புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஜனவரி 21, 2013

வெதை சோளத்தையாவது...


தெக்கத்தி பொட்டல்காட்ட 
ஏர் கொண்டு நான் கூரிட, 


முந்தி என்னிரு 
புள்ளைகளும் எரு தூவ,
பிந்தி எம்பொஞ்சாதி 
வெதை தூவி 
முடிச்சி பார்த்தா, 

கெழக்க சிரிச்ச சூரியன் 
மேற்க முகம் சுருங்க,
தள்ளாடும் காளைக 
வழி பிடிச்சி வீடு 
சேர்ந்து நாளும் பத்தாச்சு!

போக மனமில்ல 
அவ்வழியா போனவங்க 
சொல்ல கேட்கையில!


வறண்ட வானம் முரண்டு புடிக்குது 
ஏகத்துக்கும் வேணாம், 
இந்த போகத்துக்கு பேஞ்சா போதும்,
வீசியெறிஞ்ச 
வெதை சோளத்தையாவது தேத்திபுடுவேன்! 

வஞ்சமில்லாம என்னைக்கு பேயுமோ ?
என் பஞ்சம் என்னைக்கு தீருமோ?

Post Comment

26 கருத்துரைகள்..:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கவிதை மனசை உருக்குதே மக்கா....கண்ணுல தண்ணி சொட்டுதே...!

அருமை....!

சசிகலா சொன்னது…

தவிக்கும் மனவேதனையை சொல்லும் வரிகள்.

r.v.saravanan சொன்னது…

விவசாயியின் சோகத்தை அள்ளி வந்த வரிகள் வாழ்த்துக்கள் அரசன்

பஞ்சம் தீர வேண்டும் விளை நிலம் விலை நிலமாக கூடாது
மழை கொஞ்சம் ஈர நெஞ்சத்துடன் கருணை காட்ட வேண்டும்

பட்டிகாட்டான் Jey சொன்னது…

இயற்கையின் ஒரு கொடையான காடு வளங்களை அழிக்கும் கூட்டம் ஒரு பக்கம்...

இயற்கையின் மற்றொரு கொடையான மழைக்காக ஏங்கித் தவிக்கும் கூட்டம் மறுபக்கம்...

ரெண்டு பக்கமும் அடிவாங்கும் அடிவாங்கும்விவயிகளின் நிலை, ஒன்றும் சொல்லம்படி இல்லை...

”தளிர் சுரேஷ்” சொன்னது…

உழவனின் வேதனையை நெஞ்சுருக சொல்கிறது கவிதை! அருமை! வாழ்த்துக்கள்!

Seeni சொன்னது…

sokamaiyaa.....

enna solla .....

em makkalin nilaithaanaiyyaa....

வெங்கட் நாகராஜ் சொன்னது…

வேதனை தான் நண்பரே....

கவியாழி சொன்னது…

வஞ்சமில்லாம என்னைக்கு பேயுமோ ?
என் பஞ்சம் என்னைக்கு தீருமோ?//
உன்மையான ஆதங்கம்.

கோமதி அரசு சொன்னது…

வறண்ட வானம் முரண்டு புடிக்குது
ஏகத்துக்கும் வேணாம்,
இந்த போகத்துக்கு பேஞ்சா போதும்,
வீசியெறிஞ்ச
வெதை சோளத்தையாவது தேத்திபுடுவேன்! //

விவசாயிகளின் மனநிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது கவிதை.
மாரி மனம் இரங்க வேண்டும்.
வெதை சோளத்தை தேத்தவேண்டும் வாழ்த்துக்கள்.

மனோ சாமிநாதன் சொன்னது…

நாட்டுப்புற‌ப்பாடல் பாணியில் வரண்ட பூமியைப்பார்த்து தவிக்கும் ஒரு விவசாயியின் ஆழ்மனதின் வேதனையை மிகச் சிற‌ப்பாக கவிதை பாடி இருக்கிறீர்கள்!

Prem S சொன்னது…

விவசாயின் சோகத்தை தந்த வரிகள்

ஹேமா சொன்னது…

வாழ்வின் சூழல்கூட கவலையைத் தருகிறது.எம் வளங்கள்அழிய நாமும்தானே காரணம் !

arasan சொன்னது…

MANO நாஞ்சில் மனோ கூறியது...
கவிதை மனசை உருக்குதே மக்கா....கண்ணுல தண்ணி சொட்டுதே...!

அருமை....!//

நன்றிங்க அண்ணா

arasan சொன்னது…

Sasi Kala கூறியது...
தவிக்கும் மனவேதனையை சொல்லும் வரிகள்.//

நன்றிங்க அக்கா

arasan சொன்னது…

r.v.saravanan கூறியது...
விவசாயியின் சோகத்தை அள்ளி வந்த வரிகள் வாழ்த்துக்கள் அரசன்

பஞ்சம் தீர வேண்டும் விளை நிலம் விலை நிலமாக கூடாது
மழை கொஞ்சம் ஈர நெஞ்சத்துடன் கருணை காட்ட வேண்டும் //

ஆம் சார்

arasan சொன்னது…

பட்டிகாட்டான் Jey கூறியது...
இயற்கையின் ஒரு கொடையான காடு வளங்களை அழிக்கும் கூட்டம் ஒரு பக்கம்...

இயற்கையின் மற்றொரு கொடையான மழைக்காக ஏங்கித் தவிக்கும் கூட்டம் மறுபக்கம்...

ரெண்டு பக்கமும் அடிவாங்கும் அடிவாங்கும்விவயிகளின் நிலை, ஒன்றும் சொல்லம்படி இல்லை.//

பரிதாபம் தான் அண்ணே

arasan சொன்னது…

s suresh கூறியது...
உழவனின் வேதனையை நெஞ்சுருக சொல்கிறது கவிதை! அருமை! வாழ்த்துக்கள்!//

நன்றிங்க அண்ணா

arasan சொன்னது…

Seeni கூறியது...
sokamaiyaa.....

enna solla .....

em makkalin nilaithaanaiyyaa....//

nandri nanbaa

arasan சொன்னது…

வெங்கட் நாகராஜ் கூறியது...
வேதனை தான் நண்பரே.... //

நன்றிங்க சார்

arasan சொன்னது…

கவியாழி கண்ணதாசன் கூறியது...
வஞ்சமில்லாம என்னைக்கு பேயுமோ ?
என் பஞ்சம் என்னைக்கு தீருமோ?//
உன்மையான ஆதங்கம்.//

என்ன பண்ண சார்

arasan சொன்னது…

கோமதி அரசு கூறியது...
வறண்ட வானம் முரண்டு புடிக்குது
ஏகத்துக்கும் வேணாம்,
இந்த போகத்துக்கு பேஞ்சா போதும்,
வீசியெறிஞ்ச
வெதை சோளத்தையாவது தேத்திபுடுவேன்! //

விவசாயிகளின் மனநிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறது கவிதை.
மாரி மனம் இரங்க வேண்டும்.
வெதை சோளத்தை தேத்தவேண்டும் வாழ்த்துக்கள்.//

நன்றிங்க மேடம்

arasan சொன்னது…

மனோ சாமிநாதன் கூறியது...
நாட்டுப்புற‌ப்பாடல் பாணியில் வரண்ட பூமியைப்பார்த்து தவிக்கும் ஒரு விவசாயியின் ஆழ்மனதின் வேதனையை மிகச் சிற‌ப்பாக கவிதை பாடி இருக்கிறீர்கள்!//

நன்றிங்க

arasan சொன்னது…

Prillass s கூறியது...
விவசாயின் சோகத்தை தந்த வரிகள்//

நன்றி

arasan சொன்னது…

ஹேமா கூறியது...
வாழ்வின் சூழல்கூட கவலையைத் தருகிறது.எம் வளங்கள்அழிய நாமும்தானே காரணம் !//

நன்றிங்க அக்கா

ezhil சொன்னது…

உழவனின் கண்ணீர்தான் இனி மழையாக மாறணும்...

மாதேவி சொன்னது…

ஏங்கும் விவசாயிகளின் வாழ்க்கை.மழைக்கான ஏக்கம் கவிதையாக.

இயற்கை சரியான தருணத்தில் உதவாதுபோனால் விவசாயிவாழ்வு கேள்விக் குறிதான்.

இங்கு கிராமத்தில் வெங்காயம் நாட்டிய நேரம் மழை பொழிந்து மீண்டும் நட்டார்கள்.