புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

மார்ச் 04, 2013

இருட்டு முத்தம்... (Semman Devathai # 11)


திருட்டு மாங்காய்க்கு 

ருசி அதிகமென்று 
ஊரில் சொல்ல கேட்டிருக்கிறேன்,
அதையெல்லாம் பொய்யென்றது,

உன் இருட்டு முத்தம்...





களைக் கொத்த 
காட்டுக்கு சென்றவள் 
வீடு திரும்புகிறாள்.  
கையில் களைவெட்டியுடனும், 
கன்னத்தில் 

முத்தச்சுவடுகளுடனும்!

Post Comment

21 கருத்துரைகள்..:

சீனு சொன்னது…

ரொம்ப நாளா எடைக்கு மடக்கா கவிதை வரலையேன்னு நினைச்சேன்... சர்தான் வோய்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இருட்டில் முத்தம்! சரி தான்.... :)

இரண்டுமே நன்று!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

நச் கவிதைகள் அரசன்!
இரண்டாம் கவிதை மிக நன்று.
தவறாக நினைக்க வேண்டாம். முதல் கவிதையில் பொருள் முரண் இருப்பதாக தோன்றுகிறது..அல்லது எனக்கு மட்டும்தான் அப்படி தெரிகிறதா?
"அது உண்மை என்றது உன் இருட்டு முத்தம்" என்று இருக்க வேண்டுமோ?

arasan சொன்னது…

சீனு கூறியது...
ரொம்ப நாளா எடைக்கு மடக்கா கவிதை வரலையேன்னு நினைச்சேன்... சர்தான் வோய்//

எப்போதும் ஒரே மாதிரி இருந்தா எப்புடி சீனு .. அதான் சின்ன மாறுதல் ..

arasan சொன்னது…

வெங்கட் நாகராஜ் கூறியது...
இருட்டில் முத்தம்! சரி தான்.... :)

இரண்டுமே நன்று!//

நன்றிங்க சார்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இருட்டு முத்தம்...
சுவைத்தது இருமுறை...

arasan சொன்னது…

T.N.MURALIDHARAN கூறியது...
நச் கவிதைகள் அரசன்!
இரண்டாம் கவிதை மிக நன்று.
தவறாக நினைக்க வேண்டாம். முதல் கவிதையில் பொருள் முரண் இருப்பதாக தோன்றுகிறது..அல்லது எனக்கு மட்டும்தான் அப்படி தெரிகிறதா?
"அது உண்மை என்றது உன் இருட்டு முத்தம்" என்று இருக்க வேண்டுமோ?//

சார் நான் சொல்ல வருவது திருட்டு மாங்காயின் ருசியை விட உன் இருட்டு முத்த ருசி இன்னும் கூடுதலாக இருக்கிறது என்று ... அதனால் உண்மை என்று சொன்னால் முத்த சுவையும் , திருட்டு மாங்காய் சுவையும் ஒரே விகிதத்தில் இருப்பதாக பொருள் வரும் ..
எனவே அவளின் இருட்டு முத்தம் திருட்டு மாங்காயின் ருசியை பின்னுக்கு தள்ளி விடுவதாய்
நினைத்து கிறுக்கியது இவ்வரிகள் ... நன்றிங்க சார்

rajamelaiyur சொன்னது…

ஊரில் நீங்க செய்த அட்டுழியத்த கவிதை என்ற பெயரில் எழுதிரிங்களா ?

rajamelaiyur சொன்னது…

கவிதை உண்மையில் அருமை ...

தினேஷ்குமார் சொன்னது…

ருசி மிக அதிகம் உங்கள் கவிதைக்கு

உழவன் சொன்னது…

//திருட்டு மாங்காய்க்கு
ருசி அதிகமென்று
ஊரில் சொல்ல கேட்டிருக்கிறேன்//

அண்ணே பொய்சொல்லாதீங்க நீங்க ருசிச்சதே இல்ல பாரு..

கவிதை நல்லாருக்கு அண்ணா...

மகேந்திரன் சொன்னது…

வணக்கம் தம்பி அரசன்..
நலமா?

முத்தச் சத்தம்
மெத்தக் கவிபாடி
மொத்தமாய் அள்ளுகிறது...

cheena (சீனா) சொன்னது…

அன்பின் அரசன் - எப்பொழ்ய்துமே திருட்டு மாங்காய்க்கு ருசியும் ஆவலும் அதிகம் - அதனை விட இன்பம் இருட்டு முத்த்த்திற்குண்டு - கவிதை அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா.

அருணா செல்வம் சொன்னது…

திருட்டு முத்தம்...

சே..சே...
இருட்டு முத்தத்தின் சத்தம்
இங்கு வரை கேட்கிறது.

பால கணேஷ் சொன்னது…

ரத்தத்தில் தித்திக்கும் முத்தத்தின் இனிப்பை ரொம்பவே ரசிச்சுட்டீங்க போல... இருட்டு முத்தம்ங்கற வார்த்தைலயே காதல் பொங்கி வழியுதே!

அம்பாளடியாள் சொன்னது…

மிகவும் ரசித்தேன் .வாழ்த்துக்கள் சகோதரரே மேலும் சிறப்பாகத்
தொடரட்டும் இன்பக் கவிதை வரிகள் .

Unknown சொன்னது…

சுவை அதிகம்! நான் சொல்வது கவிதையிலே!

Unknown சொன்னது…

இருட்டு முத்தத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள் ,இல்லையெனில் மங்கை, திருட்டு மாங்காயையும் தின்னவேண்டிவரும் !
வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பேற்றுக் கொள்ளும் அரசனுக்கு வாழ்த்துகள் !

அ. முஹம்மது நிஜாமுத்தீன் சொன்னது…

இனிக்கிறது சார்!

Seeni சொன்னது…

arumai...!

இராய செல்லப்பா சொன்னது…

இதுபோலவே காளைப் பருவத்தில் நீங்கள் செய்த பிற முயற்சிகளையும் கவிதையாக்குங்கள்.