திருமணம் என்பதை வெறும் நிகழ்வாக , இரு மனங்களின் இணைவாக, புதிய உறவுகளின் தொடக்கப்புள்ளியாக கருதி இதுவரை கடந்து வந்து கொண்டிருந்த என்னை , திருமணம் என்பது சாதாரண நிகழ்வல்ல, அது பிரிவின் அழுத்தம் என்பதை சமீபத்திய, என் தங்கையின் திருமணம் மிக அழுத்தமாய் உணர்த்தி இருக்கிறது. மீண்டு வர இன்னும் எத்தனை நாட்கள் ஆகுமோ? காயத்தின் மருந்தாக காலமிருக்கும் என்று நம்புகிறேன்!
பெண்ணாய் பிறந்து விட்டால் இன்னொரு குடும்பத்திற்கு வாழப் போய்த்தான் ஆகவேண்டும் தானென்று மூளை சொல்லும் ஆறுதலை ஏனோ மனம் ஏற்க மறுக்கிறது! மங்களகரமான நிகழ்வுதான், ஆனால் பூரண மகிழ்வை மாப்பிள்ளை குடும்பம் தான் அனுபவிக்க முடிகிறது, நிச்சயம் பெண் வீட்டாரால் முடியாது!
நிச்சயம் பண்ணியதிலிருந்து "ஏதோ ஒன்றை இழந்த உணர்வு" இருந்தாலும், திருமண நாள் நெருங்க நெருங்க , அழுத்திய பாரம் மிக கொடியது! இத்தனை வருடங்களாக குடும்பத்தின் ஒரு அங்கமாய் இருந்த பெண்ணை, திருமணம் என்கிற வடிவில் இன்னொரு குடும்பத்தில் இணைப்பதின் மூலம் ஏற்படும் பிரிவின் வலியை பூரணமாக உணர்ந்தேன்!
குடும்பமாக அமர்ந்து உணவருந்திய நாட்கள் ஏராளம் என்றாலும் திருமணத்துக்கு முந்திய நான்கைந்து நாட்கள் அனைவரும் ஒன்றாக உணவருந்தியவைகள் வாழ்வின் உன்னத நாட்கள்!
மாப்பிள்ளை வீட்டார் தங்கையை அழைத்துக்கொண்டு செல்லும்போது, அம்மா, அப்பா உருகி அழுகையில், என்னை கட்டுப்படுத்த பெரும்பாடு பட்டேன், அப்படி இருந்தும் திருமணம் முடிந்த மறுநாள், தங்கையின் பிரிவை உணர்த்திய சிறிய நிகழ்வில் உடைந்து அழுதேன்!
தங்கையுடன் போட்ட சண்டைகள், சில நெகிழ்வான தருணங்கள் அனைத்தும், அழகிய நிகழ்வுகளாக மனதில் பதிய தொடங்கிவிட்டன. என்றோ நடந்த வேடிக்கையான நிகழ்வுகள் கூட இனிப்பான நினைவுகளாக உருமாறுவது இந்த மனித வாழ்வில் மட்டுமேதான்! எத்தனை வியப்புகள் நிறைந்த வாழ்க்கையினை இரசிக்க நேரமின்றி மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருக்கிறோம் நாம்! காலமும், சூழலும் தான் மனிதனை பண்படுத்தி பக்குவப்படுத்துகிறது என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது என்னால்!
நம் வீட்டில் சுதந்திரமாய் சுற்றித் திரிந்த பட்டாம்பூச்சியின் சிறகில் சிறிதை கிள்ளுவது போல் தான் திருமணம். என்னதான் புகுந்த வீட்டில் சுதந்திரம் கொடுத்தாலும், பிறந்த வீட்டின் சுதந்திரம் போலாகாது என்பது என் அழுத்தமான நம்பிக்கை! பிறந்த வீட்டின் வாழ்வியல் பழக்கத்திலிருந்து, புகுந்த வீட்டின் பழக்க வழக்கத்திற்கு மாறிக்கொள்ள சற்று காலம் ஆகும். மணமாகும் ஆண்களுக்கு வேறுமாதிரியான சிக்கல்கள் இருக்கின்றன. அதை வேறு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்!
இத்தனை காலமாக நம்முள் ஒருவராக, சுக துக்கங்களை பகிர்ந்து கொண்ட ஒருவரை, திடீரென இன்னொருவருக்கு சொந்தம், முன்பு போல் உரிமை எடுத்துக் கொள்ள முடியாது என்று எண்ணுகையில் சொல்ல முடியா சுமைகள் கூடினாலும், எத்தனை காலம் தான் இப்படியே வைத்திருக்க முடியும் என்ற நிதர்சனம் சமாதானம் சொல்லி சாந்தப் படுத்துகிறது.
வேரோடும், வேரடி மண்ணோடும் இங்கிருந்து பிடுங்கி இன்னொரு குடும்பத்தில் சேர்ப்பித்து இருக்கின்றோம், செழித்து வளரும் என்ற நம்பிக்கையுடன். நம்பிக்கைதானே எல்லாமே!

Tweet |