புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

மார்ச் 22, 2011

நான் இரசித்த பாடல் ....


படம்: பாண்டவர் பூமி 

பாடல் : தோழா! தோழா!...

இசை : திரு. பரத்வாஜ் 

வரிகளுக்கு சொந்தக்காரர்: கவி. சினேகன்...

இந்த திரைப்படம் வெளியாகி பத்து வருடங்கள் ஆகிவிட்டன ..என்றாலும் 
இந்த பாடல் வரிகள் இன்னும் நெஞ்சை விட்டு அகல மறுக்கின்றது ...
சிநேகனின் திரையுலக பயணத்துக்கு இது ஒரு ஆரம்ப படி கட்டு என்றே 
சொல்லலாம் ... நட்பை பற்றி மிக அழகாய் சொல்லியவர்களுக்கு மத்தியில் 
ஆணுக்கும் , பெண்ணுக்கும் உள்ள நட்பை மெல்லிதாய் , உணர்வு பூர்வமாய் 
செதுக்கி வரிகளில் வடித்து நமக்கு வழங்கி இருப்பார் இந்த நட்பு மனிதர் ...

ஆரம்பிக்கும் வரிகளே, 

"தோழா! தோழா! 
கனவு தோழா!
தோழா! தோழா!
தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்!
நட்பை பத்தி நாமும் பேசி தீர்த்துக்கணும்!"

ஒரு வித பிடிமானத்தை மனதுக்குள் விதைத்து 
உள்ளே அழைத்து செல்கிறது ....

அடுத்த வரிகளில் ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் 
காதல் மட்டும்தான் வரணுமா? ஏன் நட்பு அங்கு இருக்க கூடாதா?
என்கிற புரட்சி விதையை தூவி விட்டு செல்கிறார்...

அடுத்து நட்பின் பெருமையை தூக்கி நிறுத்துகிறார்...
நட்புக்கும், காதலுக்கும் உள்ள நூலிழை இடைவெளியை 
எளிமையாய் அதே நேரத்தில் புதுமையாய் கூறி இருக்கின்றார் 
இந்த புது மனிதர் ...

"பிரிந்து போன நட்பினை கேட்டால் 
பசுமையான கதைகளை சொல்லும்!
பிரியமான காதலும் கூட 
பிரிந்த பின் ரணமாய் கொல்லும்!"

இந்த வரிகளை கேட்கும் போது 
மனதுக்கு ஒரு இதமான சுகத்தை தருகிறது ...
உணர்வு கலந்த வரிகளை எளிமையாய் 
தந்திருக்கும் விதம் உன்னதம் ...

அடுத்து ஆண் கேட்பது போல் வரிகளை 
கொடுத்திருப்பார் ...

காதல் ஒன்றும் தவறில்லை 
காதல் இன்றி மனிதரும் இல்லை 
இப்படி காதலையும் சிறப்புற சொல்லி உள்ளத்தை
சிறகடிக்க செய்திருப்பார் இந்த சிநேக மனிதர் ...

"பிரிதலில் காதலை சொல்லுமடி 
நட்பின் வழியிலே 
காதல் வளருமே!"

நட்பின் ஊடே காதலும் வளரும் 
நண்பர்கள் கூட காதலர்களாய் மாறியது உண்டு என்று 
செழிப்பான வரிகளை இணைத்து கிறங்கடிக்க வைத்திருப்பார் ... 
அனைவரது எண்ணங்களையும், ரசனைகளையும் கட்டிப்போட முயன்றிருப்பார் ...

இறுதியில் பெண்ணின் ஆசைக்கு 
மறுப்பின்றி ஆணும் பெண்ணும் பழகிக்கலாம் 
அதை ஆயுள்வரைக்கும் களங்கப்படாமல்
பார்த்துக்கலாம் என்று முடியும் வரிகள் 
ஏதோ ஒரு இனம்புரியா தாக்கத்தை தூண்டி செல்லும் ...

 இந்த வரிகளுக்கு தமது கானக்குரலில்  உயிர் கொடுத்திருப்பார்கள் 
திரு. யுகேந்திரன் மற்றும் சித்ரா சிவராமன்...
இவர்களின் குரல்களில் வரிகள் மனதை வருடிச்செல்லும் ...

இந்த வரிகளுக்கு மெதுவான மெல்லிசை அமைத்து 
காதுகள் கலங்கப்படாமல் மேலும் அழகு சேர்த்து நம்மை கட்டி போட்டு 
மீண்டும் மீண்டும் இந்த கானத்தை கேட்க தூண்டுவார் இசை அமைப்பாளர் 
திரு. பரத்வாஜ்...

இந்த பாடலை மிகவும் துல்லியமாகவும் ரசணை மிகுந்த காட்சி அமைப்புகளிலும் 
நம் கண்ணை கவர்ந்து செல்வார் படத்தின் ஒளிப்பதிவாளர் திரு. தங்கர் பச்சான் ...

துல்லியமாய் படத்தையும், பாடலையும் கொடுத்திருப்பார் இயக்குனர் திரு. சேரன் ...

மொத்தத்தில் இசை அரசருக்கு பின் 
 நான் மிகவும் ரசித்த பாடல்களில் இதுவும் ஒன்று ...

எனது ஆசைகளை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மிக்க 
மகிழ்ச்சி அடைகிறேன் நட்புகளே ..... 


நன்றி: கூகிள் இணையம் மற்றும் youtube

Post Comment

36 கருத்துரைகள்..:

thendralsaravanan சொன்னது…

சினிமா பாடல் விமர்ச்சனம் நன்றாகவே வருகிறது தம்பி உங்களுக்கு!
கரைத்தவரின் பலனா?!!!அனுபவித்து எழுதியுள்ளீர்கள்!
வாழ்த்துக்கள்!

தூயவனின் அடிமை சொன்னது…

//தோழா! தோழா!
கனவு தோழா!
தோழா! தோழா!
தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்!
நட்பை பத்தி நாமும் பேசி தீர்த்துக்கணும்!"//

சில பாடல்களில் வரும் சில வரிகள் நல்ல விசயங்களை கூறினாலும், எடுத்து கொள்ளும் விதம் தான் முக்கியம். இன்றை இளைய தலைமுறை நினைக்கும் பொழுது பயமாகவுள்ளது.

நிலாமதி சொன்னது…

முத்தான பாடலும் அதன் சத்தான விளக்கமும் அருமை . பாராட்டுக்கள.

ஹேமா சொன்னது…

எனக்கும் மிகவும் பிடித்த பாடல்.வரிக்கு வரி ரசித்து எழுதியிருக்கிறீர்கள் அரசன் !

வைகை சொன்னது…

இதைவிட அந்த படத்தில் எனக்கு பிடித்த பாடலென்றால் அது "அவரவர் வாழ்க்கையில் " என்ற பாடல்தான்!

Learn சொன்னது…

அருமை தோழா அருமை

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

r.v.saravanan சொன்னது…

பாடல் வரிகளை பற்றி பகிரும் இந்த முயற்சி அருமை நண்பரே தொடருங்கள் இது போல் தங்களை கவர்ந்த பாடல்களை வாழ்த்துக்கள்

r.v.saravanan சொன்னது…

இந்த பாடல் எனக்கு பிடித்த ஒன்று பரத்வாஜ் அவர்களின் இசை யில் எனை கவர்ந்த பாடல் இது

Unknown சொன்னது…

அருமையான பாடலும்.. அதன் விளக்கங்களும்.. நன்றி..

அன்புடன் நான் சொன்னது…

மிக உணர்ந்து எழுதியிருக்கிங்க..... நல்ல பாடல் நல்ல தெளிவுரை.... வாழ்த்துக்கள்

ரிஷபன் சொன்னது…

எனக்கும் மிகவும் பிடித்த பாட்டு..

சிவகுமாரன் சொன்னது…

எனக்கும் மிகவும் பிடித்த பாடல் இது. ஆனாலும் நிஜத்தில் இப்படி ஒரு நட்பு அமைவதும், அமைந்தாலும் அது காதலாய் மாறாமல் அவரவர் திருமணத்திற்குப் பின் தொடர்வதும் அபூர்வம்.

Prem S சொன்னது…

அப்படத்தின் இறுதியில் அவர்கள் காதலித்து மணமுடிப்பது போல் வரும் நண்பரே பாடல் முரண் படத்தில் ஆனால் வரிகள் அருமை

மாணவன் சொன்னது…

மிகவும் பிடித்த பாடல் தெளிவான ரசனையுடன்...அருமையான எழுத்து நடையுடன் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி

போளூர் தயாநிதி சொன்னது…

நல்ல தெளிவுரை.... வாழ்த்துக்கள்

மாலதி சொன்னது…

அருமையான பாடலும்.. அதன் விளக்கங்களும்.. நன்றி..

இன்றைய கவிதை சொன்னது…

உண்மை தான் தோழரே அருமையான பாடல் அவரவர் வாழ்க்கையில் என்ற பாடலும் இந்த படத்தில் மனதை தொடும்

நன்றி
ஜேகே

ம.தி.சுதா சொன்னது…

அருமையான பாடலை பகிர்ந்துள்ளீர்கள்.... நன்றி நன்றி....

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஈழத் தமிழனுக்கு கருணாநிதியில் பிடித்த ஒரே சம்பவம்

arasan சொன்னது…

thendralsaravanan சொன்னது…
சினிமா பாடல் விமர்ச்சனம் நன்றாகவே வருகிறது தம்பி உங்களுக்கு!
கரைத்தவரின் பலனா?!!!அனுபவித்து எழுதியுள்ளீர்கள்!
வாழ்த்துக்கள்!//

அக்கா வணக்கம் ...
முதல் வருகைக்கும் , வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க அக்கா ...
கரைத்தவரின் பலன் என்றும் கூறலாம் .. அக்கா..

arasan சொன்னது…

இளம் தூயவன் சொன்னது…
//தோழா! தோழா!
கனவு தோழா!
தோழா! தோழா!
தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்!
நட்பை பத்தி நாமும் பேசி தீர்த்துக்கணும்!"//

சில பாடல்களில் வரும் சில வரிகள் நல்ல விசயங்களை கூறினாலும், எடுத்து கொள்ளும் விதம் தான் முக்கியம். இன்றை இளைய தலைமுறை நினைக்கும் பொழுது பயமாகவுள்ளது.//

நிச்சயம் நீங்கள் கூறுவது உண்மைதான் தோழரே ...
வரும் தலைமுறைகளை நினைத்தால் பயமா இருக்குங்க ...

arasan சொன்னது…

நிலாமதி சொன்னது…
முத்தான பாடலும் அதன் சத்தான விளக்கமும் அருமை . பாராட்டுக்கள.//

நிறைவான வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் அக்கா ...

arasan சொன்னது…

ஹேமா சொன்னது…
எனக்கும் மிகவும் பிடித்த பாடல்.வரிக்கு வரி ரசித்து எழுதியிருக்கிறீர்கள் அரசன் !//

அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க மேடம் ..

arasan சொன்னது…

வைகை சொன்னது…
இதைவிட அந்த படத்தில் எனக்கு பிடித்த பாடலென்றால் அது "அவரவர் வாழ்க்கையில் " என்ற பாடல்தான்!//

உண்மைதான் அண்ணே...
அந்த பாடலும் மனதை கரைய வைக்கும் ..

arasan சொன்னது…

தமிழ்தோட்டம் சொன்னது…
அருமை தோழா அருமை

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in//

மிக்க நன்றிங்க நண்பா .//

arasan சொன்னது…

r.v.saravanan சொன்னது…
பாடல் வரிகளை பற்றி பகிரும் இந்த முயற்சி அருமை நண்பரே தொடருங்கள் இது போல் தங்களை கவர்ந்த பாடல்களை வாழ்த்துக்கள்//

அன்பு வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க சார்

arasan சொன்னது…

r.v.saravanan சொன்னது…
இந்த பாடல் எனக்கு பிடித்த ஒன்று பரத்வாஜ் அவர்களின் இசை யில் எனை கவர்ந்த பாடல் இது//

எனக்கும் ரொம்ப பிடிக்கும் சார் ..

arasan சொன்னது…

பதிவுலகில் பாபு சொன்னது…
அருமையான பாடலும்.. அதன் விளக்கங்களும்.. நன்றி..//

மிக்க நன்றிங்க நண்பா ..

arasan சொன்னது…

சி.கருணாகரசு சொன்னது…
மிக உணர்ந்து எழுதியிருக்கிங்க..... நல்ல பாடல் நல்ல தெளிவுரை.... வாழ்த்துக்கள்//

அன்பு வாழ்த்திற்கு மிக்க நன்றிங்க மாமா ...

arasan சொன்னது…

ரிஷபன் சொன்னது…
எனக்கும் மிகவும் பிடித்த பாட்டு..//

நன்றி நண்பரே ,..

arasan சொன்னது…

சிவகுமாரன் சொன்னது…
எனக்கும் மிகவும் பிடித்த பாடல் இது. ஆனாலும் நிஜத்தில் இப்படி ஒரு நட்பு அமைவதும், அமைந்தாலும் அது காதலாய் மாறாமல் அவரவர் திருமணத்திற்குப் பின் தொடர்வதும் அபூர்வம்.//

நமது சூழ்நிலையில் அவ்வளவு சுலபம் இல்லை நண்பரே ..
ஆணும் பெண்ணும் திருமணதிற்கு பின்னும் தமது நட்பை தொடர்வது ..

நன்றி நண்பா .

arasan சொன்னது…

சி.பிரேம் குமார் சொன்னது…
அப்படத்தின் இறுதியில் அவர்கள் காதலித்து மணமுடிப்பது போல் வரும் நண்பரே பாடல் முரண் படத்தில் ஆனால் வரிகள் அருமை//


உண்மைதான் ..

வரிகள் தான் ரசனை மிகு வரிகள் ...

arasan சொன்னது…

மாணவன் சொன்னது…
மிகவும் பிடித்த பாடல் தெளிவான ரசனையுடன்...அருமையான எழுத்து நடையுடன் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி//


நன்றி அண்ணே ...

arasan சொன்னது…

போளூர் தயாநிதி சொன்னது…
நல்ல தெளிவுரை.... வாழ்த்துக்கள்//


மிக்க நன்றிங்க நண்பரே ..

arasan சொன்னது…

malathi in sinthanaikal சொன்னது…
அருமையான பாடலும்.. அதன் விளக்கங்களும்.. நன்றி..//


மிக்க நன்றிங்க மேடம் ..

arasan சொன்னது…

இன்றைய கவிதை சொன்னது…
உண்மை தான் தோழரே அருமையான பாடல் அவரவர் வாழ்க்கையில் என்ற பாடலும் இந்த படத்தில் மனதை தொடும்

நன்றி
ஜேகே//


ஆம் நண்பரே ..

அந்த பாடலும் , இந்த பாடலும் நெஞ்சை அள்ளிச்செல்லும் ..

arasan சொன்னது…

♔ம.தி.சுதா♔ சொன்னது…
அருமையான பாடலை பகிர்ந்துள்ளீர்கள்.... நன்றி நன்றி....

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா//


வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க சகோதரம் ..