா சார்...
நிச்சயம் ஒரு நாள் பதிவிடுகிறேன் சார்..
அன்புக்கு நன்றிங்க சார்

arasan சொன்னது…

thendralsaravanan சொன்னது…
மண்ணின் மைந்தா,தம்பி, உங்கள் கிராமத்தின் வாசனையை நகரத்தாரும் நுகரும் வண்ணம் அழகாக எழுதியுள்ளீர்கள்... நல்ல மாற்றம் கிராமத்தில் வந்தால் சந்தோசம்தானே ...இன்னும் நிறைய படங்களை வெளியிடுங்கள்!//


அன்பு வாழ்த்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் அக்கா...
நிச்சயம் படங்களை விரைவில் பகிர்ந்து கொள்கிறேன் ..

arasan சொன்னது…

ஹேமா சொன்னது…
கொடுத்து வைத்தவர் நீங்கள் அரசன்.அழகான கிராமம்.இயற்கைப் பூக்களின் வாசனையோடு பதிவு அசத்துகிறது !//

ஆம் அக்கா..
ஆனால் அதன் எழிலை அருகில் இருந்து ரசிக்க தான் இயலவில்லை ..
விருந்தாளியாக சென்றுவிட்டு வந்து கொண்டிருக்கிறேன் ...
அன்புக்கு நன்றிங்க அக்கா

arasan சொன்னது…

ரிஷபன் சொன்னது…
சொந்த மண் எப்போதுமே ஈர்க்கும்தான். தாய் மடி போல//

சரியாக சொன்னிங்க நண்பரே...
அன்புக்கு நன்றிங்க

arasan சொன்னது…

vidivelli சொன்னது…
nalla pathivu.......
arumaiyaana ,,,,,,,,,,,,,kiraamam,,,,,,,,
valththukkal



namma pakkam
இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.........neenkalum paarunka//

அன்புக்கு நன்றிங்க மேடம் ..
நிச்சயம் பார்கிறேன் ..

vimalanperali சொன்னது…

சொந்த ஊரின் இனிப்பு தட்டி விடுகிற பொழுதுகள் வாழ்க்கையில் ரம்மியமானதும்,இன்பமானதும் கூட.ரம்யங்களை சுமக்கும் மனது இன்பங்களையும் இறக்கி வைக்க உங்களது எழுத்து உதவியிருக்கிறது,நன்றாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…

சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊர போல வருமா... அழகாக சொந்த ஊரைப்பற்றி எழுதியுள்ளீர்கள்... வாழ்த்துகள் தம்பி..

arasan சொன்னது…

விமலன் சொன்னது…
சொந்த ஊரின் இனிப்பு தட்டி விடுகிற பொழுதுகள் வாழ்க்கையில் ரம்மியமானதும்,இன்பமானதும் கூட.ரம்யங்களை சுமக்கும் மனது இன்பங்களையும் இறக்கி வைக்க உங்களது எழுத்து உதவியிருக்கிறது,நன்றாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.//


அன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க சார் /./

arasan சொன்னது…

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…
சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊர போல வருமா... அழகாக சொந்த ஊரைப்பற்றி எழுதியுள்ளீர்கள்... வாழ்த்துகள் தம்பி..//


அன்புக்கு நன்றிங்க அண்ணே /.

பெயரில்லா சொன்னது…

""மண்ணை நேசிக்கும் மக்கள் வாழும் பூமி ..(கடந்த ஐந்தாறு வருடங்களாக நிலை வேறு மாதிரி செல்கிறது)""

- கிராமத்திற்கே உரிய பண்பு..

""தன் வீட்டு நிகழ்வாக கருதி வேலைகளை பங்கிட்டு சுமைகளை கொஞ்சம் இறக்கி வைக்க முனைவர்... அங்கே தெரியும் அவர்களின் நேசம் ...""


-கிராமத்திற்கே உரிய பாசம் ...

தீப ஒளி திருநாளோ அன்றுதான் அனைத்து பறவைகளும் தாய் கூட்டை தேடி ஓடி வரும் சூழ்நிலைக்கு தள்ள பட்டிருக்கின்றோம்...

-வாழ்க்கைவில் தேவைகளை
அடைய பல அறிய விஷயங்களை
இழக்கவேண்டிஉள்ளது.....

பெயரில்லா சொன்னது…

வணக்கம்

20,012013இன்று உங்களின் படைப்பு வலைச்சரம் வலைப்பூவில் அறிமுகமானது பாராட்டுக்கள் அருமையான பதிவு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கோமதி அரசு சொன்னது…

""மண்ணை நேசிக்கும் மக்கள் வாழும் பூமி ..(கடந்த ஐந்தாறு வருடங்களாக நிலை வேறு மாதிரி செல்கிறது)"//

விஞ்ஞானம் வளர்ந்ததால் கிராமங்களில் நிறைய மாற்றங்கள் வந்து விட்டன.
உங்கள் ஊர் பார்வை அற்புதம்.
உங்கள் இந்த பதிவு இன்றைய வலைச்சரத்தில் பகிர்ந்த மனோ அவர்களுக்கு நன்றி. எங்கள் நல்ல பதிவை படிக்க முடிந்தது. சி.கருணாகரசு அவர்கள் நல்ல கவிதைகள் எழுதுவார்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இனிய கிராமத்து நினைவுகள். சொர்க்கமே என்றாலும் நம் ஊரப் போல வருமா....

வலைச்சரம் மூலம் வந்தென். இனித் தொடர்ந்து வருவேன்....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.