புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜூலை 20, 2011

நகர வாழ்வு...



பாராமுகமெனினும் பாசமாய்


பகிர்ந்துண்ட நமக்கு
பழகிய முகமும்
பாராமுகமாய் போகின்றது
பாழும் நகர வாழ்வில்!

காலையில் சென்று
இரவில் கூடு
சேரும் பறவைகள்
மீண்டும் நாளைய
தேடலுக்கு ஆயத்தமாகும்!
மனமுருகி பேசக்கூட
கிழமை ஒதுக்கி!

முகமூடி அணிந்தே 
வாழும் முகங்கள்!
மனதை மறந்து 
பணத்தை துதிக்கும்
நாகரிக வாசிகள்!

கனவுகளை எண்ணி 
கண்ணீரை பருகும்
காசுக்காய் வாழும்
கசங்கிய உள்ளங்கள்!

சவப்பெட்டி அறைகளாய்
அடுக்கு மாடிகள்!
காற்றையும், நீரையும் 
காசு கொடுத்து 
வாங்க வேண்டிய 
கட்டாயங்கள்!

போலி புன்னகை 
புகழ் பேச்சுக்கள்
பார்த்து, கேட்டு 
பழகி விட்டது - பகட்டு 
நகர வாழ்வில்!

நேற்று தொலைத்த 
வசந்தங்களை இன்று 
தேடுகிறோம்! இன்று
தொலைக்கின்ற வசந்தங்களை
நாளை யார்தான் 
தேடுவதோ??? 

Post Comment

46 கருத்துரைகள்..:

Prabu Krishna சொன்னது…

உண்மைதான்.... மனிதன் இன்று எல்லாவற்றுக்கும் விலை கொடுக்க தயாராகி விட்டான்.

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

நேற்று தொலைத்த
வசந்தங்களை இன்று
தேடுகிறோம்! இன்று
தொலைக்கின்ற வசந்தங்களை
நாளை யார்தான்
தேடுவதோ???

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

உண்மைதான் நண்பா.
கடந்தகாலமும் - எதிர்காலமும் நிகழ்காலத்தைக் கொன்றுவிடுகிறது.

ஆமினா சொன்னது…

நகர வாழ்க்கை நரக வாழ்க்கை என்பதை அழகான வரிகளில் உயிர் நிரம்பிய கவிதை!!!

r.v.saravanan சொன்னது…

நகர வாழ்க்கை யில் நாம் சந்திக்கும் வலிகளை உணர்த்தும் கவிதை நன்று
வாழ்த்துக்கள் அரசன்

சக்தி கல்வி மையம் சொன்னது…

அருமையான வார்த்திகளின் தொகுப்பு இந்த கவிதை..
நன்றி..

பாலா சொன்னது…

பணம் ஒன்றே பிரதானமாகி போய் விட்ட வாழ்க்கையில், இன்னும் மோசமான நிலைமை கூட வரலாம்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…

நகர வாழ்வு... நரக வாழ்வு தான்... ஆனால் சொர்க்கம் என்னும் கானல் நீராய் நமக்கு....

வாழ்த்துகள் தம்பி...

Unknown சொன்னது…

உண்மை நிலைமை கவிதையில்!!!அருமை!ஒட்டு பட்டை எங்கே பாஸ்?

மாய உலகம் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மாய உலகம் சொன்னது…

//கனவுகளை எண்ணி
கண்ணீரை பருகும்
காசுக்காய் வாழும்
கசங்கிய உள்ளங்கள்!//

சம்பாதிப்பவனையே இந்த சமூகம் உயர்த்தி வைக்கிறது ஹ்ம்ம்ம்ம்ம்.. என் செய்வது நண்பா...

//போலி புன்னகை
புகழ் பேச்சுக்கள்
பார்த்து, கேட்டு
பழகி விட்டது - பகட்டு
நகர வாழ்வில்!//

முகமுடி அனிந்து மறைமுக விளம்பரம் தேடும் மனிதர்கள் தானே நாம்.....

நாளை வசந்தத்தை
நாம் தேட வேண்டும்.. அது கிடைப்பது இறைவனின் கையில்...

நகரவாழ்வு நரகமென நாசூக்காய் கவிதையாய் பகிர்ந்துள்ளீர்கள் ... பாராட்டுக்கள் நண்பா....

ஹேமா சொன்னது…

இன்றைய உலக மாற்றத்தினை,நாகரீக மாற்றத்தினை வரிக்கு வரி எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள் !

Angel சொன்னது…

//முகமூடி அணிந்தே
வாழும் முகங்கள்!//
//சவப்பெட்டி அறைகளாய்
அடுக்கு மாடிகள்!
காற்றையும், நீரையும்
காசு கொடுத்து
வாங்க வேண்டிய
கட்டாயங்கள்!//
சரியா சொன்னீங்க தம்பி .நகர வாழ்வு நரக வாழ்வு .

Mahan.Thamesh சொன்னது…

தொழில்நுட்பம் வளர வளர மனிதன் மாற்றமடைந்து வெறுமனே இயந்திரங்களாய் மரிவருகிறான் சகோ ;
நகரத்து வாழ்வினை அப்படியே படம் பிடித்து காட்டும் உங்கள் கவிதை சிறப்பு ;

அன்புடன் நான் சொன்னது…

கவிதை சிறப்பு நல்ல சிந்தனை பாராட்டுக்கள்,

vidivelli சொன்னது…

போலி புன்னகை
புகழ் பேச்சுக்கள்
பார்த்து, கேட்டு
பழகி விட்டது - பகட்டு
நகர வாழ்வில்!

நேற்று தொலைத்த
வசந்தங்களை இன்று
தேடுகிறோம்! இன்று
தொலைக்கின்ற வசந்தங்களை
நாளை யார்தான்
தேடுவதோ???


really.....
very very excellent..
congratulations"

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

அன்பு நண்பா

இன்று தங்கள் வலைப்பதிவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்

http://blogintamil.blogspot.com/2011/07/blog-post_21.html

நன்றிகள்!

test சொன்னது…

நகர வாழ்வு , அதன் அவஸ்தைகள் குறித்து அருமையாய் சொல்லியுள்ளீர்கள்!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

முகமூடி அணிந்தே
வாழும் முகங்கள்!
மனதை மறந்து
பணத்தை துதிக்கும்
நாகரிக வாசிகள்!

நிதர்சனம்...
நகர வாழ்க்கையில் நாகரிகம் தொலைந்து பாசத்துக்கு ஏங்கி பரிதவிக்கின்றன பல்லபயிரம் உயிர்கள்...

தமிழ்த்தோட்டம் சொன்னது…

நேற்று தொலைத்த
வசந்தங்களை இன்று
தேடுகிறோம்! இன்று
தொலைக்கின்ற வசந்தங்களை
நாளை யார்தான்
தேடுவதோ???

போளூர் தயாநிதி சொன்னது…

இன்றைய சூழலை அழகாக படம் பிடித்து கட்டுகிறீர் பரபரப்பும் மாசடைந்த வளிமண்டலமும் நீரும் நமது வாழ்வை முடமாக்கி அல்லவா செய்துவிட்டது எல்லாமும் பணமயமகிபோன இந்த உலகின் இன்றைய நிலை மாறவேண்டும்தானே? அதைத்தான் சிந்திக்கவைக்கிறது இந்த வசனம் பாராட்டுகள் நன்றி , தொடர்க ..........

thendralsaravanan சொன்னது…

ரொம்பவே நல்லாயிருக்கு தம்பி,
ஆனா ஒண்ணு மட்டும் புரியல..ஊர்பக்கத்திலருந்து நகரத்துக்கு நகர்ந்து வந்தவங்க தான் நிறைய...ஆனால் இங்கே வந்தவுடன் மாறிறாங்க இல்லையா?!...........

பெயரில்லா சொன்னது…

மனமுருகி பேசக்கூட
கிழமை ஒதுக்கி!///

மிக அழகான வார்த்தைகள்... நிதர்சனம் பேசுகிறது கவிதை... வாழ்த்துக்கள்

arasan சொன்னது…

பலே பிரபு சொன்னது…
உண்மைதான்.... மனிதன் இன்று எல்லாவற்றுக்கும் விலை கொடுக்க தயாராகி விட்டான்.//

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றிங்க

arasan சொன்னது…

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

உண்மைதான் நண்பா.
கடந்தகாலமும் - எதிர்காலமும் நிகழ்காலத்தைக் கொன்றுவிடுகிறது.
//

உண்மைதான் உணரவேண்டும் நம் மக்கள் .. மிக்க நன்றிங்க அன்பரே

arasan சொன்னது…

ஆமினா சொன்னது…
நகர வாழ்க்கை நரக வாழ்க்கை என்பதை அழகான வரிகளில் உயிர் நிரம்பிய கவிதை!!!//

மிக்க நன்றிங்க மேடம்

arasan சொன்னது…

r.v.saravanan சொன்னது…
நகர வாழ்க்கை யில் நாம் சந்திக்கும் வலிகளை உணர்த்தும் கவிதை நன்று
வாழ்த்துக்கள் அரசன்//

அன்புக்கு நன்றிங்க சார்

arasan சொன்னது…

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…
அருமையான வார்த்திகளின் தொகுப்பு இந்த கவிதை..
நன்றி..//

வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க அன்பரே

arasan சொன்னது…

பாலா சொன்னது…
பணம் ஒன்றே பிரதானமாகி போய் விட்ட வாழ்க்கையில், இன்னும் மோசமான நிலைமை கூட வரலாம்.//

பெரிய சூறாவளிக்கு முன் சற்று சிந்திக்கட்டும் நம் மக்கள் ..
பிறகு எண்ணி பலன் இல்லாமல் போக கூடும் ...

மிக்க நன்றிங்க சார்

arasan சொன்னது…

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…
நகர வாழ்வு... நரக வாழ்வு தான்... ஆனால் சொர்க்கம் என்னும் கானல் நீராய் நமக்கு....

வாழ்த்துகள் தம்பி...//

மிக்க நன்றிங்க அண்ணே

arasan சொன்னது…

மைந்தன் சிவா சொன்னது…
உண்மை நிலைமை கவிதையில்!!!அருமை!ஒட்டு பட்டை எங்கே பாஸ்?//
மிக்க நன்றிங்க நண்பரே .. ஒட்டுபட்டை இணைத்து விட்டேன்

arasan சொன்னது…

மாய உலகம் சொன்னது…
//கனவுகளை எண்ணி
கண்ணீரை பருகும்
காசுக்காய் வாழும்
கசங்கிய உள்ளங்கள்!//

சம்பாதிப்பவனையே இந்த சமூகம் உயர்த்தி வைக்கிறது ஹ்ம்ம்ம்ம்ம்.. என் செய்வது நண்பா...

//போலி புன்னகை
புகழ் பேச்சுக்கள்
பார்த்து, கேட்டு
பழகி விட்டது - பகட்டு
நகர வாழ்வில்!//

முகமுடி அனிந்து மறைமுக விளம்பரம் தேடும் மனிதர்கள் தானே நாம்.....

நாளை வசந்தத்தை
நாம் தேட வேண்டும்.. அது கிடைப்பது இறைவனின் கையில்...

நகரவாழ்வு நரகமென நாசூக்காய் கவிதையாய் பகிர்ந்துள்ளீர்கள் ... பாராட்டுக்கள் நண்பா....//

நிறைவான வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பரே

arasan சொன்னது…

ஹேமா சொன்னது…
இன்றைய உலக மாற்றத்தினை,நாகரீக மாற்றத்தினை வரிக்கு வரி எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள் !//

மிக்க நன்றிங்க அக்கா

arasan சொன்னது…

angelin சொன்னது…
//முகமூடி அணிந்தே
வாழும் முகங்கள்!//
//சவப்பெட்டி அறைகளாய்
அடுக்கு மாடிகள்!
காற்றையும், நீரையும்
காசு கொடுத்து
வாங்க வேண்டிய
கட்டாயங்கள்!//
சரியா சொன்னீங்க தம்பி .நகர வாழ்வு நரக வாழ்வு .//

நன்றிங்க அக்கா

arasan சொன்னது…

Mahan.Thamesh சொன்னது…
தொழில்நுட்பம் வளர வளர மனிதன் மாற்றமடைந்து வெறுமனே இயந்திரங்களாய் மரிவருகிறான் சகோ ;
நகரத்து வாழ்வினை அப்படியே படம் பிடித்து காட்டும் உங்கள் கவிதை சிறப்பு ;//

அன்புக்கு நன்றிங்க அன்பரே

arasan சொன்னது…

சி.கருணாகரசு சொன்னது…
கவிதை சிறப்பு நல்ல சிந்தனை பாராட்டுக்கள்,//

மிக்க நன்றிங்க மாமா //

arasan சொன்னது…

vidivelli சொன்னது…
போலி புன்னகை
புகழ் பேச்சுக்கள்
பார்த்து, கேட்டு
பழகி விட்டது - பகட்டு
நகர வாழ்வில்!

நேற்று தொலைத்த
வசந்தங்களை இன்று
தேடுகிறோம்! இன்று
தொலைக்கின்ற வசந்தங்களை
நாளை யார்தான்
தேடுவதோ???


really.....
very very excellent..
congratulations"//

மிக்க நன்றிங்க

arasan சொன்னது…

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…
அன்பு நண்பா

இன்று தங்கள் வலைப்பதிவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்

http://blogintamil.blogspot.com/2011/07/blog-post_21.html

நன்றிகள்!//

அன்பான அறிமுகத்துக்கு மிக்க நன்றிங்க

arasan சொன்னது…

ஜீ... சொன்னது…
நகர வாழ்வு , அதன் அவஸ்தைகள் குறித்து அருமையாய் சொல்லியுள்ளீர்கள்!//

மிக்க நன்றிங்க சார்

arasan சொன்னது…

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…
முகமூடி அணிந்தே
வாழும் முகங்கள்!
மனதை மறந்து
பணத்தை துதிக்கும்
நாகரிக வாசிகள்!

நிதர்சனம்...
நகர வாழ்க்கையில் நாகரிகம் தொலைந்து பாசத்துக்கு ஏங்கி பரிதவிக்கின்றன பல்லபயிரம் உயிர்கள்...//

உண்மைதான் தோழி .. இழப்புகள் தான் மிஞ்சுகின்றன ///
நன்றிங்க தோழி

arasan சொன்னது…

தமிழ்த்தோட்டம் சொன்னது…
நேற்று தொலைத்த
வசந்தங்களை இன்று
தேடுகிறோம்! இன்று
தொலைக்கின்ற வசந்தங்களை
நாளை யார்தான்
தேடுவதோ???//

நன்றி தோட்டத்திற்கு

arasan சொன்னது…

போளூர் தயாநிதி சொன்னது…
இன்றைய சூழலை அழகாக படம் பிடித்து கட்டுகிறீர் பரபரப்பும் மாசடைந்த வளிமண்டலமும் நீரும் நமது வாழ்வை முடமாக்கி அல்லவா செய்துவிட்டது எல்லாமும் பணமயமகிபோன இந்த உலகின் இன்றைய நிலை மாறவேண்டும்தானே? அதைத்தான் சிந்திக்கவைக்கிறது இந்த வசனம் பாராட்டுகள் நன்றி , தொடர்க ..........//

அன்பு வாழ்த்துக்கு நன்றிங்க

arasan சொன்னது…

thendralsaravanan சொன்னது…
ரொம்பவே நல்லாயிருக்கு தம்பி,
ஆனா ஒண்ணு மட்டும் புரியல..ஊர்பக்கத்திலருந்து நகரத்துக்கு நகர்ந்து வந்தவங்க தான் நிறைய...ஆனால் இங்கே வந்தவுடன் மாறிறாங்க இல்லையா?!......//

இங்கு வந்தவுடன் மாறும் மனிதர்களும் உள்ளனர் ..
ஆனால் எண்ணிக்கையில் குறைவு அக்கா...
அன்புக்கு நன்றிங்க அக்கா

arasan சொன்னது…

She-nisi சொன்னது…
மனமுருகி பேசக்கூட
கிழமை ஒதுக்கி!///

மிக அழகான வார்த்தைகள்... நிதர்சனம் பேசுகிறது கவிதை... வாழ்த்துக்கள்//

முதல் வருகைக்கும் முத்தான வாழ்த்துக்கும் நன்றிங்க

Dhanalakshmi சொன்னது…

//சவப்பெட்டி அறைகளாய்
அடுக்கு மாடிகள்!
காற்றையும், நீரையும்
காசு கொடுத்து
வாங்க வேண்டிய
கட்டாயங்கள்!//

unmai thozharey....
chandhan-lakshmi.blogspot.com

Rathnavel Natarajan சொன்னது…

அருமை.
நகர வாழ்க்கை நரக வாழ்க்கை ஆகி விட்டது.
மனிதன் எந்திரமாகி விட்டான்.
வாழ்த்துக்கள்.