புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

நவம்பர் 10, 2012

அனைவரும் சக மனிதர்களே! (உண்மை சம்பவம்)

சில மாதங்களுக்கு முன் நடந்த நிகழ்வு! அலுவலக வேலை நிமித்தமாக சில தகவல்களை நகல் எடுக்க வேண்டி இருந்தமையால் தகவல் தாட்களை ஓர் நகலத்தில் கொடுத்துவிட்டு, அருகில் கிடந்த தினசரியை புரட்டி கொண்டிருந்தேன், பின்னர் வந்த இரண்டு நண்பர்கள் காத்திருந்தார்கள் அவர்களும் நகல் எடுக்க வந்தவர்களாக இருக்க கூடும்! சிறிது நேரம் கழித்து வந்த இருவரில் ஒருவர்  இன்னொருவரிடம் கூறினார் அங்க பாரு மச்சான் ஒருத்தன் இந்த கம்மங்கஞ்சிய இப்படி குடிக்கிறானே, இவன் சத்தியமா பஞ்சத்தில் அடிபட்டவனாகத்தான் இருக்கும்.


அதற்கு இன்னொருவர் பதில், மச்சி அவன் தோற்றத்தை பார்த்தியா சத்தியமா இவன் ஒரு காட்டுபுறத்தான்  தான் அதான் இந்த வாங்கு வாங்குறான்! இப்படி தொடர்ந்தது அந்த நாகரிக? நண்பர்களின் உரையாடல்! என் வேலை முடிந்து நான் திரும்புகையில் நகலகத்தை சற்று தள்ளி வயதான பெண்மணி ஒருவர் தள்ளுவண்டியில் இரண்டு மண் பானையில் கம்மங்கூழ் விற்பனை செய்து கொண்டிருந்தார்! இருபதை கடந்த வாலிபர் ஒருவர் கூழ் குடித்துக்கொண்டிருந்தார், இவரை பற்றித்தான் அந்த இரு நவயுக கண்மணிகளும் உரையாடி களிப்புற்றது போலும்! அந்த வாலிபரும் பார்க்க கிராமத்திலிருந்து வந்தவர் போல் தான் காட்சி தந்தார், கசங்கிய உடை, எண்ணெய் தடவிய கேசம்! 

இந்த உலகத்தின் கரடு முரடுகளை பாருங்கள், ஒருவரின் செய்கையை கிண்டல் செய்து அதில் சுகம் காண்பது எவ்வளவு கீழ்த்தரமான செயல்! பாவம் அவரிடம் பண பற்றாக்குறையாக இருக்கலாம், இல்லை அவர் விரும்பி அந்த உணவை அவர் உண்டிருக்கலாம், அதை இவ்வாறு கேளிபண்ணும் அந்த நவீன தோழர்களுக்கு எப்படி தெரியும் அந்த உணவு தான் உயிரை வளர்க்குமென்று!  அரை வேக்காட்டு உணவுகளை குளிர் அறையில் அமர்ந்து குதூகலாமாய் உண்பது சுகம் தான், வசதியை வெளிக்காட்டி நெஞ்சை நிமிர்த்தலாம், பாவம் அந்த உணவுகளில் ஆரோக்கியம் துளியும் இல்லை என்பதை எப்படி சொன்னாலும் ஏற்காது அந்த அரைவேக்காடு மனசுகள்! 

இந்த கம்பங்கஞ்சியை குடித்து தான் அவர்களின் முன்னோர் இல்லை முன்னோர்களின் முன்னோர் என்பது, தொண்ணூறு வரை உயிரோடு இருந்திருப்பர், இன்று காலம் மாறியதும் காட்சிகளும் மாறுகிறது, விருப்பம் இல்லையெனில் உதாசீன படுத்த வேண்டாமே! உன் விருப்பம் ஒன்றாக இருப்பின் இன்னொருவரின் விருப்பம் இன்னொன்றாக இருக்கும்! பணத்தை கொண்டு மனிதனை எடை போடாதிர்கள், மனத்தால் எடை போடுங்கள்! 

அவரும் சக மனித பிறப்பே! உங்களிடம் இருக்கும் பணம் அவரிடம் இல்லையென்பதால் மனித பிறப்பின்றி போகுமா? அந்த நிகழ்வு தான் என் தயக்கத்தை உடைத்தெறிந்தது! விருப்பம் இருந்தும் சில விடயங்களை இந்த மானங்கெட் "அடுத்தவன் கேலி பண்ணுவான் என்று செய்யாமல் நகர்ந்து கொண்டிருந்த நான் அதன் பிறகு என் விருப்பம் இதில் அடுத்தவர்கள் என்ன நினைத்தால் என்ன? நினைக்காமல் போனால் என்ன? என்று துணிந்து செய்து வருகிறேன்"   

முடிந்தவரை சக மனிதனை மதிப்போம், முடியவில்லையெனில் மிதிக்காமல் இருப்போம்!

Post Comment

30 கருத்துரைகள்..:

தினபதிவு சொன்னது…

மிக அருமையான பதிவு
வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
உங்கள் வரவை விரும்புகிறது.

தினபதிவு திரட்டி

சீனு சொன்னது…

எங்கே பிறர் தப்பாக நினைப்பார்களோ என்று நான் செய்யமால் விட்ட காரியங்கள் பல உண்டு, ஆனால் இப்போதெலாம் அப்படி இருப்பது கிடையாது சரி என்று தோன்றினால் நிச்சயம் செய்து விடுவேன்.... சக மனிதரையும் நிச்சயம் மனிதராகப் பார்க்க வேண்டும் என்பது உண்மை ராசா அவர்களே

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சக மனிதரை மதிக்காதவன் மனிதனே இல்லை...

நன்றி...
tm3

பால கணேஷ் சொன்னது…

நல்ல கருத்தைப் பகிர்ந்தீர்கள் அரசன். மனிதனை மனிதத்துக்காக மதிக்காமல் தோற்றத்தை வைத்தோ, பணத்தை வைத்தோ எடை போடுபவர்களை மதிக்கத் தேவையில்லை. அவரவர் இயல்புக்கேற்பவே உணவு மற்ற பழக்க வழக்கங்கள் எல்லாம். நாகரீகம் என்ற பெயரில் நடந்து கொள்ளும் இத்தகைய இளைஞர்களுக்கு பின்னாளில் வாழ்க்கை வலிக்க வலிக்க பாடம் கற்றுத் தரும்.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

கண்டிக்கத்தக்கது இந்த கேலி! ஒருவர் கம்மங்கஞ்சி குடிப்பதாலேயே நாட்டுபுறத்தான் ஆகி விட முடியுமா என்ன? என்றுதான் திருந்துவார்களோ இந்த மூடர்கள்!

ஆத்மா சொன்னது…

வெறும் கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ள
அட தங்கபஷ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ள
இந்த வாழ்கை வாழ தான்
நாம் பிறக்கையில் கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு
செல்ல?

அன்றே சொல்லிவிட்டார்கள்..
நல்ல பகிர்வு

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

மனித இன்னும் நாகரீகம் கெட்டே வாழ்கிறான்...

மனிதத்தில் என்றும் இல்லை மேல் கீழ் என்று...

அதைப்பார்ப்பவன்தான் ஒதுக்கப்படவேண்டியவன்..

ராஜி சொன்னது…

ஆளையும், வெளித்தோற்றத்தையும் , உணவையும் வைத்து மனிதனை எடை போடுவது என்றுதான் மாறுமோ?!

Unknown சொன்னது…

oru nalla bakirvu nanbare

சசிகலா சொன்னது…

முடிந்தவரை சக மனிதனை மதிப்போம், முடியவில்லையெனில் மிதிக்காமல் இருப்போம்!

உண்மை தான் சகோ.

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…

மனம் நிறைந்த இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்...

Avargal Unmaigal சொன்னது…

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
எல்லாம் கைகூடி வந்து
என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

பெயரில்லா சொன்னது…

அன்பு நண்பருக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

அருணா செல்வம் சொன்னது…

நல்ல பகிர்வு அரசன்.

arasan சொன்னது…

தினபதிவு கூறியது...
மிக அருமையான பதிவு
வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
உங்கள் வரவை விரும்புகிறது.
//

நன்றிங்க நேரம் இருக்கையில் வருகிறேன்

arasan சொன்னது…

சீனு கூறியது...
எங்கே பிறர் தப்பாக நினைப்பார்களோ என்று நான் செய்யமால் விட்ட காரியங்கள் பல உண்டு, ஆனால் இப்போதெலாம் அப்படி இருப்பது கிடையாது சரி என்று தோன்றினால் நிச்சயம் செய்து விடுவேன்.... சக மனிதரையும் நிச்சயம் மனிதராகப் பார்க்க வேண்டும் என்பது உண்மை ராசா அவர்களே//

நன்றி சீனு

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
சக மனிதரை மதிக்காதவன் மனிதனே இல்லை...

நன்றி...//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

பால கணேஷ் கூறியது...
நல்ல கருத்தைப் பகிர்ந்தீர்கள் அரசன். மனிதனை மனிதத்துக்காக மதிக்காமல் தோற்றத்தை வைத்தோ, பணத்தை வைத்தோ எடை போடுபவர்களை மதிக்கத் தேவையில்லை. அவரவர் இயல்புக்கேற்பவே உணவு மற்ற பழக்க வழக்கங்கள் எல்லாம். நாகரீகம் என்ற பெயரில் நடந்து கொள்ளும் இத்தகைய இளைஞர்களுக்கு பின்னாளில் வாழ்க்கை வலிக்க வலிக்க பாடம் கற்றுத் தரும்.//

உண்மைதான் சார்

arasan சொன்னது…

s suresh கூறியது...
கண்டிக்கத்தக்கது இந்த கேலி! ஒருவர் கம்மங்கஞ்சி குடிப்பதாலேயே நாட்டுபுறத்தான் ஆகி விட முடியுமா என்ன? என்றுதான் திருந்துவார்களோ இந்த மூடர்கள்!//

சிலர் இன்னும் இருக்கிறார்கள் போலும் சுரேஷ் சார் ..

arasan சொன்னது…

சிட்டுக்குருவி கூறியது...
வெறும் கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ள
அட தங்கபஷ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ள
இந்த வாழ்கை வாழ தான்
நாம் பிறக்கையில் கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு
செல்ல?

அன்றே சொல்லிவிட்டார்கள்..
நல்ல பகிர்வு//

நன்றிங்க சிட்டுக்குருவி

arasan சொன்னது…

கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
மனித இன்னும் நாகரீகம் கெட்டே வாழ்கிறான்...

மனிதத்தில் என்றும் இல்லை மேல் கீழ் என்று...

அதைப்பார்ப்பவன்தான் ஒதுக்கப்படவேண்டியவன்..//

உண்மைதான் அண்ணே

arasan சொன்னது…

ராஜி கூறியது...
ஆளையும், வெளித்தோற்றத்தையும் , உணவையும் வைத்து மனிதனை எடை போடுவது என்றுதான் மாறுமோ?!//

அது தொடர்வது பெரும் கொடுமை அக்கா

arasan சொன்னது…

jothivel vel கூறியது...
oru nalla bakirvu nanbare//

Thank u Mr. Jothivel

arasan சொன்னது…

Sasi Kala கூறியது...
முடிந்தவரை சக மனிதனை மதிப்போம், முடியவில்லையெனில் மிதிக்காமல் இருப்போம்!

உண்மை தான் சகோ.

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..//

கண்டிப்பாக அக்கா

arasan சொன்னது…

ரெவெரி கூறியது...
மனம் நிறைந்த இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்...//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

Avargal Unmaigal கூறியது...
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
எல்லாம் கைகூடி வந்து
என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்//

மிகுந்த நன்றிகள்

arasan சொன்னது…

ஆரூர் மூனா செந்தில் கூறியது...
அன்பு நண்பருக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.//

நன்றிங்க அண்ணே

arasan சொன்னது…

அருணா செல்வம் கூறியது...
நல்ல பகிர்வு அரசன்.//

நன்றிங்க மேடம்

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

இங்கு என்னுமொருதர் சைவம் சாப்பிடுவோரே மனிதர் என்றும் புலம்புகிறார். இதுகளைத் திருத்தவே முடியாது.

எவ்வளவு கறி சோறு இருந்தாலும், நான் ஆசையாகக் கேட்பது குத்தரிசிச் சோறும், கத்தரிக்காயில் வைத்த புளி அவியல், ஈழத்தில் அதை எங்கள் கிராமத்தில் உப்புச் சொதி என்போம்.
யாருக்காகவும் நான் அதைச் உண்ணாமல் விடுவதில்லை.இங்கும் அதை விடவில்லை. அதற்கு நிகர் அதே!
கழுதைக்குத் எல்லாம் தெரியுமா?

காரஞ்சன் சிந்தனைகள் சொன்னது…

விருப்பம் இல்லையெனில் உதாசீன படுத்த வேண்டாமே! உன் விருப்பம் ஒன்றாக இருப்பின் இன்னொருவரின் விருப்பம் இன்னொன்றாக இருக்கும்! பணத்தை கொண்டு மனிதனை எடை போடாதிர்கள், மனத்தால் எடை போடுங்கள்!
//அருமையான கருத்து! என்றுதான் திருந்துவார்களோ?//
நன்றி!