நபர்1: முளைச்சு மூன்று இலை கூட விடல,
அதுக்குள்ள பையன் இப்படி
பண்ணிட்டானே!
நபர் 2 : என்ன பண்ணிட்டான்?
நபர் 1 : செடிய புடுங்கிட்டான்....
நபர் 2 :?????????!!!!!!!!!!!!!!!!!!!
*********************************************************************************
ஆசிரியர்: பாரதியார் மனைவியுடன் திருச்சி சென்றார்.
இதை வினா வாக்கியமாக மாற்றுக.
மாணவன்: "பாரதி" யார் மனைவியுடன் திருச்சி சென்றார்?
ஆசிரியர்: நாசமா போச்சு....
*********************************************************************************
பையன் : அப்பா நான் ஒரு செய்தி சொல்லணும்.
அப்பா: சாப்பிடும் பொது எதுவும் பேசக் கூடாது
என்று எத்தனை முறை சொல்லுவது...
(சாப்பிட்டு முடித்து) இப்போ சொல்லு...
பையன்: ஒரு கரப்பான் பூச்சி உங்க
சாப்பாட்டுல கிடந்தது...
அப்பா: !!!!!!!!?????????
*********************************************************************************
பணக்காரன்: எனக்கு 5 கார், 4 வீடு,
நிறைய பணம் வச்சிருக்கேன்...
உன்கிட்ட என்ன இருக்கு?
விவசாயி: நான் ஒரே ஒரு பையன் வச்சிருக்கேன்.
அவனோட காதலி உன் பொண்ணு...
பணக்காரன்:!!!!!!?????
*********************************************************************************
ஆசிரியர்: ரேடியோவை கண்டுபிடித்தவர் மார்கோனி.
மாணவர்: எங்க வீட்லயும் ஒரு ரேடியோ காணாம
போச்சு சார்... கண்டு பிடிச்சு கொடுப்பாரா சார்?
ஆசிரியர்: ?????
*********************************************************************************
மு.க.அ: குங்குமப் பூ போண்டா னு ஒரு படம்
வந்திருக்காம் போலாமா?
த.மா.: அது மாதிரி ஒரு படமும் வரலையே...
மு.க.அ.: ஏ அது நல்லா இருக்காம்பா..
அனிமேஷன் படமாம்..
த. மா. : (மனசுக்குள் அட நாறப்பயலே
அது குங் பூ பான்டா... டா.)
*********************************************************************************
தமிழ் அய்யா: தம்பி வாய்மை என்றால் என்ன ?
மாணவன்: வாய்மை என்றால் வந்து வந்து
"லிப்ஸ்டிக்" அய்யா...
அய்யா: நீ எங்க உருப்பட போற ...
*********************************************************************************
ஆசிரியர்: ஓம் விதியை சொல்லு...
மாணவன்: எனக்கு தெரியாது சார் . ஆனால்
கடைசி கொஞ்சம் மட்டும் நினைவில் இருக்கு ..
ஆசிரியர்: சரி தெரிஞ்சத சொல்லு ..
மாணவன்: ....................................இதைதான்
ஓம் விதி என்று கூறுவர்..
ஆசிரியர்:????????????????
*********************************************************************************
ஒரு வருசத்துக்கு முன்னாடி
செம்மொழியான
தமிழ் மொழியாம்...
இன்று கம்பிக்கு பின்னாடி
கனிமொழியாம்...
(குறுஞ்செய்தியில் வந்த நகைச்சுவைகள்)