புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

மார்ச் 22, 2011

நான் இரசித்த பாடல் ....


படம்: பாண்டவர் பூமி 

பாடல் : தோழா! தோழா!...

இசை : திரு. பரத்வாஜ் 

வரிகளுக்கு சொந்தக்காரர்: கவி. சினேகன்...

இந்த திரைப்படம் வெளியாகி பத்து வருடங்கள் ஆகிவிட்டன ..என்றாலும் 
இந்த பாடல் வரிகள் இன்னும் நெஞ்சை விட்டு அகல மறுக்கின்றது ...
சிநேகனின் திரையுலக பயணத்துக்கு இது ஒரு ஆரம்ப படி கட்டு என்றே 
சொல்லலாம் ... நட்பை பற்றி மிக அழகாய் சொல்லியவர்களுக்கு மத்தியில் 
ஆணுக்கும் , பெண்ணுக்கும் உள்ள நட்பை மெல்லிதாய் , உணர்வு பூர்வமாய் 
செதுக்கி வரிகளில் வடித்து நமக்கு வழங்கி இருப்பார் இந்த நட்பு மனிதர் ...

ஆரம்பிக்கும் வரிகளே, 

"தோழா! தோழா! 
கனவு தோழா!
தோழா! தோழா!
தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்!
நட்பை பத்தி நாமும் பேசி தீர்த்துக்கணும்!"

ஒரு வித பிடிமானத்தை மனதுக்குள் விதைத்து 
உள்ளே அழைத்து செல்கிறது ....

அடுத்த வரிகளில் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் 
காதல் மட்டும்தான் வரணுமா? ஏன் நட்பு அங்கு இருக்க கூடாதா?
என்கிற புரட்சி விதையை தூவி விட்டு செல்கிறார்...

அடுத்து நட்பின் பெருமையை தூக்கி நிறுத்துகிறார்...
நட்புக்கும், காதலுக்கும் உள்ள நூலிழை இடைவெளியை 
எளிமையாய் அதே நேரத்தில் புதுமையாய் கூறி இருக்கின்றார் 
இந்த புது மனிதர் ...

"பிரிந்து போன நட்பினை கேட்டால் 
பசுமையான கதைகளை சொல்லும்!
பிரியமான காதலும் கூட 
பிரிந்த பின் ரணமாய் கொல்லும்!"

இந்த வரிகளை கேட்கும் போது 
மனதுக்கு ஒரு இதமான சுகத்தை தருகிறது ...
உணர்வு கலந்த வரிகளை எளிமையாய் 
தந்திருக்கும் விதம் உன்னதம் ...

அடுத்து ஆண் கேட்பது போல் வரிகளை 
கொடுத்திருப்பார் ...

காதல் ஒன்றும் தவறில்லை 
காதல் இன்றி மனிதரும் இல்லை 
இப்படி காதலையும் சிறப்புற சொல்லி உள்ளத்தை
சிறகடிக்க செய்திருப்பார் இந்த சிநேக மனிதர் ...

"பிரிதலில் காதலை சொல்லுமடி 
நட்பின் வழியிலே 
காதல் வளருமே!"

நட்பின் ஊடே காதலும் வளரும் 
நண்பர்கள் கூட காதலர்களாய் மாறியது உண்டு என்று 
செழிப்பான வரிகளை இணைத்து கிறங்கடிக்க வைத்திருப்பார் ... 
அனைவரது எண்ணங்களையும், ரசனைகளையும் கட்டிப்போட முயன்றிருப்பார் ...

இறுதியில் பெண்ணின் ஆசைக்கு 
மறுப்பின்றி ஆணும் பெண்ணும் பழகிக்கலாம் 
அதை ஆயுள்வரைக்கும் களங்கப்படாமல்
பார்த்துக்கலாம் என்று முடியும் வரிகள் 
ஏதோ ஒரு இனம்புரியா தாக்கத்தை தூண்டி செல்லும் ...

 இந்த வரிகளுக்கு தமது கானக்குரலில்  உயிர் கொடுத்திருப்பார்கள் 
திரு. யுகேந்திரன் மற்றும் சித்ரா சிவராமன்...
இவர்களின் குரல்களில் வரிகள் மனதை வருடிச்செல்லும் ...

இந்த வரிகளுக்கு மெதுவான மெல்லிசை அமைத்து 
காதுகள் கலங்கப்படாமல் மேலும் அழகு சேர்த்து நம்மை கட்டி போட்டு 
மீண்டும் மீண்டும் இந்த கானத்தை கேட்க தூண்டுவார் இசை அமைப்பாளர் 
திரு. பரத்வாஜ்...

இந்த பாடலை மிகவும் துல்லியமாகவும் ரசணை மிகுந்த காட்சி அமைப்புகளிலும் 
நம் கண்ணை கவர்ந்து செல்வார் படத்தின் ஒளிப்பதிவாளர் திரு. தங்கர் பச்சான் ...

துல்லியமாய் படத்தையும், பாடலையும் கொடுத்திருப்பார் இயக்குனர் திரு. சேரன் ...

மொத்தத்தில் இசை அரசருக்கு பின் 
 நான் மிகவும் ரசித்த பாடல்களில் இதுவும் ஒன்று ...

எனது ஆசைகளை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மிக்க 
மகிழ்ச்சி அடைகிறேன் நட்புகளே ..... 






நன்றி: கூகிள் இணையம் மற்றும் youtube

Post Comment

மார்ச் 15, 2011

கரைகிறேன் ...

(படத்தின் மேல் சுட்டுங்கள் பெரிதாய் தெரியும்)


Post Comment

மார்ச் 03, 2011

நொடி மரணம்...


















பள்ளி செல்லும் உமக்கு
பகட்டு வீரமெதற்கு?-பறிகொடுத்த 
உள்ளங்களின் தவிப்பு புரியலையா?


அலுவலகம் செல்லும் அறிவீனமே?!
வீண் சாகசமெதற்கு? அன்புள்ளம்
கூறியது செவிக்குள் சேரலையோ?


நிறுத்தத்தில் ஏற மறுக்கும்
உனது கால்கள் - நகரும்
பேருந்தில் தொற்றுவது நாகரீகமா?


நடத்துனர் நட்பாய் கூறுவதை
நகைத்து மறுப்பாய்!- மறுகணமே
மரமொன்றில் உரசி வீழ்வாய்...


எதிர்பாலின கவர்ச்சி -ஏலமிடும் 
உனது வசந்தத்தை!-உன்னை 
நிறுத்தும் படி நுனியில்!


நிற்பது படி விளிம்பில்,
உணர்வதோ இமய உச்சியாய்...
நித்தம் தினசரியில் தெரிந்தாலும் 
திமிராகவே நிற்பாய்!-தெரிந்தே 
சாகவும் துடிப்பாய்!

கைப்பேசி வைத்து கலகம்
செய்வாய்! இமைக்கும்  பொழுதில் 
 காலன் வருவதை கவனிக்காமல்!


எத்தனை முறை சொன்னாலும் 
எதிர்த்து பேசுவாய்! எல்லாம் 
தெரியுமென்று ஏசவும் துணிவாய்!


பிடி நழுவி வழி தவறிய  
படிப்பயணத்தில் நொடி மரணமாய்
- உனது வாழ்க்கை...


Post Comment