புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

டிசம்பர் 29, 2011

இலவசத்தின் விளைவு ...விளைநிலம் இப்ப விலைநிலம்,
விதை நெல் இலவசமாம்!


களைக்கொல்லி கழிவு விலையில்!
பூச்சிக்கொல்லி புதியவிலையில்!


எருதுக்கு விருது,
தீவன விலையேற்றம்!


மண்ணை துளைத்து மண்டபம்,
மண்புழு வளர்க்க மானியம்!


பயிர்க்கடன் உண்டாம்,
பாசன நீர் பஞ்சத்தில்!


"சொட்டு" நீர் இல்லாமல்,
"சொட்டுநீர்" பாசனம்!


நேரடி தானியக்கொள்முதல்,
கிடங்குகளை கிடப்பிலிட்டு!


எதிர்க்க வேண்டிய மக்கள் 
இலவசங்களை எதிர்நோக்கி!


வளர்ச்சிப்பாதையில் நாடு!
வளமான எதிர்காலம்!
நம்பித்தான் ஆகணும்
நம்பிக்கையற்ற அறிக்கையில்!


படங்கள் உதவி: கூகுள்

Post Comment

டிசம்பர் 23, 2011

இந்த வருடத்தில் நான்....! (தொடர்பதிவு)படித்ததில் பிடித்தது ?

நிறைய படித்தேன்... நெஞ்சில் அதிகம் ஒட்டியது சுஜாதா அவர்களின் எப்போதும் பெண் என்ற புத்தகம் தான்... அத்தனை நுணுக்கம் .. 

வாங்கிய பொருள் ?

நீண்ட நாள் நான் தேடி தேடிக்கொண்டிருந்த ஒரு கைக்கடிகாரம். திடிரென ஒரு எதிர்பாராமல் ஒரு கடையில் பார்த்தேன் வாங்கிவிட்டேன். வாங்கிய மூன்றாவது வாரம் என்கையை விட்டு பிரிந்து விட்டது... (ம்ம்ம் நமக்கு கொடுத்து வச்சது அவ்வளவுதான் )

சென்ற இடம் ?

இந்த வருடத்தில் நான் இரண்டு முறை திருப்பதி சென்று வரும் வாய்ப்பு கிடைத்தது. ஒருமுறை நண்பர்கள் நான்கு பேர் செல்லலாம் என்று முன்கூட்டியே இணையத்தில் பதிவு செய்து இறுதியில் நானும் இன்னொரு நண்பனும் செல்லும்படி ஆனது ... இருந்தாலும் சிறப்பான பயணம் தான் ... 
மற்றொருமுறை நானும் என் தோழனும் சென்று வந்தோம் .. இரண்டுமே இந்த வருடத்தில் மறக்க இயலா பசுமை நினைவுகள் ...

இரசித்த திரைப்படம் ?

எங்கேயும் எப்போதும் 
ஆரண்ய காண்டம்...
ஆடுகளம் 

உருகிய திரைப்படம் ?

தென்மேற்கு பருவகாற்று 
முத்துக்கு முத்தாக 
வாகை சூட வா 

சிரித்து மகிழ்ந்த திரைப்படம் ?

போட்டா போட்டி 50  : 50
போராளி 

பிடித்த பாடல் ?

உன் பெயரே தெரியாது - எங்கேயும் எப்போதும் 
ராசாத்தி போல - அவன் இவன் 
ஜில்லா விட்டு ஜில்லா -  ஈசன் 

மனதில் நின்ற பாடல் ?

கள்ளிக்காட்டில் பிறந்த தாயே - தென்மேற்கு பருவகாற்று 

மிகப்பெரிய சந்தோஷம் ?

நான்கு வருடங்களுக்கு பிறகு பழைய பள்ளி நண்பர்களை ஒருங்கிணைத்து பயின்ற பள்ளியில் அனைவரும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டது ... அப்புறம் இந்த அணியின் உலககோப்பை கனவு நனவானது ... 


புதிய நண்பர்கள் ?

நிறைய இந்த வருடத்தில் புதிய நண்பர்களுடன் கைக்குலுக்கும் வாய்ப்பு கிடைத்தது. வலைப்பூவில் , மற்றும் பணிபுரியும் இடங்களில்...

சாதனை ?

இன்னும் அந்த அளவுக்கு வளரவே இல்லைங்க... சாதனை செய்ய நெடுந்தூரம் பயணிக்க வேண்டுமாம் ... நான் இன்னும் சின்ன பையன்தான் ... 

வருத்தம் ?

நிறைய ஏக்கங்களையும் , சோகங்களையும் குறைவில்லாமல் வழங்கியது இந்த வருடம் அந்த அளவுக்கு மன உறுதியையும் , நம்பிக்கை தரும் நல்ல உள்ளங்களின் நட்பையும் கொடுத்ததினால் இந்த வருத்தத்திற்கு இடமில்லை ..

ஆச்சர்யம் ?

நானும் வலைப்பூவில் தொடர்ந்து கிறுக்கி வருவது தான் ...

பெருமை ?

எங்கள் ஊரின் மண்ணின் மைந்தர்கள் கடந்த பத்தாம் வகுப்பில் நல்ல முறையில் நிறைய மதிப்பெண்களோடு தேர்ச்சி அடைந்தது ...(இந்த தொடர்பதிவு எழுத அழைத்த அன்பு நண்பர் திரு. மயிலன் (மயிலிறகுஅவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளை கூறிக்கொள்கிறேன்)

Post Comment

டிசம்பர் 20, 2011

உலராத ஈரம்...
இரவு பெய்த
மழையில் அமைதியாய்
குளித்த மரங்களின்
உலராத ஈரம்,
இயல்பாய் உணர்த்திச் 
செல்கின்றது, உயிரான
அவளின் நினைவுகளை!

Post Comment

டிசம்பர் 15, 2011

வரலாறாகும் வாழ்வு...


சாமத்துல உறங்கி 
சேவலுக்கு முந்தி 
முழிச்சி, கட்ட 
வெளக்கமாரால கட்டுத்தறிய 
சுத்தமாக்கி, குளிச்சி முடிச்சி 
ரெண்டுவேளைக்கும் 
கஞ்சி காய்ச்சி!
மிச்சம் வைச்ச 
சாணத்த கரைச்சி 
வீதியில தெளிச்சி 
பெருக்கி கோலமிட்டு,
பறிச்ச ஒத்த
பரங்கிப்பூவ, கொழைச்ச 
சாணியில, கோலமத்தியில
குலுங்காம வைச்சி 
நிமிர்ந்து பார்க்கையில,
இவளுக்கு முந்தி 
தூங்கப்போன சூரியன்
முழிச்சி சிரிக்கும்,
இவ கோலத்தப்போல!  
இப்படி வரலாறா வாழ்ந்த நிலை,
இன்னைக்கு சரத்துல 
சொருகி வைச்ச 
பழைய கடுதாசியா
கிழிஞ்சி தொங்குது 
எச்சமும், மிச்சமுமா!
பாழும் இந்த 
செயற்கை மோகத்தால!?


Post Comment

டிசம்பர் 12, 2011

உடைந்த புல்லாங்குழல்...உடைந்த புல்லாங்குழல் 
கசியும் சுரமற்ற 
இசையாய் 
சுவையற்று கழிகிறது 
அவளை பிரிந்த 
என் வாழ்க்கை!

படங்கள் உதவி: கூகுள் இணையம்.

Post Comment

டிசம்பர் 07, 2011

எனது கிராமத்தின் அழகை இரசிக்க வாருங்களேன் - 5


இந்த பயலுவோ இதோ வரேன்னு சொல்லிட்டு போனவனுங்களை இன்னும் காணலையே? அப்படி எங்க தான் போயிருப்பானுக.... 


முன்னாடியே சொல்லியிருந்தா நான் கொஞ்சம் மேக் அப் போட்டிருப்பேன்..
இப்படி திடிர்னு படம் எடுக்குறானுங்க! நான் என்னத்த சொல்றது!தம்பி நீ என்னை எத்தனை முறை குளிப்பாட்டினாலும் நான் குளிக்கமாட்டேன்டி....இப்படி சீண்டி பாக்கிறதே இவனுங்களுக்கு வேலையா போச்சு!
 ஒத்தையா தான் நிக்கிறேன் முடிஞ்சா மோதி பாருங்க...
இப்படி கருப்பா எடுத்து என் மானத்தை வாங்கிபுட்டானுகளே! 

யாருப்பா அது குறுக்க நிக்கிறது! கட்டதுரையா???

எங்களை படம் புடிக்கமுடியுமா? அந்த சீமை துரையே படம் பிடிக்க வந்து ஏமாந்து தான் போனாரு தெரியுமா ???எங்க போய் நின்னாலும் நம்மளையே குறி வைச்சி எடுக்குரானுக? ஒரு முட்டு முட்டிடலாமா? 

இந்த பயலுவோ என்னத்த கையில வைச்சி கிட்டு திரியிரானுவோ ? ஏதோ மின்னல் கூட வருது அந்த பொட்டியிலருந்து??? என்னாவா இருக்கும் ???இப்படி மொத்தமா எடுத்து புட்டாயிங்க.. வெக்கமா வருது தம்பி!!!

நாங்க தான் இத்தனை படங்களையும் எடுத்தது!!!அட சொன்னா நம்புங்க நாங்க தான் எடுத்தோம்!!!


(இந்த படங்களை எடுத்த எங்கள் மண்ணின் மைந்தர்களுக்கு(ஆனந்து, மணிவண்ணன், முருகன், தமிழருவி, நெப்போலியன், அன்பழகன்) வாழ்த்துக்களை கூறுங்களேன் நண்பர்களே)

Post Comment