பார்வை மொழியினை பகிர்ந்து கொள்ளவும்,
பகிர்ந்து கொண்ட மொழியினை பழகி பார்க்கவேயினும்,
உனக்கென்று வளர்த்த ரோசாவை சூடிக்கொள்ளவேயினும்,
உனக்கு சிறு தும்மல் என்றாலும் கூட நான் மருந்து
எடுத்துக்கொள்ளவேயினும்,
மண்ணுலகில் இருந்தே விண்ணுலகை
தொட்டு பார்க்கவேயினும்,
நீ உண்ணும் அழகில் என் பசி அடங்கவேயினும்,
நீண்ட இரவில் முழு நிலவை இரசிக்கவேயினும்,
ரசித்த நிலவு நம்மை ரசிக்கவேயினும்,
பல காதல்களை திரையில் காட்டிய
உலக சினிமாக்காரர்கள் ஒருகணம்
திகைத்து போகவேயினும்,
காவிய காதல்களை பின்னுக்கு தள்ளி,
நம் காதல் காவியமாகட்டும்...
வாடிப்பெண்ணே!!!
"ஒரு காதல் செய்வோம்"!!!
(உண்மையாக!!!)
அன்புடன்
அரசன்
உகந்த நாயகன் குடிக்காடு....
Tweet |
3 கருத்துரைகள்..:
கவிதையா..... அல்லது யாருக்கேனும் தூதா?
நன்றிங்க மாமா....
இது தூதான கவிதை சில காலத்திற்கு முன்னால்...
இப்போ வெறும் கவிதை மட்டுமே.. தூதுக்கான பதில் இல்லாமல் போனதால்....
மிக்க நன்றிங்க மாமா...
நல்லா இருக்கு நன்பா..
கருத்துரையிடுக