புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

டிசம்பர் 27, 2010

அவளைப்பற்றி....ஆசை...
உன் உதட்டு ரேகைகளில் 
ஒன்றாக மாறிவிடவும் ஆசை ...


கோபம்...
நீ சிந்திப்போகும் அழகை
கூடவே வந்து அள்ளிக்கொண்டு போகும்
உன் நிழலின் மேல் ...


சந்தேகம்...
அதிசயமாய் நீ சிந்தும் 
கண்ணீர் துளிகளைத்தான்
சிப்பிகள் முத்துக்களாக 
உதிர்க்கின்றனவோ???


பொறாமை...
பிரம்மனை கண்டித்து ஊர்வலமாம்,
மொத்த அழகையும் உன்னிடம் 
படைத்ததினால்...Post Comment

டிசம்பர் 17, 2010

விழி வாள்...
எப்படி முடிகிறது உன்னால் மட்டும்...


எதிரெதிரே கடந்து செல்லும் போது 


என் மேல் விழாத உன் பார்வை ,


கடந்து தூரம் சிறிது சென்றபின் 


திரும்பி செலுத்துகிறாய் 


உன் கூரிய விழி வாளை....!


எப்படி முடிகிறது உன்னால் மட்டும்...

Post Comment

டிசம்பர் 09, 2010

ஆயுள் நீட்டிப்பு...என் கருப்பழகியே...


உன் மூச்சுக்காற்றை சுவாசித்து தான்,


தன் ஆயுட்காலத்தை நீட்டித்துக் கொள்கிறதாம் 


"காற்று"

Post Comment