புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

நவம்பர் 08, 2012

செம்மண் தேவதை # 7 (Semman Devathai)



பெருங்கூட்டம் நிறைந்த 
பேருந்து அது
உனக்கான நிறுத்தத்தில் 
நீயொருத்தி இறங்கியதும் 
மொத்த பேருந்தும் 
வெறிச்சோடி போகிறது 
எனக்கு!

************************************************************************************************************

நீ கடித்த நெல்லிக்கனிகளை 
சேமிக்க 
காத்திருக்கின்றன 
எறும்பு கூட்டமொன்று 
என்னைப்போலவே!


Post Comment

16 கருத்துரைகள்..:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

யார் அந்த "நீ" அரசன்?

vimalanperali சொன்னது…

மனம் பறிகொடுத்த வரிகள்,வாழ்த்துக்கள்.

பெயரில்லா சொன்னது…

ஆகா! காதல்.....படுத்தும் பாடு!...
வேதா. இலங்காதிலகம்.

Riyas சொன்னது…

//உனக்கான நிறுத்தத்தில்
நீயொருத்தி இறங்கியதும்
மொத்த பேருந்தும்
வெறிச்சோடி போகிறது
எனக்கு!//

Beautiful lines..

உனக்கான பேரூந்தில் நீயும்
எனக்கான பேரூந்தில் நானும்
ஏறிச்சென்று விட்டபின்பும்
காத்திருக்கிறது நம் பார்வைகள் மட்டும்
இன்னுமொரு பேரூந்துக்காய்!!

This is my lines :-)

மகேந்திரன் சொன்னது…

இப்படியெல்லாம் இப்போது தோணனும்
அப்போதான் சரி...
என்ன நான் சொல்றது.......
சரிதானே??//

ஆத்மா சொன்னது…

உங்கள் கற்பனையில் வந்த அவள் நிஜத்திலும் இருக்கிறாள் சிலர் வாழ்க்கையில்
அழகான ரசித்த கவிதை

காரஞ்சன் சிந்தனைகள் சொன்னது…

மனம் கவர்ந்த வரிகள்! என்னுடைய வலைப்பூவில் சில பதிவுகள் தங்கள் பார்வைக்கு காத்திருக்கின்றன! வருகை தாருங்கள்! நன்றி!

Easy (EZ) Editorial Calendar சொன்னது…

கவிதை மிக அருமை.....பகிர்வுக்கு மிக்க நன்றி.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

JR Benedict II சொன்னது…

அட சூப்பரா இருக்கு முதலாவது..
அரசன் எப்போ சுந்தரபாண்டியன் ஆனாரு

ராஜி சொன்னது…

நீ கடித்த நெல்லிக்கனிகளை
>>
இன்னும் ஸ்கூல் லைஃபுலயே இருக்கீங்களா?! நெல்லிக்காவ்யை விட்டுடுடு பிஸ்ஸா, பர்கர், சாண்ட்விஷ்=ன்னு வாங்கப்பு..,

”தளிர் சுரேஷ்” சொன்னது…

காதல் வரிகள் அருமை! புகைப்படமும் சிறப்பு! நன்றி!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஆஹா...

ரசித்தேன்...

ஹேமா சொன்னது…

நல்ல ரசிகன் நீங்கள் அரசன் !

மாதேவி சொன்னது…

தேவதையை மிஞ்சிய அழகுக் கவிதை.

அருணா செல்வம் சொன்னது…

அழகான கவிதைகள்...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய இதயம் நிறைந்த இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள் அரசன்.

Meena சொன்னது…

ரொம்ப ஆழமாப் போகிறீர்கள் காதல் கவிதைகளில்! வாழ்த்துக்கள்!