புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

டிசம்பர் 06, 2012

ஊர்ப்பேச்சு # 7 ( Oor Pechu)

வணக்கம் கனகசபை பார்த்து ரொம்ப நாளாச்சு ... என்ன வேலை அதிகமோ என்று கேட்டபடி தலையிலிருந்த முண்டாசை அவிழ்த்தார் ரத்தினம்!

என்ன ரத்தினம் மொட்டை எல்லாம் அடிச்சிருக்கே, ஏதேனும் விசேசமா?
ஆமாய்யா, குல சாமி கோயிலுக்கு குடும்பத்தோட போயிருந்தோம், சரி பழைய வேண்டுதல் ஒன்னு அதான்.

நீ சொன்னதும் தான் எனக்கே நினைவுக்கு வருது ரத்தினம், நானும் போயிட்டு வரணும், தூரத்துல இருக்குற கோயிலுக்கெல்லாம் தேடி தேடி போயிட்டு வரோம், பக்கத்துல இருக்கு குல சாமி, அங்க போயிட்டு வர முடியலையே. அடுத்த வாரத்துல ஒரு நா போயிட்டு வந்துற வேண்டியதுதான்.

போயிட்டு வா கனகசப, நல்லது தானே! நேத்து என்ன தழைஎல்லாம் வண்டியில ஏத்திகிட்டு போனமாதிரி தெரிஞ்சுது, எதுக்கு ?

ஆமா ரத்தினம், நாற்று வுட போறேன், அதுக்குத்தான் ஏரிக்கரை ஓரமா இருந்த ஆனா தழை, பூவரசு எல்லாம் வெட்டி வைச்சிருக்கேன், சேத்துல இத போட்டு மிதிச்சி நெல்ல தூவி விட்டு வந்தம்னா பயிரு  சும்மா கரு கருன்னு வரும் பாரு, அதை பாக்கவே நூறு கண்ணு வேணுமையா... முருகேசன் நேத்து உரம் வாங்கிட்டு போனான், அவனும் நாத்து வுடத்தான்  என்று சொன்னான். நீயும் உரமே போடலாமே, எதுக்கு கெடந்து வீணா இப்படி உடம்ப வருத்திக்கணும்!

இல்லை ரத்தினம் உடம்பு வளையாம, மண்ணை கொலை பண்ணுறவன் தான் இப்படி செய்வான்! குறைச்ச நாளுல அதிக மகசூல் பாக்கணுங்கிற பேராசையுல  சோறு போடுற பூமிய இப்படி உரத்தை கொட்டி, அப்புறம் பூச்சி மருந்து அடிச்சி மண்ணை நாசப்படுத்தி வைச்சிட்டானுவோ, சொன்னா திரும்பி நம்மள கேன பய கணக்கா முறைச்சிட்டு போறானுவோ, இவனுங்கள எப்படித்தான் திருத்துறதோ?

நீ சொல்றது சரி தான் கனகசபை, ரெண்டு ஏக்கர் மூணு ஏக்கர் வைச்சிருக்கிறவங்க உன்ன மாதிரி பண்ணலாம், முப்பது, நாப்பது ஏக்கர் வைச்சிருக்கிறவங்க என்னத்த பண்ணுவாங்க, அவங்க செலவ மிச்ச படுத்தனும், மகசூல் அதிகம் வரணும் என்று தானே ஆசை படுவாங்க.

நீ என்னய்யா ஒன்னும் தெரியாத மாதிரி பேசுற, உம் பாட்டனும் , எம் பாட்டனும் அம்பது , அறுவது ஏக்கர் வைச்சிருக்கும் போதெல்லாம் எந்த உரத்தை போட்டு மூட்டை மூட்டையா மகசூல் பார்த்தாங்க. இப்பதானே மண்ணையும் கெடுத்து தன்னையும் கெடுத்து மக்கள் புத்தி கேட்டு திரியுதுங்க! யாரை குத்தம் சொல்லி என்ன பயன், எல்லாம் நடக்கிறது தான் நடக்கும்! சரி ஊற வைச்ச நெல்லை வடி கட்டணும் நான் போயிட்டு வரேன்!

சரிய்யா போயிட்டு வா , அப்புறம் சாவகாசமா பேசுவோம்!

Post Comment

12 கருத்துரைகள்..:

”தளிர் சுரேஷ்” சொன்னது…

தழை உரம் இப்போது காணாமல் போய்விட்டது! எல்லாம் வணிக மயமாகிவிட்டது! அருமையான பதிவு! நன்றி!

semmalai akash சொன்னது…

ஆஹா! என்னையும் அப்படியே கிராமத்துக்கு அழைத்துக் கொண்டு சென்றது உங்களது பதிவு. மிக மிக அருமை.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

எதற்கும் மனம்தான் வேண்டும்.

அருணா செல்வம் சொன்னது…

மண்ணையும் கெடுத்து தன்னையும் கெடுத்து மக்கள் புத்தி கேட்டு திரியுதுங்க! யாரை குத்தம் சொல்லி என்ன பயன், எல்லாம் நடக்கிறது தான் நடக்கும்!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

இப்படி சம்பாஷனை கேட்டு பலகாலமாச்சு போங்க...!

ezhil சொன்னது…

ஆமாம் இப்படியெல்லாம் விவசாயி நினைக்க வேண்டுமெனில் அரசாங்கம் இயற்கை விவசாயத்திற்கு ஆதரவுக்கரம் கொடுத்து கை தூக்கிவிட வேண்டும். ஏற்கெனவே விவசாயம் ஏழைத் தொழிலாகிவிட்டது. இன்னம் இது போன்று விவசாயம் செய்தால் அவர்களைக் காப்பாற்றுவது யார்? .இது நிதர்சனம். நீங்கள் கூறுவது நம் அனைவரின் பேராசை (ஆம் அது பேராசைதான்)

arasan சொன்னது…

s suresh கூறியது...
தழை உரம் இப்போது காணாமல் போய்விட்டது! எல்லாம் வணிக மயமாகிவிட்டது! அருமையான பதிவு! நன்றி!//

நன்றிங்க சார்

arasan சொன்னது…

semmalai akash கூறியது...
ஆஹா! என்னையும் அப்படியே கிராமத்துக்கு அழைத்துக் கொண்டு சென்றது உங்களது பதிவு. மிக மிக அருமை//

நன்றிங்க நண்பரே

arasan சொன்னது…

T.N.MURALIDHARAN கூறியது...
எதற்கும் மனம்தான் வேண்டும்.//

ஆம் சார்

arasan சொன்னது…

அருணா செல்வம் கூறியது...
மண்ணையும் கெடுத்து தன்னையும் கெடுத்து மக்கள் புத்தி கேட்டு திரியுதுங்க! யாரை குத்தம் சொல்லி என்ன பயன், எல்லாம் நடக்கிறது தான் நடக்கும்!//

நன்றிங்க

arasan சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...
இப்படி சம்பாஷனை கேட்டு பலகாலமாச்சு போங்க...!//
நானும் தான் அண்ணே

arasan சொன்னது…

ezhil கூறியது...
ஆமாம் இப்படியெல்லாம் விவசாயி நினைக்க வேண்டுமெனில் அரசாங்கம் இயற்கை விவசாயத்திற்கு ஆதரவுக்கரம் கொடுத்து கை தூக்கிவிட வேண்டும். ஏற்கெனவே விவசாயம் ஏழைத் தொழிலாகிவிட்டது. இன்னம் இது போன்று விவசாயம் செய்தால் அவர்களைக் காப்பாற்றுவது யார்? .இது நிதர்சனம். நீங்கள் கூறுவது நம் அனைவரின் பேராசை (ஆம் அது பேராசைதான்)//

நீங்க சொல்வது சரி தாங்க ///ஆனா இப்ப உள்ள நிலமையில அரசாங்கம் தூக்கிவிடுவதற்கு தயாரா இல்லை .. நாம் தான் முயற்சிக்கணும்