நம்மில் பலர் தொடர்ந்து வலைப்பூவில் எழுதி வந்தாலும், வெகு சிலரே அதை தொகுத்து புத்தகமாக்குகின்றனர், அந்த வரிசையில் நமது சக பதிவர், என் மனதிற்கினிய அண்ணன் மனவிழி சத்ரியன் அவர்கள் தனது கவிதைகளை தொகுத்து "கண்கொத்திப் பறவை" என்கிற பெயரில் முதல் தொகுப்பாக வெளியிட்டுள்ளார். அவ்வப்போது ஒன்றிரண்டு கவிதைகளை வலைத்தளத்தில் வாசித்தாலும் மொத்தமாய் ஒரு புத்தகமாய் படிக்கும் சுகமும், சுவையும் தனிதான்.
நடுநிசியில் மனம் மயக்கும் மெல்லிசை போல், உள்ளம் நிறைக்கும் காதல் ராகம் இதில் நிறைய பாடியிருந்தாலும், கூடவே சமூகம் பற்றிய தன் கோபங்களை 'வரி'ச் சாட்டைக்கொண்டு சுழற்றி இருக்கிறார். எளிய தமிழில் புதுக்கண்ணோட்டத்தில் புனையப் பட்ட மென்மை கவிதைகள் மனதை வசீகரிக்கின்றன. இந்த புத்தகத்தை சிறப்பாக வடிவமைத்திருப்பவர் நம் நண்பர் மின்னல்வரிகள் திரு. பால கணேஷ் அவர்கள். புலவர். ராமானுசம் அய்யா அணிந்துரை வழங்கி புத்தகத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்துள்ளார்.
புத்தகத்தை வாங்கி வாசித்து கவிஞரின் முயற்சிக்கு ஊக்கம் அளியுங்கள் தோழமைகளே!
புத்தகம் கிடைக்குமிடம்:-
Discovery Book Palace Pvt Ltd.,
K. K. Nagar, Chennai - 600 078. (near Pondichery Guset House)
Ph: 044 - 6515 7525 www. discoverybookpalace.com
ஆன்லைனில் வாங்க இங்கு கிளிக்கவும்
புத்தகம் கிடைக்குமிடம்:-
Discovery Book Palace Pvt Ltd.,
K. K. Nagar, Chennai - 600 078. (near Pondichery Guset House)
Ph: 044 - 6515 7525 www. discoverybookpalace.com
ஆன்லைனில் வாங்க இங்கு கிளிக்கவும்
Tweet |