எந்த நேரத்தில் வெளிய கிளம்பி வந்தேனோ தெரியலைங்க, நான் பாட்டுக்கு (ஹெட் போன்ல பாட்டுக்கேட்டுக்கொண்டு அப்படி வந்தாதான் யூத்துன்னு சொல்றாங்க) என் வழியில வந்தேன், எதிரே ஒரு நல்ல முறையில் உடையணிந்த ஒரு ஜென்டில் மென் வந்து தம்பி நீங்க சென்னையா ? என்றார். இல்லை என்றேன்!
அப்போ என் கஷ்டம் உங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன் என்று கூறிவிட்டு நான் நேற்று ஒரு கம்பெனிக்கு இன்டர்வியுக்கு ஊர்ல இருந்து சென்னை வந்தேன், முடித்து பஸ்ல கோயம்பேடு போயிட்டு இருக்கும் போது என் பர்ஸ் தொலைஞ்சு போச்சு, நீங்க ஒரு சின்ன உதவி பண்ணனும், நான் ஊருக்கு போக ஒரு நூறு ரூபாய் தேவை படுது, நீங்க கொடுத்திங்க என்றால் புண்ணியமா போகும். கொஞ்சம் உதவி பண்ணுங்க என்று அவர் கெஞ்சியதும் சட்டென்று பையில் விட்டு நூறு ரூபாய் எடுத்து கொடுத்துவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன்!(பெரிய வள்ளல்னு நெனப்பா, ஓவரா படம் காட்டாத தம்பி விசயத்தை சொல்லு)
எனது வேலைகளை முடித்து எனது அறைக்கு திரும்பி கொண்டிருந்தேன், வழியில் ஒரு நபர் உற்சாக பானம் அருந்திய மகிழ்வில் சாக்கடை ஓரம் அமர்ந்து தியானம் பண்ணிகொண்டிருந்தார், சற்று கவனித்து பார்த்தேன் என்னிடம் காலையில் பணம் கேட்டு மன்றாடிய அதே ஜென்டில் மென் தான் இப்படி ஒரு ஆராதனை பண்ணி கொண்டிருந்தார்! சட்டையை பிடிச்சு நாலு வார்த்தை திட்டனும் என்று தோன்றியது பிறகு எதற்கு நமக்கு இந்த வேலை, பணம் கொடுத்து ஏமாந்தது நாம், இனி கவனமாக இருக்க வேண்டும் என்று நடையை தொடர்ந்தேன்.( பணத்தை கொடுத்து பல்ப் வாங்கிட்டு, பேச்ச பாரு பெரிய பாகவதர் கணக்கா!)
இது நடந்து நான்கு வருடங்கள் இருக்கும், நான் சென்னையை பற்றி ஓரளவு அறிந்து கொள்ளும் முன் (இந்த ஆறு வருடத்தில் இன்னும் சென்னையை பற்றிய முழு அறிவு இல்லை என்பது தான் உண்மை! அதற்காக சென்னையை குறை சொல்ல முடியாது, பிழைப்புக்காக சென்னை வரும் சில மனிதர்களால் மொத்த சென்னை வாசிகளுக்கும் அவப்பெயர் வந்துவிடுகிறது) நடந்த நிகழ்வு! பிறகு சில விடயங்களை கேட்டும், அனுபவமாக உணர்ந்தும் எப்படி இருக்கணும், இருக்க கூடாது என்பதை பழகிக்கொண்டேன்! (இது ரொம்ப முக்கியம், இப்ப என்னதான் சொல்ல வர)
ஆகவே உங்களோட நட்புகள் யாரவது புதிதாக ஒரு இடத்திற்கு சென்றால் அங்கு முன்னரே இருப்பவரிடம் நல்லது கெட்டதுகளை அறிந்து கொண்டு செல்ல சொல்லுங்கள், உங்களுக்கு அறிந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்! (யப்பாடா ஒரு வழியா முடிச்சிட்டான், இந்த அல்ட்ரா சிட்டியில இந்த மொக்கை பதிவு தேவையா?)
Tweet |
60 கருத்துரைகள்..:
சென்னையில் மட்டுமல்ல .இன்றைக்கு காலையில் கோவையில் ஒரு வேலையாக காரில் காத்திருந்த போது ஒருவர் வந்து ஊருக்கு போக காசில்லை என்ப பரிதாபமாகக் கேட்டார் நானும் முழுதாகக் கொடுக்காமல் பாதிப் பணம் கொடுத்து மீதியை வேறு யாரிமாவது வாங்கிக் கொள்ளச் சொன்னேன் என் கணவர் இது புது வித பிச்சை நீ ஏன் கொடுத்தாய் அங்கே பார் அவன் வேறு யாரிடமும் கேட்காமல் செல்கிறான் .இங்க இருக்கிறவங்களுக்கு அவனைத் தெரியுமாயிருக்கும் என்றார். நம்மைப் போல் ஏமாறுபவர் இருக்கும் வரை ஏமாற்றுபவர் பஞ்சம் இல்லை. என்ன ஒன்று புலி வருது கதைதான் உண்மையாகவே உதவி தேவைப்படுவோரையும் நாம் இனி தவிர்ப்போம்
நல்ல அறிவுரைகள் தான் புதிய இடங்களில் கொஞ்சம் உஷாராகத்தான் இருக்கனும்...
ஹி ஹி சூப்பர் காமெடி (சீரியஸா பேசிகிட்டு இருக்கேன் காமடியா)
ஆமா மச்சி எல்லா ஊருலயும், எல்லா நாட்டிலையும் இப்படி பட்டவர்கள் இருக்காங்க தான் மச்சி..
எப்போதும் கவனமாக இருப்பது நல்லது தானே...!
நன்றி...
tm3
மொக்கையல்ல
பயனுள்ள பதிவு
ஏமந்ததைச் சொல்ல எத்தனை பேருக்குத்தான்
மனம் வரும்.பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
தொடர (பதிவைச் சொல்கிறேன்) வாழ்த்துக்கள்
tha.ma 4
நிஜமாகவே பணமின்றி தவிப்பவர்கள் கூட இது போன்ற மனிதர்களின் செயலால் உதவி பெற முடியவில்லை உதவும் எண்ணம் இருந்தாலும் ஏமாந்து விடுவோமோ என்ற எண்ணத்தில் உதவவும் முடியவில்லை
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
கவனமா இருக்கனும் தம்பீ.
சென்னையில் மட்டுமல்ல பல்வேறு இடங்களில் இது மாதிரி பிச்சை எடுக்கிறார்கள் இன்னும் சிலர் தெரிந்த மாதிரி பேசி ஒரு டீ வாங்கி கொடேன் என்றும் அழைக்கிறார்கள்! நாம் தான் உஷாராக இருக்க வேண்டும். பகிர்வுக்கு நன்றி!
நானும் என் அனுபவத்தைப் போட்டு வைக்கிறேன்
ஒரு நாள் காலையில வேலைக்கு போய்கிட்டு இருக்கும் போது ஒரு ஐம்பது வயதிருக்கும் பிள்ளைக்கு மருந்து வாங்கனும் இரவு நானும் பிள்ளைகளும் சாப்பிடல்ல பாண் ஒன்று வாங்கித் தாங்க சார் என்று கேட்டார் நானும் பாண் வாங்கிக் கொடுத்துட்டு மீதிப் பணத்தையும் அவரிட்டே கொடுத்திட்டு கிளம்பிட்டேன்
அப்புறமா ஆபிசில போய் விசயத்தை சொன்னேன் எல்லோரும் எனக்கு திட்டினாங்க
பின்னாடிதான் புரிஞ்சுது அவன் ஒரு குடிகாரனாம் குடிச்சி குடிச்சி தன்னுடைய ஆசிரியர் தொழிலையும் விட்டுட்டானாம்
பிறரின் இறக்க குணத்தை தவறாக பயன்படுத்தும் இவர்களை போன்ற சிலர் இருக்கிறார்கள் என்றாலும்.... இவர் ஒருவருக்காக.. உதவும் மனப்பான்மையை ஒதுக்கி வைப்பது உண்மையில் உதவி தேவைப்படும் ஒருவருக்கு உதவி கிடைக்காமல் அவர் தீய வழியில் (திருடுதல்) செல்வதற்கு அடித்தளமாக அமைந்துவிடும்!
பிரதி பலன் எதிர்பாராது உதவும் இதை போன்ற உதவிகளை செய்துவிட்டு.. அந்த உதவி, உண்மையில் உதவி தேவைப்படுபவர்களுக்கு போய் சேர்ந்ததா..இல்லை அவர் நம்மை ஏமாற்றி விட்டாரா?... என்று நாம் பெரிதாக அலட்டிக்கொள்ள தேவையில்லை!
நாம் உதவும் நிலையில் இருக்கும் போது..... நம்மால் முடியுமெனில் பிறருக்கு உதவுவதில் தயக்கமே இருக்ககூடாது.!
எல்லா ஊர்லயும் இப்படித்தாங்க.. பசின்னு சொன்னா சாப்பாடு வாங்கிக் கொடுத்தா 'பணமாக் கொடுன்னு' கேட்கறாங்க.. என்னத்தை சொல்ல..
ayyo pavam nu ninaiththaal 6 maasa pavam nammala piditchikkumaam,
enakkum ippadiyaana anupavam kidaiththirukkirathu.
,
கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு முன் 100ரூபாய் என்பது அதிகம்தான் சகோ.
ஏதோ சொல்றேன்னு சொன்னீஙகளே? :))
இப்படி நாள்தோறும்
எல்லா ஊர்களிலும்
இவர்களைப் போலப் பார்க்கமுடியும் நண்பரே..
சிலர் பக்கத்துக்கு ஊருக்குப் போகவேண்டுமென்று 10 ரூபாய்தான் கேட்பார்கள்..
இப்படியும் சிலமனிதர்கள்.
நல்லதோர் பதிவு
இந்த மாதிரி அனுபவம் எனக்கும் உண்டு,இளகிய மனம் கொண்டவர்கள் எல்லோருக்கும் நடக்கும் நிகழ்வாய் இது.
நானும் ஒரு முறை ஏமாந்துள்ளேன்!
அருமையான விழிப்புனர்வு!!! பதிவு. ...:-))))
#நான் ஏமாந்ததை எல்லாம் சொல்ல மாட்டேன். :-)))
//யூத்துன்னு சொல்றாங்க// தளம் பார்த்த உடனே சொல்லணும் ராசா... இப்ப என்ன பாருங்க
// தம்பி நீங்க சென்னையா ? என்றார்// அடடே அற்புதம் அப்புறம் ..( மிக மிக சுவாரசியமாக செல்கிறது ...
//இல்லை என்றேன்! // வாவ் சூப்பர்... பிரமிபூட்டும் பதில்
//என் பர்ஸ் தொலைஞ்சு போச்சு,// ச் ச் ச் ச் சு
//சட்டென்று பையில் விட்டு நூறு ரூபாய் எடுத்து கொடுத்துவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தே// எங்க குல பாரி வள்ளலே.... சங்கத்தின் கோடை வள்ளலே
//பணத்தை கொடுத்து பல்ப் வாங்கிட்டு,// பல்ப் மிக பிரகாசமாக எறிவது கண்டு மிக்க மகிழ்ச்சி
//முழு அறிவு இல்லை // இந்த வார்த்தையைக் கேட்கும் பொழுது செவியில் ஹனி பாய்கிறது
// இந்த அல்ட்ரா சிட்டியில இந்த மொக்கை பதிவு தேவையா?)//ஐயோ தல தெரியமா மாட்டிகிட்டேன் .. என்ன மனிசிருங்க தல... இனிமேட் இந்தப் பக்கம் தல வச்சி கூட அபடுக்க மாட்டேன் ...
பாஸ்,
எனக்கு நேர்ந்த ஒரு அனுபவம்..ஹைதரபாத்ல இருந்து சென்னை போற ட்ரெயின்ல் ஒட்க்கார்ந்து இருந்தே..ட்ரெயின் கிளம்ப 30 நிமிஷம் இருந்தது..அப்ப கொஞ்சம் வயசான ஆள் ஒருத்தர் நான் கையில வைச்சு இருந்தா ஆனந்த விகடன் புக் பார்த்து என்கிட்ட வந்து "சார், நீங்க தமிழான்னு" கேட்டார்..ஆமா ன்னு சொன்னேன்..அவர் தான் ஒரு goverment employe, இங்க ஹைதராபாத்ல அவரோட சூட்கேஸ் தொலஞ்சு போச்சு, சென்னை போறதுக்கு unreserved டிக்கெட் எடுக்க கூட காசு இல்லை, தயவு செஞ்சு ஒரு 150 ரூவா குடுத்து உதவி பண்ணுங்கன்னு கேட்டார்..அவர் உதவின்னு கேட்க்குற அந்த வினாடியில அவர் கண்ணுல கண்ணீர் வந்திருச்சு...ஐயோ, நம்ம அடுத்தவங்க கிட்ட கை ஏந்துற நிலைமைக்கு ஆள் ஆகிடோமே என்கிற வலி அவர் கண்ணுல தெரிஞ்சுது..நான் கையில் இருந்தா 200 ரூபா குடுத்தேன்..அவர் அதை வாங்கும் போது அவர் கை நடுங்குனதை என்னாலே இப்பவும் மறக்க முடியல...
உண்மையிலே purse தொலைச்சவங்க கண்டிப்பா இந்த மாதிரி தான் இருப்பாங்க...
ஐநூறு அழுத நானே சும்மா இருக்கேன்.....அதுவும் நாக்பூர் மலையாளியிடம்.....வாழ்க இந்தியாவின் தேசிய விதிகள்
பட்டு திருந்துனாதான் அழகு....இல்லைனா இப்படித்தான் சீனுவ பாருங்க எவ்வளவு சந்தோசம்?
நாம் ஏமாந்தது பல சமயங்களில் தெரியாமல் கூட இருப்பது உண்டு.இது போன்று நடப்பதால் உண்மையாக உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி கிடைக்காமல் போய் விடுகிறது.
விழிப்புணர்வு ஏற்படுத்தும் பகிர்விற்கு நன்றி! வாருங்கள் நண்பரே என் வலைப்பூ பக்கம்" வாரீரோ குருவிகளே" படிக்க!
தல... ஹெட்போன் மாட்டியிருந்துமா உங்களை சென்னையை சேர்ந்தவர் அல்ல என்பதை கண்டுபிடிச்சீட்டாங்க.. :)
- இப்படிக்கு அனீஷ் ஜெ...
உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.........
நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com/
தொழிற்களம் குழு கூறியது...
உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,
//
இணைந்து விட்டேன் தோழரே
ezhil கூறியது...
சென்னையில் மட்டுமல்ல .இன்றைக்கு காலையில் கோவையில் ஒரு வேலையாக காரில் காத்திருந்த போது ஒருவர் வந்து ஊருக்கு போக காசில்லை என்ப பரிதாபமாகக் கேட்டார் நானும் முழுதாகக் கொடுக்காமல் பாதிப் பணம் கொடுத்து மீதியை வேறு யாரிமாவது வாங்கிக் கொள்ளச் சொன்னேன் என் கணவர் இது புது வித பிச்சை நீ ஏன் கொடுத்தாய் அங்கே பார் அவன் வேறு யாரிடமும் கேட்காமல் செல்கிறான் .இங்க இருக்கிறவங்களுக்கு அவனைத் தெரியுமாயிருக்கும் என்றார். நம்மைப் போல் ஏமாறுபவர் இருக்கும் வரை ஏமாற்றுபவர் பஞ்சம் இல்லை. என்ன ஒன்று புலி வருது கதைதான் உண்மையாகவே உதவி தேவைப்படுவோரையும் நாம் இனி தவிர்ப்போம்//
என்ன பண்றதுங்க மேடம் ... நிறைய நபர்கள் ஏமாற்று பேர் வழியாகவே இருக்கின்றார்கள்
கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
நல்ல அறிவுரைகள் தான் புதிய இடங்களில் கொஞ்சம் உஷாராகத்தான் இருக்கனும்...//
கண்டிப்பாக உஷாராக இருக்கணும் ...
ஹாரி.R கூறியது...
ஹி ஹி சூப்பர் காமெடி (சீரியஸா பேசிகிட்டு இருக்கேன் காமடியா)
ஆமா மச்சி எல்லா ஊருலயும், எல்லா நாட்டிலையும் இப்படி பட்டவர்கள் இருக்காங்க தான் மச்சி..//
எல்லா இடத்திலையும் இப்படி பட்ட ஆட்கள் இருக்கிறார்கள் மச்சி
திண்டுக்கல் தனபாலன் கூறியது...
எப்போதும் கவனமாக இருப்பது நல்லது தானே...!//
கவனமாக இருக்கவேண்டியது நம் கடமையாகிறது சார்
Ramani கூறியது...
மொக்கையல்ல
பயனுள்ள பதிவு
ஏமந்ததைச் சொல்ல எத்தனை பேருக்குத்தான்
மனம் வரும்.பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
தொடர (பதிவைச் சொல்கிறேன்) வாழ்த்துக்கள்//
நன்றிங்க சார்
r.v.saravanan கூறியது...
நிஜமாகவே பணமின்றி தவிப்பவர்கள் கூட இது போன்ற மனிதர்களின் செயலால் உதவி பெற முடியவில்லை உதவும் எண்ணம் இருந்தாலும் ஏமாந்து விடுவோமோ என்ற எண்ணத்தில் உதவவும் முடியவில்லை//
எல்லோருக்கும் ஒரு பயம் இருக்கத்தான் செய்கிறது ...
Sasi Kala கூறியது...
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
கவனமா இருக்கனும் தம்பீ.//
கண்டிப்பாக இருக்குங்க அக்கா ...
s suresh கூறியது...
சென்னையில் மட்டுமல்ல பல்வேறு இடங்களில் இது மாதிரி பிச்சை எடுக்கிறார்கள் இன்னும் சிலர் தெரிந்த மாதிரி பேசி ஒரு டீ வாங்கி கொடேன் என்றும் அழைக்கிறார்கள்! நாம் தான் உஷாராக இருக்க வேண்டும். பகிர்வுக்கு நன்றி!//
உண்மைதான் சார்
சிட்டுக்குருவி கூறியது...
நானும் என் அனுபவத்தைப் போட்டு வைக்கிறேன்
ஒரு நாள் காலையில வேலைக்கு போய்கிட்டு இருக்கும் போது ஒரு ஐம்பது வயதிருக்கும் பிள்ளைக்கு மருந்து வாங்கனும் இரவு நானும் பிள்ளைகளும் சாப்பிடல்ல பாண் ஒன்று வாங்கித் தாங்க சார் என்று கேட்டார் நானும் பாண் வாங்கிக் கொடுத்துட்டு மீதிப் பணத்தையும் அவரிட்டே கொடுத்திட்டு கிளம்பிட்டேன்
அப்புறமா ஆபிசில போய் விசயத்தை சொன்னேன் எல்லோரும் எனக்கு திட்டினாங்க
பின்னாடிதான் புரிஞ்சுது அவன் ஒரு குடிகாரனாம் குடிச்சி குடிச்சி தன்னுடைய ஆசிரியர் தொழிலையும் விட்டுட்டானாம்//
கொடுமையான நபர்கள் சில நல்ல இதயங்களையும் காய படுத்த காரனமாகிவிடுகின்றனர்
வரலாற்று சுவடுகள் கூறியது...
பிறரின் இறக்க குணத்தை தவறாக பயன்படுத்தும் இவர்களை போன்ற சிலர் இருக்கிறார்கள் என்றாலும்.... இவர் ஒருவருக்காக.. உதவும் மனப்பான்மையை ஒதுக்கி வைப்பது உண்மையில் உதவி தேவைப்படும் ஒருவருக்கு உதவி கிடைக்காமல் அவர் தீய வழியில் (திருடுதல்) செல்வதற்கு அடித்தளமாக அமைந்துவிடும்!
பிரதி பலன் எதிர்பாராது உதவும் இதை போன்ற உதவிகளை செய்துவிட்டு.. அந்த உதவி, உண்மையில் உதவி தேவைப்படுபவர்களுக்கு போய் சேர்ந்ததா..இல்லை அவர் நம்மை ஏமாற்றி விட்டாரா?... என்று நாம் பெரிதாக அலட்டிக்கொள்ள தேவையில்லை!
நாம் உதவும் நிலையில் இருக்கும் போது..... நம்மால் முடியுமெனில் பிறருக்கு உதவுவதில் தயக்கமே இருக்ககூடாது.!//
அந்த எண்ணத்தில் தான் அண்ணே போய்க்கொண்டு இருக்கிறோம்
ரிஷபன் கூறியது...
எல்லா ஊர்லயும் இப்படித்தாங்க.. பசின்னு சொன்னா சாப்பாடு வாங்கிக் கொடுத்தா 'பணமாக் கொடுன்னு' கேட்கறாங்க.. என்னத்தை சொல்ல..//
சில மனிதர்கள் அப்படி தான் இருக்கின்றனர் அண்ணே ... என்ன பண்ண தள்ளிவிட்டு போக வேண்டியது தான்
thirumathi bs sridhar கூறியது...
ayyo pavam nu ninaiththaal 6 maasa pavam nammala piditchikkumaam,
enakkum ippadiyaana anupavam kidaiththirukkirathu.//
என்ன பண்றது, நமக்கு பிடித்ததை செய்ய வேண்டியது தான்
ராஜி கூறியது...
கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு முன் 100ரூபாய் என்பது அதிகம்தான் சகோ.//
கொஞ்சம் இரக்க பட்டேன் அதன் பரிசு இது
thamilarasi கூறியது...
ஏதோ சொல்றேன்னு சொன்னீஙகளே? :))//
அதை அப்புறமா சொல்லலாம் என்று விட்டுட்டேன் அண்ணி
முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
இப்படி நாள்தோறும்
எல்லா ஊர்களிலும்
இவர்களைப் போலப் பார்க்கமுடியும் நண்பரே..
சிலர் பக்கத்துக்கு ஊருக்குப் போகவேண்டுமென்று 10 ரூபாய்தான் கேட்பார்கள்..
இப்படியும் சிலமனிதர்கள்.//
எங்கு காணலாம் முனைவரே இந்த தரங்கெட்ட மனிதர்களை
மாற்றுப்பார்வை கூறியது...
நல்லதோர் பதிவு//
நன்றிங்க
விமலன் கூறியது...
இந்த மாதிரி அனுபவம் எனக்கும் உண்டு,இளகிய மனம் கொண்டவர்கள் எல்லோருக்கும் நடக்கும் நிகழ்வாய் இது.//
ஆம் சார் .. எல்லோருக்கும் நடந்திருக்கும் நான் வெளிய சொல்லிட்டேன் காலம் தாழ்ந்து
புலவர் சா இராமாநுசம் கூறியது...
நானும் ஒரு முறை ஏமாந்துள்ளேன்!//
அப்படியா அய்யா ,, என்ன பன்னுவதுங்க அய்யா .. சில மனிதர்களை இதையே முழு நேர தொழிலாக வைத்துள்ளனர்
பட்டிகாட்டான் Jey கூறியது...
அருமையான விழிப்புனர்வு!!! பதிவு. ...:-))))
#நான் ஏமாந்ததை எல்லாம் சொல்ல மாட்டேன். :-)))//
எனக்கு தெரியாது சொல்லியே ஆகணும் அண்ணே
அடடே அற்புதம் அப்புறம் ..( மிக மிக சுவாரசியமாக செல்கிறது ...
//இல்லை என்றேன்! // வாவ் சூப்பர்... பிரமிபூட்டும் பதில் //
இருக்கும் இருக்கும் சீனு ...
எங்க குல பாரி வள்ளலே.... சங்கத்தின் கோடை வள்ளலே //
ஏன் ஏனைய்யா இப்படி ..
பல்ப் மிக பிரகாசமாக எறிவது கண்டு மிக்க மகிழ்ச்சி
//முழு அறிவு இல்லை // இந்த வார்த்தையைக் கேட்கும் பொழுது செவியில் ஹனி பாய்கிறது
//
இன்னைக்கு நான் சிக்கிட்டேனா ? நடத்தும் சீனு நடத்தும் ...
என்னது அனி.. யார் அந்த அனி சீனு ...எனக்கு மட்டும் சொல்வீராக
ஐயோ தல தெரியமா மாட்டிகிட்டேன் .. என்ன மனிசிருங்க தல... இனிமேட் இந்தப் பக்கம் தல வச்சி கூட அபடுக்க மாட்டேன் ...
//
படிக்க வந்தா படிக்காம படுக்க மாட்டேன் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம் மிஸ்டர் சீனு
சதீஷ் செல்லதுரை கூறியது...
ஐநூறு அழுத நானே சும்மா இருக்கேன்.....அதுவும் நாக்பூர் மலையாளியிடம்.....வாழ்க இந்தியாவின் தேசிய விதிகள்
பட்டு திருந்துனாதான் அழகு....இல்லைனா இப்படித்தான் சீனுவ பாருங்க எவ்வளவு சந்தோசம்?//
என் இனம் அண்ணே .. வாங்க சீயர்ஸ் ,...
ராஜ் கூறியது...
பாஸ்,
எனக்கு நேர்ந்த ஒரு அனுபவம்..ஹைதரபாத்ல இருந்து சென்னை போற ட்ரெயின்ல் ஒட்க்கார்ந்து இருந்தே..ட்ரெயின் கிளம்ப 30 நிமிஷம் இருந்தது..அப்ப கொஞ்சம் வயசான ஆள் ஒருத்தர் நான் கையில வைச்சு இருந்தா ஆனந்த விகடன் புக் பார்த்து என்கிட்ட வந்து "சார், நீங்க தமிழான்னு" கேட்டார்..ஆமா ன்னு சொன்னேன்..அவர் தான் ஒரு goverment employe, இங்க ஹைதராபாத்ல அவரோட சூட்கேஸ் தொலஞ்சு போச்சு, சென்னை போறதுக்கு unreserved டிக்கெட் எடுக்க கூட காசு இல்லை, தயவு செஞ்சு ஒரு 150 ரூவா குடுத்து உதவி பண்ணுங்கன்னு கேட்டார்..அவர் உதவின்னு கேட்க்குற அந்த வினாடியில அவர் கண்ணுல கண்ணீர் வந்திருச்சு...ஐயோ, நம்ம அடுத்தவங்க கிட்ட கை ஏந்துற நிலைமைக்கு ஆள் ஆகிடோமே என்கிற வலி அவர் கண்ணுல தெரிஞ்சுது..நான் கையில் இருந்தா 200 ரூபா குடுத்தேன்..அவர் அதை வாங்கும் போது அவர் கை நடுங்குனதை என்னாலே இப்பவும் மறக்க முடியல...
உண்மையிலே purse தொலைச்சவங்க கண்டிப்பா இந்த மாதிரி தான் இருப்பாங்க...//
உண்மையான மனிதருக்கு தகுந்த நேரத்தில் செய்யும் உதவி தான் மிகப்பெரியது .. நீங்க செய்து இருக்கீங்க ,. அதற்கு என் வாழ்த்துக்கள் தல ..
இந்த மாதிரி மனிதர்களுக்கு மத்தியிலும் சில பச்சோந்திகள் இப்படி ஏமாற்றி திரிவது தான் உண்மையான நபருக்கு உதவி செய்ய முடியாமல் போகிறது ... நீங்கள் சொல்வது உண்மையாக இழந்தவரின் நிலையை எண்ணி பார்க்க முடிந்தது தல ..
T.N.MURALIDHARAN கூறியது...
நாம் ஏமாந்தது பல சமயங்களில் தெரியாமல் கூட இருப்பது உண்டு.இது போன்று நடப்பதால் உண்மையாக உதவி தேவைப்படுபவர்களுக்கு உதவி கிடைக்காமல் போய் விடுகிறது.//
உண்மைதான் சார்
Seshadri e.s. கூறியது...
விழிப்புணர்வு ஏற்படுத்தும் பகிர்விற்கு நன்றி! வாருங்கள் நண்பரே என் வலைப்பூ பக்கம்" வாரீரோ குருவிகளே" படிக்க!//
நன்றிங்க சார்
*anishj* கூறியது...
தல... ஹெட்போன் மாட்டியிருந்துமா உங்களை சென்னையை சேர்ந்தவர் அல்ல என்பதை கண்டுபிடிச்சீட்டாங்க.. :)
- இப்படிக்கு அனீஷ் ஜெ...//
ஈசியா கண்டு பிடிச்சிட்டாங்க தல ..
தமிழ் காமெடி உலகம் கூறியது...
உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.........
நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com///
நன்றிங்க மலர்
unmaithaan....
கருத்துரையிடுக