புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜூலை 30, 2012

உன் செல்ல குறும்புகள்...


மெல்ல வந்து 
கன்னம் வருடி 
நீ 
என்னை களவாட 
தீண்டுகையில்,
அதிர்வுற்று நான் 
அலறி விழித்தேன்,
அருகில் உறங்கி 
கொண்டிருந்த அம்மா 
என்னவென்று 
கேட்கையில்,
எப்படி நான் கூறுவேன் 
நித்தம் இம்சிக்கும் 

உன் செல்ல 
குறும்புகளை!





Post Comment

ஜூலை 27, 2012

சென்னை பதிவர்கள் சந்திப்பு - ஆலோசனை கூட்டம்



சென்னை பதிவர்கள் சந்திப்பு - ஆலோசனை கூட்டம் 
வருகிற ஆகஸ்ட் 19 நடைபெற இருக்கும் தமிழ் வலைபதிவர்கள் சந்திப்பு 
குறித்து ஆலோசனை கூட்டம் வரும் ஞாயிறு அன்று நடைபெற இருக்கின்றது பதிவர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..


நாள் : 29.07.2012 ஞாயிறு மாலை 3.00 


இடம் : டிஸ்கவரி புக் பேலஸ் 
பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில் 
முனுசாமி சாலை 
கே கே நகர் ,
சென்னை - 600078
மேலும் விபரங்களுக்கு : திரு. மதுமதி (தூரிகையின் தூறல்) அவர்களின் பக்கத்தில் பாருங்கள்






நான் இரசித்த பாடல் (6)..




படம் : பாஞ்சாலங்குறிச்சி 


பாடல் : உன் உதட்டோர சிவப்பே 


இசை : தேனிசை தென்றல் தேவா 

இந்த பாடலை நான் இரவு நேர தொலைதூர பேருந்து பயணத்தில் ஒரு நாள் கேட்க நேர்ந்தது. அப்படியே உறைந்து விட்டேன், நேர்த்தியான வரிகளை கொண்ட இனிமை ததும்பும் அருமையான பாடல்...


உள்ளம் கொள்ளை கொள்ளும் பாடலிது ...


ஆரம்ப  வரிகள் 


//உன் உதட்டோர சிவப்பே 
அந்த மருதாணி கடனா கேட்கும் .. கடனா கேட்கும் ..
நீ சிரிச்சாலே சில நேரம் 
அந்த உளவு பார்க்கும் உளவு பார்க்கும் ..//


பாடல் முழுதும் மிக மெல்லிய வரிகளையே பயன் படுத்தி இருக்கின்றார் கவிஞர்... 
அந்த மருதாணி சிவப்ப போல இந்த பாடலும் மனசுல செவக்க வைக்குது .


அடுத்து 


உன் நெனப்பு தான் நெஞ்சுக்குள்ள பச்ச குத்துது 
அட உன் கிறுக்குல எனக்கு இந்த பூமி சுத்துது  //


சிங்கம், புலி , கரடி கண்டா சேர்த்தடிக்க கை துடிக்கும் 
பொட்டுக்கண்ணி உன்ன கண்டா புலி கூட தொட நடுங்கும்//


வழக்கு மொழியை பயன்படுத்தி முழு பாடலையும் வழங்கிய கவிஞரை உள்ளம் கரைந்து வாழ்த்துகிறேன். 


பிறகு இந்த வரிகளுக்கு உயிர் கொடுத்தவர்கள் திரு. ஹரிஹரனும் , திருமதி. அனுராதா ஸ்ரீராம்..இவர்களின் குரல் வளத்தில் இந்த பாடலை 
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் சலிப்பு வரவே இல்லை..


தேனிசைத் தென்றல் தேவா இவ்வரிகளுக்கு உயிர் மூச்சை வழங்கியவர், இவரின் மென்மையான இசையில் வரிகள் சிதறாமல் நம்மை சிறகடிக்க வைக்கின்றது அவருக்கும் எனது வாழ்த்துக்களை கூறிகொள்கிறேன்.


இறுதியாக இந்த மாதிரி ஒரு பாடலை வைக்க வேண்டும் என்று விரும்பிய இயக்குனர் திரு. சீமான் அவர்களுக்கும் உள்ளம் நிறைந்த நன்றிகள்... 


இந்த பாடலை எழுதியவர் யாரென்று நானும் பலமுறை தேடிவிட்டேன் 
எங்கும் சிக்கவில்லை ... இந்த மாதிரி ஒரு ரம்மியமான பாடலை எழுதிய கவிஞர் அவர்களுக்கு என் உள்ளம் கசிந்த என் நன்றிகளும்  வாழ்த்துக்களும்...


உங்களுக்கு தெரிந்தால் இந்த வரிகளின் சொந்தக்காரரை கருத்துரையில் தெரிவியுங்கள் தோழமைகளே!!!




நன்றி : you  tube 













Post Comment

ஜூலை 25, 2012

விரும்பி சொன்னவைகள்.(சத்தியமா அரசியல் அல்ல)







அசாம் மாநில குழந்தைகள் தமிழ் பாடம் படிக்க அதிக ஆர்வம்//

இவங்களாவது படிக்க ஆசைபடுதுக ...
நம்ம புள்ளைக தான் வெட்கபடுதுக



ஹசாரே குழுவின் உண்ணாவிரதம் நியாயமற்றது: வீரப்ப மொய்லி//

நீங்க(காங்கிரஸ்) ரொம்ப நியாயமானவங்கதான்  .. 
லண்டன் டைம்ஸ் ல கூட போனவாரம் சொல்லிருந்தாங்க ..



தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் மின் தடை பிரச்னை தீரும்//

அப்படியே எந்த வருடத்தில் என்றும் சொல்லிடுங்களேன் 


நிலமையை சமாளிக்க கூடுதலாக மின்வெட்டு: பொதுமக்களின் அசவுகரியங்களுக்கு மின்சாரவாரியம் வருத்தம்//
உங்க கடமை உணர்ச்சியை கண்டு புல்லரிக்கின்றது ,....


வாக்களித்த ரகசியத்தை வெளியே சொன்னால் வாக்குகள் செல்லாது: ஜனாதிபதி தேர்தல் விதிமுறைகள்//

ஊருக்கே தெரிஞ்ச விசயத்தை வெளியில் சொல்லி தான் தெரியணுமா???


குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு: மம்தா பானர்ஜி அறிவிப்பு//
எதுக்கு இந்த வறட்டு கௌரவம் ... அப்பவே ஒத்திருக்கலாமில்ல ...


தேமுதிக வென்றுள்ள தொகுதிகளை அதிமுக அரசு புறக்கணிக்கிறது: எழும்பூர் எம்எல்ஏ குற்றச்சாட்டு//

அட போங்க பாஸ் அது என்னைக்கோ எங்களுக்கு தெரியும்...


நித்யானந்தா சீடர்கள் மீது மதுரை ஆதீனம் அதிருப்தி//


எல்லா பதறுகளையும் தூக்கி உள்ளார போட்டுட்டு , சொத்தை எல்லாம் அரசுடமை ஆக்கிட்டா இந்த பிரச்சினைக்கே இடமிருக்காது ...


அரசியல் வாரிசு இல்லாத கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம்: பாரிவேந்தர் //
எப்பவுமே நீங்க தேர்தல சந்திக்க மாட்டிங்க என்று சொல்லுங்க ...



தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்பதே தி.மு.க.வின் குறிக்கோள்: கலைஞர்//
அய்யயோ இவருக்கு என்னமோ ஆச்சு ... நேத்து ஒன்னு , இன்னைக்கு ஒன்னு இப்படி ஏதேதோ சொல்லிக்கிட்டு அவரும் குழம்புறார் , அடுத்தவரையும் குழப்ப பாக்குறார் 




(இதில் வேறு உள்குத்தும் இல்ல, சும்மா என் கருத்தை இதில் பதிவு செய்கிறேன் அட சத்தியமா நம்புங்க நான் வாக்கு கேட்டு உங்களை எல்லாம் தொந்தரவு பண்ணமாட்டேன் , முக்கியமா இலவசம் தருவேன் என்றும் சொல்ல மாட்டேன்)

Post Comment

ஜூலை 17, 2012

செம்மண் தேவதை # 2 (தேக நறுமணம்)





புற்கட்டு 
சுமந்து வந்த களைப்பில் 
அரும்பி வழியும் 
வியர்வைத் துளிகளை,
தாவணி முனையில் 
ஒற்றி எடுத்தாய்!

அறிந்து கொண்டேன், 
தேவதை உன் 
தேக நறுமணத்திற்கு 
காரணம் எதுவென்று!




*********************************************************************************




என் நண்பன் ஜானி அஹ்மத் முதல் முயற்சியாய்,அவரே பாடல் எழுதி, பாடியும் இருக்கின்றார்... அதையும் ஒருமுறை நீங்கள் கேட்டு பாருங்கள் தோழமைகளே! 




  

Post Comment

ஜூலை 10, 2012

கருத்த பேரழகா...



பகிர்ந்து கொள்ள 
ஆசைகள் நூறிருந்தும் ,
நீ 
பக்கம் வருகையில்,
நடுக்கம் கூடுதடா,
ஏனோ 
நாவரண்டும்  போகுதடா,

உள்ளத்து உணர்வுகளை 
உன்னிடம், 
உரைக்காமல் விடை 
பெறுகையில் 
நெஞ்சம் வலியில் 
துடிக்குதடா,
உயிரும் 
"கொஞ்சமாய் பிரியுதடா"

சொல்லாமல் போன 
சொற்களின் சுமை 
கூடினாலும், இன்னுமொரு 
சுப தினத்திற்காய் 
காத்திருக்கிறேனடா 

"என் கருத்த 
பேரழகா" ...

Post Comment

ஜூலை 02, 2012

உன் விழி மோதிய பின்பு...




Post Comment