புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

அக்டோபர் 29, 2010

முகப்பரு....உன்னை அழகுப்படுத்தும் 

வேலையில் பாதியை 

உன் "முகப்பரு"


எடுத்துக்கொண்டிருக்கிறது 

என்றுதான் நினைக்கிறேன்.....

அன்புடன்

அரசன்
உகந்த நாயகன் குடிக்காடு,,,

Post Comment

அக்டோபர் 28, 2010

தோல்விப் பயணம்.....மணப்பெண்ணாய் மங்கல கோலத்தில் நீ...
உறவு பந்தத்தின் கட்டாய வருகையாளனாய் நான்...


முதலும் இறுதியுமாய் தவித்துகொண்டது எனது இதயம் 
உன்னிடம் பேசிக்கொள்ள..
இறுதியில் பேசிக்கொண்டன நம் கண்கள்...


மங்கல வாத்தியங்கள் என் மனதை உரித்தெடுக்க..
உன் கழுத்தை அழகு படுத்தியது மாற்றானின் மாங்கல்யம்...


பலமுறை பார்க்க துடித்த என் கண்கள் இன்று மட்டும் 
உன்னை  பார்க்க மறுக்கின்றது...


காலத்தின் கோலம் அந்த மரண நொடியிலும் 
உன்னருகே நான் வருவதாய் நேர்ந்தது ...
அந்த ஒரு சில நிமிடங்களில் எனது இதயத்தை 
அமில தொட்டியில் முக்கி எடுத்தாற்போல் நரக சுகம்...


அதனை மேலும் நீட்டிப்பதாய்
எதிர்பாராத விதமாய் 
இடித்து கொண்டன நம் உயிர்கள் ...


இறுதியாய் உன்னை அருகில் பார்த்துக்கொண்ட சந்தோசத்தில் 
துடித்துக்கொண்டது என் காயம் கண்ட இதயம்...


ஒரு திருமணத்தில் ஆரம்பித்த நம் காதல் 
உன் திருமணத்தினால் முடிவு பெற்றது...


இறுதி பார்வையில் விடைப் பெற்று சென்றாய்,
நம் காதல் வாழ்விலிருந்து, உனது இல்லற வாழ்விற்கு!


இன்று முழுமையாய் முதல் வருடத்தை பூர்த்தி செய்து 
இனிதே!
இரண்டாம் வருடத்தை துவக்குகிறது 
என் காதல் தோல்விப்  பயணம்.....
கடந்த கால நினைவுச் சுமைகளோடு!!!


அரசன்
உகந்த நாயகன் குடிக்காடு....


இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்

Post Comment

அக்டோபர் 19, 2010

புது சந்தோசமா?


நீ ஊருக்கு செல்லும்போதெல்லாம் 

தவறாமல் சொல்லிவிட்டு செல்வாயே........

இன்று மட்டும் சொல்ல மறந்தாயா?

இல்லை 

மறுக்கிறாயா?

புது கணவன் கிடைத்த சந்தோசத்தில்.......அன்புடன்

அரசன்
உகந்த நாயகன் குடிக்காடு Post Comment

இதற்கு பெயர்தான் காதலா...?


எத்தனையோ சத்தங்களுக்கிடையில் 
உன் கொலுசு மணி சத்தம் மட்டும் எனக்கு 
கேட்கிறதே! 
இதற்கு பெயர்தான் காதலா? இல்லை, 

எத்தனையோ ஆயிரம் மூச்சுகாற்றுகளுக்கிடையில் 
உனது மூச்சுக்காற்று மட்டும் என்னை தீண்டுகிறதே!
இதற்கு பெயர்தான் காதலா? இல்லை, 

எத்தனையோ வார்த்தைகளுக்கிடையில் என்னோடு பேசிய 
உனது வார்த்தைகள் மட்டும் என்னை நித்தம் கொல்கிறதே!
இதற்கு பெயர்தான் காதலா? இல்லை, 

எவ்வளவு சிந்தனைகளுக்கிடையிலும் 
உன் சிந்தனை மட்டும் என்னை முழுதுமாய் 
ஆட்கொள்கின்றதே!
இதற்கு பெயர்தான் காதலா?

போதும் என்னை கரையவைக்காதே!
விரைவில் தெளிவுபடுத்து!


அன்புடன்

அரசன்
உகந்த நாயகன் குடிக்காடு...Post Comment

அக்டோபர் 14, 2010

உனது வழித்தடங்கள்....

நீ வந்து சென்ற 


இடங்களை எளிதில் 


இனங்கொள்வேன்... எப்படி என்று விழிக்கிறாயா?


வண்ணத்துப்பூச்சிகளின் வழித்தடங்கள் 


உணர்த்திவிடுகின்றன எனக்கு.....அன்புடன்

அரசன்
உகந்த நாயகன் குடிக்காடு....

Post Comment

அக்டோபர் 13, 2010

கைக்குட்டை..
அன்று


பத்திரப்படுத்தி வைத்தேன்..


இன்று


பாடாய் படுத்துகிறது


உன் கைக்குட்டை...


அன்புடன்


அரசன்
உகந்த நாயகன் குடிக்காடு...

Post Comment

கவனமாக இரு....கவனமாக இரு கண்மணி!

ஒரு மூன்றாம் உலகப்போரே மூளப்போகிறது

உன் வீட்டு கொடிகயிறுகளுக்கிடையில்..

முதலில் யார் உன் துணிகளை உடுத்திக் கொள்வதென்று...


அன்புடன்

அரசன்
உகந்த நாயகன் குடிக்காடு...

Post Comment

தற்கொலை...


அதிகாலையில் அரும்பிய மலர்கள்...


மாலையில் தங்களை மறித்து கொள்கின்றனவாம்!


உன்னை சூடிக்கொள்ள இயலாத சோகத்தில்...அன்புடன்

அரசன்
உகந்த நாயகன் குடிக்காடு....

Post Comment

அக்டோபர் 12, 2010

பெண்மை..
பெண்ணே!
            பூமிப்பந்தின் புதிய சரித்திரம் நீ!
            உணர்வுகளின் இருப்பிடமும் நீ தான்!


பெண்ணே!
           வாழ்வாதாரம் நீ!
           வசதிகளை விரும்பும் வன்பிறவியும் நீ தான்!


பெண்ணே!
           அன்பின் பிறப்பிடம்  நீ!
           ஆசைகளின் தொடக்கமும் நீ தான்!

பெண்ணே!
           வண்ணங்களின் வசிப்பிடம் நீ!
           பலவித அடையாளங்களின் தொகுப்பும் நீ தான்!


பெண்ணே!
           தன்னம்பிக்கையின் துளிர் நீ!
           தலைகணத்தின் மொத்தமும் நீ தான்!


பெண்ணே!
          சிறந்த துணை நீ! சிறந்த தோழி நீ!
          சிலருக்கு உணர்ச்சிகளின் சிறந்த வடிகாலே நீ தான்!


பெண்ணே!
          இப்பூமியை அழகு  செய்ய வந்த தேவதை நீ!
          கலாச்சாரத்தின் காரணியும் நீ தான்!


பெண்ணே!
          நாகரிகத்தின் வளர்ச்சிக்கு நீயும் ஒரு காரணம்!
         அதன் வீழ்ச்சிக்கு நீ மட்டுமே காரணம்!


பெண்ணே!
          கவிக்கு பாடுபொருள் நீ!
          கதையாளனுக்கு கருப்பொருளே நீ தான்!


பெண்ணே!
          புத்துணர்ச்சிக்கு காரணம் நீ!
         புணர்சிகளின் தலைவி நீ!


பெண்ணே!
          பிரம்மன் படைப்பின் உச்சம் நீ!
          இவைகள் இருந்தும் இந்த
          கலி உலகில் துச்சமாய் நீ! நீ மட்டுமே!


அன்புடன்

அரசன்
உகந்த நாயகன் குடிக்காடு..

Post Comment

வலி..

அவளால் உடைந்த கண்ணாடியில்

ஒவ்வொரு நாளும் அவள்

பிம்பம் பதிந்து செல்லுகையில் தான்

எனது உயிர் சிறிது சிறிதாய்

பிரிகிறது....
அன்புடன்

அரசன்
உகந்த நாயகன் குடிக்காடு..

Post Comment

அக்டோபர் 11, 2010

இன்றைய காதலி...


என்னை சுத்தம் செய்தது

                                 
                  "காதல்"

என்னிடம் உள்ளவற்றை சுத்தம் செய்தவள்
                                                               
              "காதலி"
அன்புடன்
அரசன்
உகந்த நாயகன் குடிக்காடு

Post Comment

நட்பு...

மிருகத்தனமான அன்றாட வாழ்வில்

அவ்வப்போது

மனிதனை மனிதனாய் மாற்றுவது

 நல்ல நட்புகள் மட்டுமே....

அன்புடன்

அரசன்
உகந்த நாயகன் குடிக்காடு

Post Comment

"வலி கொண்ட இதயத்தோடு"


அரும்பு மீசையில் தடுக்கி விழுந்த நான்
உன்  குறும்பு மீசையினால் துள்ளி எழுந்தேன்!கலையான முகம், கபடமில்லா சிரிப்பு,
வசீகர பேச்சு இவற்றில் கரைந்துதான் போனேன்!உன் பார்வை என்மேல் விழவேண்டும் என்று
நீ வரும் திசைகளை நோக்கி,
வண்ணத்து பூச்சிகளாய் சிறகடித்த எனக்கு
மிஞ்சியது ஏமாற்றமே!அதிசியமாய் என்னிடம் பேசும் உன்னிடம்
அதிகமாய் பேச மனசு துடித்தாலும்,
அளவாய் பேசவே உதடு திறக்கும்..ஒரே ஊரில் இருந்தும் உன்னை
காணாத நாட்களில், என்றோ நீ தவறவிட்ட
உன் நிழற்படம் ஒன்று மட்டுமே
வலி நிவாரணியாய்...என்றாவது என் காதலை
உணருவாய் என்று
"வலி கொண்ட இதயத்தோடு"உன் நாயகி....


(ஒரு வித்தியாசமான முயற்சியில் கிறுக்கியது..)


அன்புடன்
அரசன்
உகந்த நாயகன் குடிக்காடு..

Post Comment

மிதிவண்டி காலங்கள்..என் கவிக்குயிலே!
நித்தம் ஆட்டிவைக்கும் உன் குடும்பச்சுமைகளுக்கிடையில்
இவனின் நினைவுகீறல்கள் இருந்தால் அதற்குச்சமர்ப்பணம்...


அரை வாலிபம் எட்டிப்பார்க்கையிலே!
அப்போ நீ எட்டு, நான் பத்து
வகுப்புகள கடந்தும் கடக்காமலும்..


ஏதோ ஒரு தினசரியில் கதிரவன் மறைய 
எத்தணிக்கும் நேரம் அது!
தோழிகளின் கூட்டத்துடன் நடை பயணமாய் நீ..
என் வகுப்பு பசங்களுடன் மிதி வண்டி பந்தயத்துடன் நான்..


ஏதோ என்னனு வெளங்கல எனக்கு,
தோழிகளுடன் சண்டையுனு அந்த கருவகாட்டு சாலையிலே
தன்னந்தனியா கொஞ்சம் பயத்தின் துணையுடன்
ஓட்டமும் நடையுமாய் சென்று கொண்டிருந்தாய்..


உன்னை பார்த்து விட்டு மனம் பதறி நின்று விட 
அவ்வளவு தான்
நம் இளமை ரகசியம் வெளிச்சமானது
 நம் தோழமைகளுக்கு...


நெடு நாட்களின் தவம் ஒன்று 
நிறைவேறிய சந்தோசத்தில்
உன்னை என் வண்டியில் உட்க்கார வைத்து மிதிக்கையிலே!
வண்டி முன்னோக்கியும், மனசு பின்னோக்கியும்.. 
ஒரு சேர பயணித்தது..


அது ஒரு காலம் பெண்ணே....


நினைவு இருந்தால் 
இரண்டு சொட்டு கண்ணீர் போதும்..
அந்த மிதிவண்டி கால நினைவுகள் மிளிரட்டும்..

இல்லையேல் மறித்தே போகட்டும்...


அன்புடன்..


அரசன்
உகந்த நாயகன் குடிக்காடு...

Post Comment

அக்டோபர் 08, 2010

கரை சேரா அலை....

நட்பான உறவுகளே.. வணக்கம்...
எல்லோரின் வாழ்க்கையிலும் எட்டிப்பார்க்கும் பருவ வயதின் பனிப்போர் "காதல்"..
சிலருக்கு அது இனிப்பாகும்.. பலருக்கு அது பலவிதமான பாடங்களை கற்பித்து செல்லும்..
என்வாழ்விலும் ஒரு சில மாற்றத்தை ஏற்படுத்தியது.. அதன் விளைவு தான்.. இது...
தங்களின் நேரத்தை விரையம் செய்து படித்தமைக்கு நன்றி..
தவறுகளை சுட்டுங்கள்... அது என்னை திருத்திக்கொள்ள வாய்ப்பாக அமையும் என்ற சுயநல சிந்தனையுடன்..

உங்கள் தோழன்

அரசன்
உகந்த நாயகன் குடிக்காடு .

karaiseraaalai, S Raja, S. Raja, U.N.Kudikkadu, Ugandha Nayagan Kudikkadu, Raja, Karunakarasu, Tamilthottam, sendurai, ariyalur, perambalur, trichy, sekar raja, arasan, raja,

Post Comment