ஆசை...
உன் உதட்டு ரேகைகளில்
ஒன்றாக மாறிவிடவும் ஆசை ...
கோபம்...
நீ சிந்திப்போகும் அழகை
கூடவே வந்து அள்ளிக்கொண்டு போகும்
உன் நிழலின் மேல் ...
சந்தேகம்...
அதிசயமாய் நீ சிந்தும்
கண்ணீர் துளிகளைத்தான்
சிப்பிகள் முத்துக்களாக
உதிர்க்கின்றனவோ???
பொறாமை...
பிரம்மனை கண்டித்து ஊர்வலமாம்,
மொத்த அழகையும் உன்னிடம்
படைத்ததினால்...
Tweet |
79 கருத்துரைகள்..:
பேராசை...
நியாயமான கோபம்...
அற்புத சந்தேகம்...
தேவையற்ற பொறாமை...
//thendralsaravanan சொன்னது…
பேராசை...
நியாயமான கோபம்...
அற்புத சந்தேகம்...
தேவையற்ற பொறாமை...//
வருகைக்கும் , வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க சார்....
“அவளைப் பற்றி”
நான்கே பிரிவுகளில் நச்சுன்னு சொல்லியிருக்கீங்க அருமை அண்ணே
தொடரட்டும் உங்கள் கவிப் பயணம்.....
"உங்களவள் " பற்றி அழகாய் சொல்லி இருகிறீங்கள். பாராட்டுக்கள்.புது வருடத்தில் எண்ணிய யாவும் ஈடேற வாழ்த்துக்கள்.
ஆசை +கோபம் +சந்தேகம் +பொறாமை = பெண் . இது என்னுடைய கருத்து இல்லை . இதை படித்து விட்டு நம் நண்பர் ஒருவர் கூறியது
கவிதை வடிவா இருக்கு இன்னும் எதிபார்க்கிறேன்.
உங்களுடைய கவிதையும் அருமை..
நண்பர் மணிவண்ணனின் பின்னூட்டமும் அருமை..
என் பெயர் தென்றல்.என் கணவர் பெயரை சேர்த்து தென்றல் சரவணன் ஆனேன்.
கவிதைகள் நல்லா இருக்கு ...தொடரட்டும் தங்கள் தமிழ் பணி...
நல்லாதான் போகுதுங்க.
அதிலும் படம் சூப்பரு..
//ஆசை...
உன் உதட்டு ரேகைகளில்
ஒன்றாக மாறிவிடவும் ஆசை ...//
சபாஷ் !
//கோபம்...
நீ சிந்திப்போகும் அழகை
கூடவே வந்து அள்ளிக்கொண்டு போகும்
உன் நிழலின் மேல் ...//
சபாஷ் !
//சந்தேகம்...
அதிசயமாய் நீ சிந்தும்
கண்ணீர் துளிகளைத்தான்
சிப்பிகள் முத்துக்களாக
உதிர்க்கின்றனவோ???
//
சபாஷ் !
//பொறாமை...
பிரம்மனை கண்டித்து ஊர்வலமாம்,
மொத்த அழகையும் உன்னிடம்
படைத்ததினால்...//
சபாஷ் !
எங்கும் காதலாய் ரசிக்கும் அரசனோ !
//அதிசயமாய் நீ சிந்தும்
கண்ணீர் துளிகளைத்தான்
சிப்பிகள் முத்துக்களாக
உதிர்க்கின்றனவோ???///
ரசித்த வரிகள்
எல்லா கவிதையும் சூப்பர்ங்க
//மாணவன் சொன்னது…
“அவளைப் பற்றி”
நான்கே பிரிவுகளில் நச்சுன்னு சொல்லியிருக்கீங்க அருமை அண்ணே
தொடரட்டும் உங்கள் கவிப் பயணம்.....//
அண்ணே வாங்க ... வாங்க ..
பாசமான வாழ்த்துக்கு மிக்க நன்றி ...
//நிலாமதி சொன்னது…
"உங்களவள் " பற்றி அழகாய் சொல்லி இருகிறீங்கள். பாராட்டுக்கள்.புது வருடத்தில் எண்ணிய யாவும் ஈடேற வாழ்த்துக்கள்.//
அக்கா வாங்க வணக்கம் ...
அன்பு கலந்த வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிங்க அக்கா ...
//நா.மணிவண்ணன் சொன்னது…
ஆசை +கோபம் +சந்தேகம் +பொறாமை = பெண் . இது என்னுடைய கருத்து இல்லை . இதை படித்து விட்டு நம் நண்பர் ஒருவர் கூறியது//
வாருங்கள் சகோ ...
இப்படியும் சொல்லலாம் நண்பரே ... ஒரு சிலர்களை பார்த்தால் மட்டும்...
வருகைக்கு மிக்க நன்றி நண்பரே ...
//சி. கருணாகரசு சொன்னது…
கவிதை வடிவா இருக்கு இன்னும் எதிபார்க்கிறேன்.//
முயற்சி செய்கிறேன் மாமா ....
விரைவில் உங்களின் எதிர்பார்ப்புகளை ஓரளவாது பூர்த்தி செய்ய முற்சிக்கிறேன் ...
நன்றிங்க மாமா வருகைக்கும் , மேலான கருத்துக்கும் ....
//பதிவுலகில் பாபு சொன்னது…
உங்களுடைய கவிதையும் அருமை..
நண்பர் மணிவண்ணனின் பின்னூட்டமும் அருமை..//
வாருங்கள் சகோ ...
வந்தமைக்கும் , வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி .....
//thendralsaravanan சொன்னது…
என் பெயர் தென்றல்.என் கணவர் பெயரை சேர்த்து தென்றல் சரவணன் ஆனேன்.
கவிதைகள் நல்லா இருக்கு ...தொடரட்டும் தங்கள் தமிழ் பணி..//
நான் பெயரை வைத்து தெரியாமல் கூறிவிட்டேன் ...
மன்னிக்கவும் சகோதரி ...
உங்களின் அன்பான வாழ்த்துக்கள் என்னை மேலும் சில கிறுக்கல்களை கிறுக்க தூண்டும் ...
மிக்க நன்றிங்க தென்றல் அக்கா .....
//அன்பரசன் சொன்னது…
நல்லாதான் போகுதுங்க.
அதிலும் படம் சூப்பரு..//
அன்பான அரசனின் வருகை, வாழ்த்து என்னை உருக செய்து விட்டது ...
மிக்க நன்றிங்க அண்ணே ....
Meena சொன்னது…
//ஆசை...
உன் உதட்டு ரேகைகளில்
ஒன்றாக மாறிவிடவும் ஆசை ...//
சபாஷ் !
//கோபம்...
நீ சிந்திப்போகும் அழகை
கூடவே வந்து அள்ளிக்கொண்டு போகும்
உன் நிழலின் மேல் ...//
சபாஷ் !
//சந்தேகம்...
அதிசயமாய் நீ சிந்தும்
கண்ணீர் துளிகளைத்தான்
சிப்பிகள் முத்துக்களாக
உதிர்க்கின்றனவோ???
//
சபாஷ் !
//பொறாமை...
பிரம்மனை கண்டித்து ஊர்வலமாம்,
மொத்த அழகையும் உன்னிடம்
படைத்ததினால்...//
சபாஷ் !
வாருங்கள் மீனா மேடம் ....
வந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி ....
உங்கள் கனிவான வாழ்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் .....
//ஹேமா சொன்னது…
எங்கும் காதலாய் ரசிக்கும் அரசனோ !//
வாருங்கள் சகோதரி ....
என் கண்ணில் படுபவை காதலாக தெரிகிறது ... ஒருவேளை
என் வயது கோளாறாக இருக்கலாம் என்று தான் நினைக்க தோன்றுகிறது ...
நிறைவான வாழ்த்துகளுக்கு என் இதயம் கனிந்த நன்றிகள் ./////
ஆமினா சொன்னது…
//அதிசயமாய் நீ சிந்தும்
கண்ணீர் துளிகளைத்தான்
சிப்பிகள் முத்துக்களாக
உதிர்க்கின்றனவோ???///
ரசித்த வரிகள்
எல்லா கவிதையும் சூப்பர்ங்க//
வாருங்கள் வாருங்கள் ...
உங்களின் பொன்னான வருகைக்கும் , வளமான வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க .....
ஆசை அதிகம் வைத்து
கோபம் கொந்தளிக்க
சந்தேக சலனம் நடமாடும்
பொறாமை பேர்வழிகள்
நம்மில் எத்துனையோ ..........
உங்க வரிகள் சூப்பர் நண்பரே .......
ஆசை சந்தேகம் கோபம் பொறாமை...
மொத்தில் காதல் யாசகனாய் தாங்கள்..
அருமை
இந்தப் பதிவும், பதிவின் தலைப்பில் உள்ள புகைப்படமும் மன அமைதியை அதிக அளவில் உற்பத்தி செய்கின்றன இது போன்று பதித்து சேவை செய்து கொண்டே இருங்கள்
உங்களுடைய பதிவு வாழ்க்கை வெள்ளத்தில்
அடித்துப் போகப்பட்ட என் உணர்வுகளை
மீண்டும் கரை சேர வைத்து வாழ்வளிக்கிறது
ஆண் பெண் ஈர்ப்பு சூரியன் போன்றது
சூரியனை மறந்து போன சூட்சமும் உண்டு
சிலர் வாழ்வில்
"Un uthattu rekaikalil ontraka mari vida asai" arumaiana karpanai alakana varikal arumai
//dineshkumar சொன்னது…
ஆசை அதிகம் வைத்து
கோபம் கொந்தளிக்க
சந்தேக சலனம் நடமாடும்
பொறாமை பேர்வழிகள்
நம்மில் எத்துனையோ ..........
உங்க வரிகள் சூப்பர் நண்பரே .......//
வாருங்கள் தோழரே ... வளமான வாழ்த்துக்கள் கூறியமைக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் ..
//கல்பனா சொன்னது…
ஆசை சந்தேகம் கோபம் பொறாமை...
மொத்தில் காதல் யாசகனாய் தாங்கள்..
அருமை//
வாங்க வாங்க மேடம் ...
மிக்க நன்றி ...... மனம் நிறைந்து வாழ்த்துக்கள் கூறியமைக்கு எனது இதயம் கனிந்த நன்றிகள்
//Meena சொன்னது…
இந்தப் பதிவும், பதிவின் தலைப்பில் உள்ள புகைப்படமும் மன அமைதியை அதிக அளவில் உற்பத்தி செய்கின்றன இது போன்று பதித்து சேவை செய்து கொண்டே இருங்கள்//
வாருங்கள் மேடம் ...
உங்களை போன்ற நட்புள்ளங்கள் உள்ளவரை எனது பயணம் நிச்சயம் தொடரும் ...
//Meena சொன்னது…
உங்களுடைய பதிவு வாழ்க்கை வெள்ளத்தில்
அடித்துப் போகப்பட்ட என் உணர்வுகளை
மீண்டும் கரை சேர வைத்து வாழ்வளிக்கிறது
ஆண் பெண் ஈர்ப்பு சூரியன் போன்றது
சூரியனை மறந்து போன சூட்சமும் உண்டு
சிலர் வாழ்வில்//
தங்களின் வருகையும்,அன்பான வாழ்த்துரையும் பார்த்து மனம் மகிழ்ந்து போனேன் ...
மிக்க நன்றிங்க .... மேடம் ....
சி.பிரேம் குமார் சொன்னது…
"Un uthattu rekaikalil ontraka mari vida asai" arumaiana karpanai alakana varikal arumai//
வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே ...
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…
உங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தி உள்ளேன். வருகை தரவும்...//
அண்ணே உங்களின் அன்புக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல ....
இவை எல்லாமே நீங்கள் அவள்(ர்) மீது கொண்டிருக்கும் அன்பினை காட்டுகிறது அரசன்...
அது இங்கே வரிகளில் வார்த்தைகளாக நேரடியாக இல்லாமல் போனாலும்...
அன்பு
நான்கினை சொல்லி ஒன்றினை
சொல்லாமல் போனேன் உன்னிடம்
எந்தன் மனது சிக்கிக்கொண்டதை...
பாராட்டுகள் அரசன்... மேலும் பல கவிகள் தந்திட வாழ்த்துகள்...
//பிரம்மனை கண்டித்து ஊர்வலமாம்,
மொத்த அழகையும் உன்னிடம்
படைத்ததினால்...//
இருக்காதா பின்னே ...
உம் காதலிபோல்
வேறு ஒருவர்
இருந்து விட்டால்
சிக்கல் தானே .
அதனால் தான்
தஞ்சை.வாசன் சொன்னது…
இவை எல்லாமே நீங்கள் அவள்(ர்) மீது கொண்டிருக்கும் அன்பினை காட்டுகிறது அரசன்...
அது இங்கே வரிகளில் வார்த்தைகளாக நேரடியாக இல்லாமல் போனாலும்...
அன்பு
நான்கினை சொல்லி ஒன்றினை
சொல்லாமல் போனேன் உன்னிடம்
எந்தன் மனது சிக்கிக்கொண்டதை...
பாராட்டுகள் அரசன்... மேலும் பல கவிகள் தந்திட வாழ்த்துகள்...//
அண்ணே வாங்க ... வருகைக்கும் , வளமான வாழ்த்துரை வழங்கி வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி அண்ணே ...
polurdhayanithi சொன்னது…
//பிரம்மனை கண்டித்து ஊர்வலமாம்,
மொத்த அழகையும் உன்னிடம்
படைத்ததினால்...//
இருக்காதா பின்னே ...
உம் காதலிபோல்
வேறு ஒருவர்
இருந்து விட்டால்
சிக்கல் தானே .
அதனால் தான்
//
வாருங்கள் போளூர் தயா...
கண்டிப்பாக நீங்கள் கூறுவதும் சரிதான் ...
வந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி ....
எல்லா கவிதையும் சூப்பர் அரசன்..
r.v.saravanan சொன்னது…
எல்லா கவிதையும் சூப்பர் அரசன்.//
மிக்க நன்றிங்க ...
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இதயங்கனிந்த இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணே........
வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் வாழ இன்னும் மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்..///////////
உங்களுக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்
இன்றும் நாளையும் யார் எந்த பதிவு போட்டாலும் அதற்க்கான பின்னூட்டம் மட்டும் டெம்ப்ளேட் பின்னூட்டம்தான். அது
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
மாணவன் சொன்னது…
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இதயங்கனிந்த இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணே........
வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் வாழ இன்னும் மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்..///////////
நன்றி அண்ணே ... உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
நா.மணிவண்ணன் சொன்னது…
உங்களுக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்//
நன்றி தோழா ... சார் எல்லாம் வேண்டாம் அரசன் என்று கூப்பிடுங்கள் அப்போதான் நட்பு நெருக்கமாகும்..
உங்களுக்கும் , குடும்பத்திற்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...
ரஹீம் கஸாலி சொன்னது…
இன்றும் நாளையும் யார் எந்த பதிவு போட்டாலும் அதற்க்கான பின்னூட்டம் மட்டும் டெம்ப்ளேட் பின்னூட்டம்தான். அது
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
//
உண்மை தாங்க .... உங்களுக்கும் உறவுகளுக்கும் ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
அன்பின் அரசன், நான்கு குறுங்கவிதைகளில் அழகாக காதலைச் சொல்லும் விதம் நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அன்பின் அரசன் - இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாப்
cheena (சீனா) சொன்னது…
அன்பின் அரசன், நான்கு குறுங்கவிதைகளில் அழகாக காதலைச் சொல்லும் விதம் நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//
மிக்க நன்றி ... உங்களின் வளமான வருகைக்கும் , அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க அய்யா ...
cheena (சீனா) சொன்னது…
அன்பின் அரசன் - இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாப்//
அன்பான சீனா அவர்களுக்கு எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல வாழ்த்துக்கள் ....
கவிதை அருமையாய் படைத்துள்ளீர்கள்.தங்களுக்கு
என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்..
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....
பொறாமை, கோபம் இரண்டுமே அருமையான கற்பனைகள்.
பொறாமை, கோபம் இரண்டுமே அருமையான கற்பனைகள்.
//நீ சிந்திப்போகும் அழகை
கூடவே வந்து அள்ளிக்கொண்டு போகும்
உன் நிழலின் மேல் ...//
அரசன்,
தொடரும் நிழலுக்கான விளக்கம் அழகாய் இருக்கிறது.
சகோதரனுக்கு புத்தாண்டு வாழ்த்துகள்
Kalidoss சொன்னது…
கவிதை அருமையாய் படைத்துள்ளீர்கள்.தங்களுக்கு
என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்..//
மிக்க நன்றிங்க ... அன்பான வருகைக்கும், பாசமான வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க..
பிரஷா சொன்னது…
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....//
உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ..
சுப்பு சொன்னது…
பொறாமை, கோபம் இரண்டுமே அருமையான கற்பனைகள்.//
உங்களின் அன்பு நிறைந்த வாழ்த்துக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள் ....
சத்ரியன் சொன்னது…
//நீ சிந்திப்போகும் அழகை
கூடவே வந்து அள்ளிக்கொண்டு போகும்
உன் நிழலின் மேல் ...//
அரசன்,
தொடரும் நிழலுக்கான விளக்கம் அழகாய் இருக்கிறது.
சகோதரனுக்கு புத்தாண்டு வாழ்த்துகள்//
அண்ணனின் நல் வருகைக்கும் , அன்பு கலந்த வாழ்த்துக்களுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள் ...
உங்களுக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ....
மிக்க நன்றிங்க அண்ணே...
ஆஹா...
20 வரிகளில் கூற வேண்டியதை மிக
சுருக்கமாய் 7, 8 வரிகளில்
'நறுக்'கென்று அதேசமயம்
'பளிச்'சென்று கூறும்
உங்கள் கவிதை பாணி
வரவேற்கத்தக்கது.
உங்களுக்கு(ம் உங்கள் காதலிக்கு)ம்
உங்கள் குடும்பத்தினருக்கும்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
NIZAMUDEEN சொன்னது…
ஆஹா...
20 வரிகளில் கூற வேண்டியதை மிக
சுருக்கமாய் 7, 8 வரிகளில்
'நறுக்'கென்று அதேசமயம்
'பளிச்'சென்று கூறும்
உங்கள் கவிதை பாணி
வரவேற்கத்தக்கது.
உங்களுக்கு(ம் உங்கள் காதலிக்கு)ம்
உங்கள் குடும்பத்தினருக்கும்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!//
வாருங்கள் தோழமையே ....
சிறப்பான வருகைக்கும், செழிப்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க...
உங்களுக்கும் , குடுபத்தார்க்கும் , மற்றும் உறவுகளுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ....
ஆசை:
எங்க அக்கா வாங்குன சேலை மாதிரியே எனக்கும்....
கோபம்:
உங்க அம்மாவை நினைச்சாலே....
சந்தேகம்:
ஹலோ, உங்க ஜிமெயில் பாஸ்வேர்டை எனக்கு இம்ம்ம்ம்மீடியட்டா மெஸேஜ் பண்ணிவிடுங்க..!
பொறாமை:
அவளும் அவ போட்டிருக்கிற லெக்கிங்ஸ்ஸும்.. அரிசி மூட்டைக்கு பெயிண்ட் அடிச்ச மாதிரியில்லே..??
அவளைப்பற்றி..... கல்யாணத்துக்கு அப்புறம் இப்படி ஆயிடறாங்க பாஸ்!!
புத்தாண்டு வாழ்த்துக்கள் அரசன்!
அரசன் அவர்களுக்கு ரோஜாப்பூந்தோட்டத்தின் சார்பில் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
பொறமை தான் மிக அருமையாக உங்கள் மீது பொறாமையைத் தூண்டுகிறது.
ஜெகநாதன் சொன்னது…
ஆசை:
எங்க அக்கா வாங்குன சேலை மாதிரியே எனக்கும்....
கோபம்:
உங்க அம்மாவை நினைச்சாலே....
சந்தேகம்:
ஹலோ, உங்க ஜிமெயில் பாஸ்வேர்டை எனக்கு இம்ம்ம்ம்மீடியட்டா மெஸேஜ் பண்ணிவிடுங்க..!
பொறாமை:
அவளும் அவ போட்டிருக்கிற லெக்கிங்ஸ்ஸும்.. அரிசி மூட்டைக்கு பெயிண்ட் அடிச்ச மாதிரியில்லே..??
அவளைப்பற்றி..... கல்யாணத்துக்கு அப்புறம் இப்படி ஆயிடறாங்க பாஸ்!!
புத்தாண்டு வாழ்த்துக்கள் அரசன்!
//
உண்மையில் சிலரது காதல் திருமணம் அப்படிதான் பின்பு மாறி வாழ்க்கையில் பிளவு உண்டாகிறது ...
மிக்க நன்றிங்க நண்பரே .... வருகைக்கும் , வாழ்த்துக்கும் ...
உங்களுக்கும் ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ..
பாரத்... பாரதி... சொன்னது…
அரசன் அவர்களுக்கு ரோஜாப்பூந்தோட்டத்தின் சார்பில் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.//
மிக்க நன்றிங்க ... உங்களுக்கும் உங்கள் உறவுகளுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ....
பாரத்... பாரதி... சொன்னது…
பொறமை தான் மிக அருமையாக உங்கள் மீது பொறாமையைத் தூண்டுகிறது.//
அன்பான வருகைக்கும், ஆசி நிறைந்த வாழ்த்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல....
மிக்க நன்றிங்க
superb :)
ஜெ.ஜெ சொன்னது…
superb :)//
நன்றி நன்றி நன்றி
பொறாமை கவி மிகவும் அருமை....
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
வெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி ?? (செய்முறையுடன்)
ம.தி.சுதா சொன்னது…
பொறாமை கவி மிகவும் அருமை....
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.//
மிக்க நன்றி சகோ ...
வருகைக்கும் , வளமான வாழ்த்துக்கும் மிக்க நன்றி ...
nice arasan, keep on writting.
கோநா சொன்னது…
nice arasan, keep on writting.//
Thank you so much..
ஆசை கோபம் சந்தேகம் பொறாமை
அருமையா இருந்துச்சு வாழ்த்த வார்த்தைகளே வரல
உணர்ச்சிகள் ஒவ்வொன்றும் அருமை.
hai anna its very nice
சிவகுமாரன் சொன்னது…
இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
மகிழ்வான முத்தாண்டாய்
மனங்களின் ஒத்தாண்டாய்
வளங்களின் சத்தாண்டாய்
வாய்மையில் சுத்தாண்டாய் மொத்தத்தில்
வெத்தாண்டாய் இல்லாமல்
வெற்றிக்கு வித்தாண்டாய்
விளங்கட்டும் புத்தாண்டு//
நன்றி நண்பரே வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
தமிழ்த்தோட்டம் சொன்னது…
ஆசை கோபம் சந்தேகம் பொறாமை
அருமையா இருந்துச்சு வாழ்த்த வார்த்தைகளே வரல//
மிக்க நன்றி நண்பா
கனாக்காதலன் சொன்னது…
உணர்ச்சிகள் ஒவ்வொன்றும் அருமை//
அன்பான வாழ்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்
priya சொன்னது…
hai anna its very nice//
Thank you so much priya
கருத்துரையிடுக