புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

மார்ச் 26, 2013

சினை மீனொன்றை ....


மகளின் 
இரண்டு மாத கரு சிதைந்ததை எண்ணி 
கடவுளை கரிந்துகொண்டே, 
கையிலிருந்த 
சினை மீனொன்றை 
நறுக்கி கொண்டிருக்கிறாள் 
மீன் கடைக்காரி!







அந்தியில் வீடு சேர்ந்த 
தாயிடம்,
தன் வேகங்கொண்ட மட்டும் 
 முட்டி முட்டி  
பால் குடிக்கும் 
இளங்கன்றை, 
வழியும் எச்சிலோடு 
பால் புட்டி தாங்கிய கரத்தோடு 
சன்னலின் ஊடாக நோக்குகிறது 
வேலைக்குச் சென்ற 
"எதிர் வீட்டாரின் 
ஒன்னரை வயது குழந்தை."


Post Comment

17 கருத்துரைகள்..:

Prem S சொன்னது…

கொஞ்சம் உறுத்துது பாஸ் மீன் கவிதை

Seeni சொன்னது…

irandum...


manathai uruththuthu......

arumai...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இங்கே அப்படி... அங்கே இப்படி.. இரண்டும் வருத்தப்பட வைக்கிறது...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

கவிதை நன்று. இரண்டாவது கவிதை மிக அருமை.

அம்பாளடியாள் சொன்னது…

மனதை வாட்டும் இரு வேறு துன்பங்கள் கவிதையில் புலப்பட்ட விதம் அருமை ! ...பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ .

jgmlanka சொன்னது…

அருமையான மிகப்பெரிய கருத்துக்களை சில வரிகளில் சொல்லியிருக்கிறீங்க... பாராட்டுக்கள்!

vimalanperali சொன்னது…

நல்ல ஒப்பீடு.வாழ்த்துக்கள்.

மகேந்திரன் சொன்னது…

இனிய வணக்கம் சகோதரரே...

முதல் கவிதை...
வாழ்வின் நிலைப்பாட்டிற்காக
முரண்பாட்டு மூட்டையாக நிற்கும்
ஒருவரின் நிதர்சனம்...

இரண்டாம் கவிதை
ஏக்கம் கொப்பளிக்கும்
மனம் கனக்கச் செய்யும்
உண்மையின் ஊற்று...

உழவன் சொன்னது…

வலியும் ஏக்கமும் மிகுந்த மனதை நெருடும் வரிகள் அண்ணே..

Unknown சொன்னது…

சூப்பர் கவிதை பாஸ்

பூ விழி சொன்னது…

யதார்த்தை சொல்லிய கவிதை

r.v.saravanan சொன்னது…

இரு கவிதைகளின் பொருளும் மனதை உறுத்துகிறது
கவிதைகளை நெஞ்சில் நிறுத்துகிறது

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இரண்டுமே மனதைத் தொட்டன நண்பரே.

சீனு சொன்னது…

என்ன ராசா சமுதாயத்துக்கு மெசேஜ்ஆ.... இது மாதிரி அடிக்கடி எழுதி எங்களை மகிழ்விக்கவும்

கீதமஞ்சரி சொன்னது…

முரண்கவிதைகளின் தாக்கம் இன்னும் மனம் அரித்துக்கொண்டே உள்ளது. இருவேறு வாழ்வியல் தத்துவங்களை வெளிப்படுத்தும் கவிதைகள் அருமை. பாராட்டுகள் அரசன்.

இராய செல்லப்பா சொன்னது…

அழகிய முரண்சுவை. இன்னும் இதுபோல் நிறைய எழுதுங்கள்.

வெற்றிவேல் சொன்னது…

அண்ணா மீன், குழந்தைக் கவிதை அட்டகாசம்... நான் திரும்பவும் பிளாக் வந்துட்டேன்.