புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

மார்ச் 26, 2013

சினை மீனொன்றை ....


மகளின் 
இரண்டு மாத கரு சிதைந்ததை எண்ணி 
கடவுளை கரிந்துகொண்டே, 
கையிலிருந்த 
சினை மீனொன்றை 
நறுக்கி கொண்டிருக்கிறாள் 
மீன் கடைக்காரி!







அந்தியில் வீடு சேர்ந்த 
தாயிடம்,
தன் வேகங்கொண்ட மட்டும் 
 முட்டி முட்டி  
பால் குடிக்கும் 
இளங்கன்றை, 
வழியும் எச்சிலோடு 
பால் புட்டி தாங்கிய கரத்தோடு 
சன்னலின் ஊடாக நோக்குகிறது 
வேலைக்குச் சென்ற 
"எதிர் வீட்டாரின் 
ஒன்னரை வயது குழந்தை."


Post Comment

மார்ச் 04, 2013

இருட்டு முத்தம்... (Semman Devathai # 11)


திருட்டு மாங்காய்க்கு 

ருசி அதிகமென்று 
ஊரில் சொல்ல கேட்டிருக்கிறேன்,
அதையெல்லாம் பொய்யென்றது,

உன் இருட்டு முத்தம்...





களைக் கொத்த 
காட்டுக்கு சென்றவள் 
வீடு திரும்புகிறாள்.  
கையில் களைவெட்டியுடனும், 
கன்னத்தில் 

முத்தச்சுவடுகளுடனும்!

Post Comment