புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜூலை 27, 2012

சென்னை பதிவர்கள் சந்திப்பு - ஆலோசனை கூட்டம்



சென்னை பதிவர்கள் சந்திப்பு - ஆலோசனை கூட்டம் 
வருகிற ஆகஸ்ட் 19 நடைபெற இருக்கும் தமிழ் வலைபதிவர்கள் சந்திப்பு 
குறித்து ஆலோசனை கூட்டம் வரும் ஞாயிறு அன்று நடைபெற இருக்கின்றது பதிவர்கள் அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..


நாள் : 29.07.2012 ஞாயிறு மாலை 3.00 


இடம் : டிஸ்கவரி புக் பேலஸ் 
பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில் 
முனுசாமி சாலை 
கே கே நகர் ,
சென்னை - 600078
மேலும் விபரங்களுக்கு : திரு. மதுமதி (தூரிகையின் தூறல்) அவர்களின் பக்கத்தில் பாருங்கள்






நான் இரசித்த பாடல் (6)..




படம் : பாஞ்சாலங்குறிச்சி 


பாடல் : உன் உதட்டோர சிவப்பே 


இசை : தேனிசை தென்றல் தேவா 

இந்த பாடலை நான் இரவு நேர தொலைதூர பேருந்து பயணத்தில் ஒரு நாள் கேட்க நேர்ந்தது. அப்படியே உறைந்து விட்டேன், நேர்த்தியான வரிகளை கொண்ட இனிமை ததும்பும் அருமையான பாடல்...


உள்ளம் கொள்ளை கொள்ளும் பாடலிது ...


ஆரம்ப  வரிகள் 


//உன் உதட்டோர சிவப்பே 
அந்த மருதாணி கடனா கேட்கும் .. கடனா கேட்கும் ..
நீ சிரிச்சாலே சில நேரம் 
அந்த உளவு பார்க்கும் உளவு பார்க்கும் ..//


பாடல் முழுதும் மிக மெல்லிய வரிகளையே பயன் படுத்தி இருக்கின்றார் கவிஞர்... 
அந்த மருதாணி சிவப்ப போல இந்த பாடலும் மனசுல செவக்க வைக்குது .


அடுத்து 


உன் நெனப்பு தான் நெஞ்சுக்குள்ள பச்ச குத்துது 
அட உன் கிறுக்குல எனக்கு இந்த பூமி சுத்துது  //


சிங்கம், புலி , கரடி கண்டா சேர்த்தடிக்க கை துடிக்கும் 
பொட்டுக்கண்ணி உன்ன கண்டா புலி கூட தொட நடுங்கும்//


வழக்கு மொழியை பயன்படுத்தி முழு பாடலையும் வழங்கிய கவிஞரை உள்ளம் கரைந்து வாழ்த்துகிறேன். 


பிறகு இந்த வரிகளுக்கு உயிர் கொடுத்தவர்கள் திரு. ஹரிஹரனும் , திருமதி. அனுராதா ஸ்ரீராம்..இவர்களின் குரல் வளத்தில் இந்த பாடலை 
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் சலிப்பு வரவே இல்லை..


தேனிசைத் தென்றல் தேவா இவ்வரிகளுக்கு உயிர் மூச்சை வழங்கியவர், இவரின் மென்மையான இசையில் வரிகள் சிதறாமல் நம்மை சிறகடிக்க வைக்கின்றது அவருக்கும் எனது வாழ்த்துக்களை கூறிகொள்கிறேன்.


இறுதியாக இந்த மாதிரி ஒரு பாடலை வைக்க வேண்டும் என்று விரும்பிய இயக்குனர் திரு. சீமான் அவர்களுக்கும் உள்ளம் நிறைந்த நன்றிகள்... 


இந்த பாடலை எழுதியவர் யாரென்று நானும் பலமுறை தேடிவிட்டேன் 
எங்கும் சிக்கவில்லை ... இந்த மாதிரி ஒரு ரம்மியமான பாடலை எழுதிய கவிஞர் அவர்களுக்கு என் உள்ளம் கசிந்த என் நன்றிகளும்  வாழ்த்துக்களும்...


உங்களுக்கு தெரிந்தால் இந்த வரிகளின் சொந்தக்காரரை கருத்துரையில் தெரிவியுங்கள் தோழமைகளே!!!




நன்றி : you  tube 













Post Comment

19 கருத்துரைகள்..:

r.v.saravanan சொன்னது…

my favourite song arasan thanks for this article

MARI The Great சொன்னது…

பாடல் அருமை!

பதிவர்கள் சந்திப்பு தித்திப்பாக நல்வாழ்த்துக்கள்! (TM 2)

பெயரில்லா சொன்னது…

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ அரசன் எப்புறி இக்குரிங்க ...


ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்து இருகீனே ஏதும் கவனிக்க மாடீன்களா ...


மீ க்கும் சென்னை தான் அரசன் ...மீ யும் வயலமா ....

பாட்டு உங்களுக்கு மட்டும் எப்படி அரசன் சூப்பர் சுப்பெரா தேரியுது ....

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பதிவர் சந்திப்பு சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்.

அருமையான பாட்டு... எழுதியவர் : சினேகன் அவர்கள்.

நன்றி. (த.ம. 3)

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பதிவர்கள் சந்திப்புக்கு வாழ்த்துகள்....

பாட்டும் மிக அருமை...!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

இதுவரை கேட்ட நினைவு இல்லை.
இப்போதுதான் முதல் முறையாக கேட்கிறேன்.அருமை.

சத்ரியன் சொன்னது…

எனக்கும் பிடிக்கும் அரசன் அண்ணே.

கவி அழகன் சொன்னது…

Arumaiyaana padal varikal

குறையொன்றுமில்லை. சொன்னது…

பதிவர்கள் சந்திப்புக்கு வாழ்த்துகள்

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
my favourite song arasan thanks for this article//

thank u sir

arasan சொன்னது…

வரலாற்று சுவடுகள் கூறியது...
பாடல் அருமை!

பதிவர்கள் சந்திப்பு தித்திப்பாக நல்வாழ்த்துக்கள்! (TM 2)//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

கலை கூறியது...
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ அரசன் எப்புறி இக்குரிங்க ...


ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்து இருகீனே ஏதும் கவனிக்க மாடீன்களா ...


மீ க்கும் சென்னை தான் அரசன் ...மீ யும் வயலமா ....

பாட்டு உங்களுக்கு மட்டும் எப்படி அரசன் சூப்பர் சுப்பெரா தேரியுது ..//

வாங்க வாங்க கலை ..
ரொம்ப நாளாச்சே .. நீங்க இந்த பக்கம் வந்து ... எப்படி இருக்கீக ..

நீங்களும் வரலாமே .. யார் கூடாது என்று சொல்வது ..
விரைவில் உங்களின் வருகையை உறுதி செய்யுங்கள் ...

பாடல் எல்லாம் எங்கோ கேட்பது ,.. அப்படியே ரசித்தும் விடுவது ... அவ்வளவு தான்

arasan சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
பதிவர் சந்திப்பு சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்.

அருமையான பாட்டு... எழுதியவர் : சினேகன் அவர்கள்.

நன்றி. (த.ம. 3)//

தகவலுக்கு என் நன்றிகள் சார்

arasan சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...
பதிவர்கள் சந்திப்புக்கு வாழ்த்துகள்....

பாட்டும் மிக அருமை...!//

நன்றிங்க அண்ணே

arasan சொன்னது…

T.N.MURALIDHARAN கூறியது...
இதுவரை கேட்ட நினைவு இல்லை.
இப்போதுதான் முதல் முறையாக கேட்கிறேன்.அருமை.//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

சத்ரியன் கூறியது...
எனக்கும் பிடிக்கும் அரசன் அண்ணே.//

என்ன அண்ணே .. என்னை போய் அண்ணே என்று கூறிவிட்டிர்கள்.. நான் எப்போதும் உங்களின் தம்பி தான்

arasan சொன்னது…

கவி அழகன் கூறியது...
Arumaiyaana padal varikal//

நன்றிங்க கவி அழகரே

arasan சொன்னது…

Lakshmi கூறியது...
பதிவர்கள் சந்திப்புக்கு வாழ்த்துகள்//

நன்றிங்க அம்மா

உழவன் சொன்னது…

பதிவர் சந்திப்பு சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்...