என்ன கனகசபை ஆளையே பாக்க முடியல, என்ன வெளியூருக்கு ஏதும் போயிருந்தியா?
ஆமா ரத்தினம், மழைக்காலம் ஆரம்பிச்சிடுச்சி இந்த நேரத்துல எது வைச்சாலும் அப்படியே பொழைச்சிக்கும் அதான் தென்னம்பிள்ளை, தேக்கங்கிழங்கு வாங்கியாரலாமுன்னு ஒரு ரெண்டு நாளு சுத்தி வந்தேன்.
இங்கேதான் கொண்டாந்து விக்கிறாங்களே, இங்கயே வாங்கலாமே! நல்லாதான் இருக்குது .
இல்லை ரத்தினம் நம்ம நேரா போயி வாங்குற வசதி இங்க வந்து விக்குறவங்க கிட்ட இருக்காது. நம்ம மனசுக்கு புடிச்சத நேர்ல போனாத்தான் வாங்க முடியும், அதுமட்டுமில்ல வெலையும் கொஞ்சம் கம்மியா இருக்கும்.
சரி சரி, என்ன காடு பூரா மரமா போடுறதா உத்தேசமா?
இல்ல கொஞ்சம் கொஞ்சமா குறைச்சுக்கலாம்னு இருக்கேன், போன வருசம் மேலக்காடு தவிர்த்து மீதி இருந்த ரெண்டு காணியிலும் தேக்கு , சவுக்கு போட்டுட்டேன். இந்த வருசம் மணக்காட்டுல கொஞ்சம் முந்திரி போடுலாமுன்னு பாக்குறேன், எப்படியும் மரம் வளர அஞ்சாறு வருசம் ஆவும், அதுவரைக்கும் கம்பு , சோளம், எள்ளு ஏதாவது போட்டுக்க வேண்டியது தான்!
நல்லா யோசிக்கிற கனகசபை. இருக்குறத விக்காம எப்படி பணம் சம்பாதிக்க முடியுமோ அப்படி பண்ணிட்டு வர.
வேற என்ன பண்றது ரத்தினம், இருக்குறத வித்துபுட்டு சோத்துக்கு எங்க போறது. உக்காந்து தின்னமுன்னா மலையும் போறாது! விவசாயம் படுத்துகிச்சு இப்படி ஏதாவது வருமானத்துக்கு வழி தேடனுமில்ல!
ஆமாம். வீட்டுக்கு பின்னாடி இருக்குற ரெண்டு வீசத்துல கொஞ்சம் காய், கீரை போடலாம்னு இருக்கேன் ரத்தினம்! உரம் போடாம, பூச்சி மருந்து அடிக்காம வளர்த்து வெளையவைக்கும் காய்கறிகளுக்கு டவுனுல மவுசாம்! மத்த காய்கள விட இதுக்கு அம்பது, நூறு கூட கொடுத்து நம்ம வீட்டுக்கே வந்து வாங்கிட்டு போறாங்க கடைக்காரங்க!
இது என்னய்யா புதுசா இருக்கு, பரவாயில்லையே கனகசபை.
இதுக்கு பேரு ஆர்கானிக் காய்கறி! இயற்கை உரங்களை பயன்படுத்தி உருவாக்கும் காய் , கீரை , அரிசிகளுக்கு விலை அதிகம் கொடுத்து வாங்குறாங்க பணக்காரங்க. எப்படியோ மீண்டும் மக்கள் இயற்கை தான் உன்னதமுன்னு உணர ஆரம்பிச்சி இருக்காங்க , நல்லது தானே! அப்புறம் பாக்கலாம் ரத்தினம்!
நேரம் இருப்பின் இதையும் படிக்கலாமே: