என்ன கனகசபை ஆளையே பாக்க முடியல, என்ன வெளியூருக்கு ஏதும் போயிருந்தியா?
ஆமா ரத்தினம், மழைக்காலம் ஆரம்பிச்சிடுச்சி இந்த நேரத்துல எது வைச்சாலும் அப்படியே பொழைச்சிக்கும் அதான் தென்னம்பிள்ளை, தேக்கங்கிழங்கு வாங்கியாரலாமுன்னு ஒரு ரெண்டு நாளு சுத்தி வந்தேன்.
இங்கேதான் கொண்டாந்து விக்கிறாங்களே, இங்கயே வாங்கலாமே! நல்லாதான் இருக்குது .
இல்லை ரத்தினம் நம்ம நேரா போயி வாங்குற வசதி இங்க வந்து விக்குறவங்க கிட்ட இருக்காது. நம்ம மனசுக்கு புடிச்சத நேர்ல போனாத்தான் வாங்க முடியும், அதுமட்டுமில்ல வெலையும் கொஞ்சம் கம்மியா இருக்கும்.
சரி சரி, என்ன காடு பூரா மரமா போடுறதா உத்தேசமா?
இல்ல கொஞ்சம் கொஞ்சமா குறைச்சுக்கலாம்னு இருக்கேன், போன வருசம் மேலக்காடு தவிர்த்து மீதி இருந்த ரெண்டு காணியிலும் தேக்கு , சவுக்கு போட்டுட்டேன். இந்த வருசம் மணக்காட்டுல கொஞ்சம் முந்திரி போடுலாமுன்னு பாக்குறேன், எப்படியும் மரம் வளர அஞ்சாறு வருசம் ஆவும், அதுவரைக்கும் கம்பு , சோளம், எள்ளு ஏதாவது போட்டுக்க வேண்டியது தான்!
நல்லா யோசிக்கிற கனகசபை. இருக்குறத விக்காம எப்படி பணம் சம்பாதிக்க முடியுமோ அப்படி பண்ணிட்டு வர.
வேற என்ன பண்றது ரத்தினம், இருக்குறத வித்துபுட்டு சோத்துக்கு எங்க போறது. உக்காந்து தின்னமுன்னா மலையும் போறாது! விவசாயம் படுத்துகிச்சு இப்படி ஏதாவது வருமானத்துக்கு வழி தேடனுமில்ல!
ஆமாம். வீட்டுக்கு பின்னாடி இருக்குற ரெண்டு வீசத்துல கொஞ்சம் காய், கீரை போடலாம்னு இருக்கேன் ரத்தினம்! உரம் போடாம, பூச்சி மருந்து அடிக்காம வளர்த்து வெளையவைக்கும் காய்கறிகளுக்கு டவுனுல மவுசாம்! மத்த காய்கள விட இதுக்கு அம்பது, நூறு கூட கொடுத்து நம்ம வீட்டுக்கே வந்து வாங்கிட்டு போறாங்க கடைக்காரங்க!
இது என்னய்யா புதுசா இருக்கு, பரவாயில்லையே கனகசபை.
இதுக்கு பேரு ஆர்கானிக் காய்கறி! இயற்கை உரங்களை பயன்படுத்தி உருவாக்கும் காய் , கீரை , அரிசிகளுக்கு விலை அதிகம் கொடுத்து வாங்குறாங்க பணக்காரங்க. எப்படியோ மீண்டும் மக்கள் இயற்கை தான் உன்னதமுன்னு உணர ஆரம்பிச்சி இருக்காங்க , நல்லது தானே! அப்புறம் பாக்கலாம் ரத்தினம்!
நேரம் இருப்பின் இதையும் படிக்கலாமே:
Tweet |
25 கருத்துரைகள்..:
ஊர் பேச்சில் இப்போது சுவை அதிகமாகி இருக்கிறது மேலும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களும் இருக்கிறது இத இத இத தான் எதிர்பார்த்தேன் அரசன் வாழ்த்துக்கள்
விவசாயத்தைப் பற்றி அதிகம் பதிவுகளில் காண முடிவதில்லை. அந்த குறையை நிவர்த்தி செய்திருக்கிறீர்கள் அரசன்.
iyarkai uram1
arumaiyaa sollideenga...
sako...
விவசாயிகளுக்கு தேவையான பதிவு..அருமை
//ஆமா கனகசபை// இங்க ஆமா ரத்தினம் அப்படி தான வரணும் அய்யா ராசா அவர்களே
ஆர்கானிக், உரமிலா விவசாயம், களனி காடு வீசம் என்று மண் வாசம் வீசும் பதிவு... அருமை இன்னும் கிராமத்து வார்த்தைகளைக் கொண்டு மண் மனம் வீசுங்கள்
தேவையான நல்ல பகிர்வு...
மிக நல்ல பதிவு....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி......
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
தம்பி நல்ல கருத்தெலாம் சொல்றாக நல்ல புள்ள ஆகிட்டிங்களா ?
ஊர்ப்பேச்சு அருமை !
வணக்கம் சகோதரர் அரசன்...
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வந்தேன்...
வந்து பார்த்தா அருமையான கருத்துப் பகிர்வுள்ள பதிவைப்
பார்த்தேன்
அருமை அருமை
விவசாயம் பற்றிய அருமையான கருத்துப் பகிர்வு...
நல்ல ஒரு ஊர்பேச்சு தான் போங்க..
//ரெண்டு வீசத்துல// அப்படின்னா என்ன நண்பா
TM6 (இப்படி தான் பலர் போட்டுகிறாய்ங்க)
r.v.saravanan கூறியது...
ஊர் பேச்சில் இப்போது சுவை அதிகமாகி இருக்கிறது மேலும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களும் இருக்கிறது இத இத இத தான் எதிர்பார்த்தேன் அரசன் வாழ்த்துக்கள்//
நன்றிங்க சார்
T.N.MURALIDHARAN கூறியது...
விவசாயத்தைப் பற்றி அதிகம் பதிவுகளில் காண முடிவதில்லை. அந்த குறையை நிவர்த்தி செய்திருக்கிறீர்கள் அரசன்//
நன்றிங்க சார்
Seeni கூறியது...
iyarkai uram1
arumaiyaa sollideenga...
sako...//
thank u boss
மதுமதி கூறியது...
விவசாயிகளுக்கு தேவையான பதிவு..அருமை
7 நவம்பர், 2012 1:34 am //
நன்றிங்க சார்
சீனு கூறியது...
//ஆமா கனகசபை// இங்க ஆமா ரத்தினம் அப்படி தான வரணும் அய்யா ராசா அவர்களே
ஆர்கானிக், உரமிலா விவசாயம், களனி காடு வீசம் என்று மண் வாசம் வீசும் பதிவு... அருமை இன்னும் கிராமத்து வார்த்தைகளைக் கொண்டு மண் மனம் வீசுங்கள்//
மாற்றிட்டேன் மிஸ்டர் சீனு. சுட்டி காட்டியமைக்கு ...நன்றிகள்
திண்டுக்கல் தனபாலன் கூறியது...
தேவையான நல்ல பகிர்வு...//
நன்றிங்க சார்
Easy (EZ) Editorial Calendar கூறியது...
மிக நல்ல பதிவு....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....//
நன்றிங்க மலர்
Sasi Kala கூறியது...
தம்பி நல்ல கருத்தெலாம் சொல்றாக நல்ல புள்ள ஆகிட்டிங்களா ?//
அப்படி மட்டும் நினைக்காதிங்க .அக்கா .. நான் என்னைக்கும் அநியாயத்துக்கு கெட்ட பையன் தான்
இராஜராஜேஸ்வரி கூறியது...
ஊர்ப்பேச்சு அருமை !//
நன்றிங்க மேடம்
மகேந்திரன் கூறியது...
வணக்கம் சகோதரர் அரசன்...
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வந்தேன்...
வந்து பார்த்தா அருமையான கருத்துப் பகிர்வுள்ள பதிவைப்
பார்த்தேன்
அருமை அருமை
விவசாயம் பற்றிய அருமையான கருத்துப் பகிர்வு.//
வணக்கம் அண்ணே ...
நலமாக இருப்பிர்கள் என்று நம்புகிறேன் ...
ஊருக்கு வந்ததும் தொடர்பு கொள்ளுங்க
ஹாரி.R கூறியது...
நல்ல ஒரு ஊர்பேச்சு தான் போங்க..
//ரெண்டு வீசத்துல// அப்படின்னா என்ன நண்பா//
வீசம் என்பது நிலத்தின் அளவை குறிக்கும் ஒரு வழக்கு சொல் மச்சி
ஹாரி.R கூறியது...
TM6 (இப்படி தான் பலர் போட்டுகிறாய்ங்க)//
வோட்டு போட்டுட்டு விலையில்லா பொருள் கொடுங்க என்று கேட்க மாட்டீங்க தானே மச்சி
அழகான பதிவு
இயற்கை விவசாயத்தின் அருமையை உணர்த்தும் பேச்சுக்கள்
கருத்துரையிடுக