புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

நவம்பர் 27, 2010

ஒரு துளிப் பார்வை...

உன்னிடம் காதல் சொல்ல வந்த

என்னை, கர்வத்துடன் மறுத்துவிட்டு ,

இறுதியில் ஒரு துளிப்பார்வை சிந்தி 

செல்லும் என் கோலமயிலே - இதற்கும்

என்ன அர்த்தமென்று சொல்லிவிட்டு போயேன்...


Post Comment

நவம்பர் 20, 2010

ஏக்கம்...

மழையில் நனைந்து வந்திருந்தேன் 
உன்னைக்காண ஒரு நாள்..


உன் தாவணி முகப்பினால் என் 
ஈரத்தலையை திட்டிக்கொண்டே தான் 
துவட்டி விட்டாய்..


இருந்தும்,


பாழாய் போன என் மனம்,
மழை நின்ற பிறகும் ஏங்குகிறது..


மீண்டும் எப்போ மழை வரும் என்று..
அன்புடன்


அரசன்
உகந்த நாயகன் குடிக்காடு 

Post Comment

நவம்பர் 13, 2010

ஒரு காதல் செய்வோம்....
பார்வை மொழியினை பகிர்ந்து கொள்ளவும்,

பகிர்ந்து கொண்ட மொழியினை பழகி பார்க்கவேயினும்,

உனக்கென்று வளர்த்த ரோசாவை சூடிக்கொள்ளவேயினும்,

உனக்கு சிறு தும்மல் என்றாலும் கூட நான் மருந்து 

எடுத்துக்கொள்ளவேயினும்,

மண்ணுலகில் இருந்தே விண்ணுலகை 

தொட்டு பார்க்கவேயினும்,

நீ உண்ணும் அழகில் என் பசி அடங்கவேயினும்,

நீண்ட இரவில் முழு நிலவை இரசிக்கவேயினும்,

ரசித்த நிலவு நம்மை ரசிக்கவேயினும்,

பல காதல்களை திரையில் காட்டிய 

உலக சினிமாக்காரர்கள் ஒருகணம் 

திகைத்து போகவேயினும்,

காவிய காதல்களை பின்னுக்கு தள்ளி,

நம் காதல் காவியமாகட்டும்...

வாடிப்பெண்ணே!!! 

"ஒரு காதல் செய்வோம்"!!!
                                    (உண்மையாக!!!)


அன்புடன்

அரசன்
உகந்த நாயகன் குடிக்காடு....

Post Comment

நவம்பர் 02, 2010

இரயில் பயணம்....சிநேகித பார்வை.. களங்கமற்ற கலவரச் சிரிப்பு 

ஆறு(நொடி)மணிநேர பயணம்...

நின்று நின்று செல்லும் இரயில் பயணத்தில் 

நிக்காமல் செல்லும் எங்கள் பார்வை பயணம்!..

மீண்டும் ஒருமுறையேனும் இவளை 

பார்க்க நேரிடுமா??? என்ற எண்ண ஓட்டங்களுடன்..

நான் இறங்க வேண்டிய நிலையத்தில் இறங்கிவிட்டேன்...

நினைவுகளை அவளோடு வழியனுப்பிவிட்டு....


அன்புடன்

அரசன் 
உகந்த நாயகன் குடிக்காடு.... 

Post Comment