புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

மே 23, 2011

புறப்படுவோம்!!!


















வேருக்கு எவரும் 
சொல்லித்தரவில்லை,
                    வளர்வதற்கு!

எறும்புக்கு எவரும் 
உணர்த்தியதில்லை,
      அதன் சுறுசுறுப்பை!

காய்க்கு எவரும் 
கற்றுத்தரவில்லை,
                  கனிவதற்கு!

மலர்களாய் இருக்க 
முயலு- அதற்குமுன்
காம்பின் வலிகளை 
அறிந்துகொள்!

கிழிபடும் நாட்காட்டி 
தாளாய்-இராதே,
நாட்களை சுமக்கும் 
அட்டையாய் முயலு!

துவண்டால் சாய, 
தோளினை தேடாதே!
நிமிர்ந்து நிற்க 
கால்களை நம்பு!

நேற்றைய உலகம் எவர் 
பெயரையோ உச்சரித்திருந்தாலும்,

நாளைய உலகம் உனது 
பெயரை உச்சரிக்கட்டும்!


சென்ற வாரம் என்னை வலைச்சரத்தில் அறிமுகபடுத்திய நண்பர் ! ♥ வேடந்தாங்கல் ♥ ! கருண் அவர்களுக்கு நன்றி ....


Post Comment

33 கருத்துரைகள்..:

Unknown சொன்னது…

ம்ம்...ரைட்டு ரைட்டு !!!
அறிமுகத்துக்கு வாழ்த்துக்க;

r.v.saravanan சொன்னது…

குட் அரசன் வாழ்த்துக்கள்

Chitra சொன்னது…

எறும்புக்கு எவரும்
உணர்த்தியதில்லை,
அதன் சுறுசுறுப்பை!

காய்க்கு எவரும்
கற்றுத்தரவில்லை,
கனிவதற்கு!


..... கவிதை முழுவதும் வாழ்வியல் கருத்துக்கள். அருமை. :-)

சக்தி கல்வி மையம் சொன்னது…

அசத்தல் கவிதை..
இது தன்னம்பிக்கை ஊற்று..

செய்தாலி சொன்னது…

வரிகள் நல்லா இருக்கு நண்பா

குறையொன்றுமில்லை. சொன்னது…

கவிதை நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

விஜய் சொன்னது…

நன்று நண்பா

சிசு சொன்னது…

நன்று நண்பா...

ஹேமா சொன்னது…

முயற்சி இருந்தாலே போதும் வாழ்வில் முன்னேற.நம்பிக்கையூட்டும் வரிகள் அரசன் !

போளூர் தயாநிதி சொன்னது…

//நேற்றைய உலகம் எவர்
பெயரையோ உச்சரித்திருந்தாலும்,

நாளைய உலகம் உனது
பெயரை உச்சரிக்கட்டும்!//முன்னேற.நம்பிக்கையூட்டும் வரிகள் அசத்தல் கவிதை..

தமிழ்த்தோட்டம் சொன்னது…

ஊக்கம், தன்னம்பிக்கை நிறைந்த வரிகள்
முயற்சி இருந்தாலே போதும் வாழ்வில் முன்னேற.

நம்பிக்கையூட்டும் வரிகள் அனைத்துமே வெகு நாட்களுக்கு பிறகு அழகிய நம்பிக்கை கவிக்கு பாராட்டுக்கள் அரசன்

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

முயற்சி இருக்குமிடத்தில் முன்னேற்றம் இருக்கும்..
அருமை யான கவிதை அரசன்.

அன்புடன் மலிக்கா சொன்னது…

முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார் என்ற பொன்மொழிக்கேற்ற வரிகள் . அருமை வாழ்த்துகள் அரசன்..

http://niroodai.blogspot.com/2011/05/blog-post_31.html

thendralsaravanan சொன்னது…

காதல் கவிதை பொங்கும் இடத்தில் தன்னம்பிக்கையும் சேர்ந்திருக்கிறது.அப்படித்தானே தம்பி!

thendralsaravanan சொன்னது…

கவிதை வரிகள் தன்னம்பிக்கையின் ஊற்றாக உள்ளது.
வாழ்த்துகள் தம்பி!

மாலதி சொன்னது…

துவண்டால் சாய,
தோளினை தேடாதே!
நிமிர்ந்து நிற்க
கால்களை நம்பு!

arasan சொன்னது…

மைந்தன் சிவா சொன்னது…
ம்ம்...ரைட்டு ரைட்டு !!!
அறிமுகத்துக்கு வாழ்த்துக்க;//

நன்றிங்க மண்ணின் மைந்தரே...

arasan சொன்னது…

r.v.saravanan சொன்னது…
குட் அரசன் வாழ்த்துக்கள்//

நன்றிங்க சார் ...

arasan சொன்னது…

Chitra சொன்னது…
எறும்புக்கு எவரும்
உணர்த்தியதில்லை,
அதன் சுறுசுறுப்பை!

காய்க்கு எவரும்
கற்றுத்தரவில்லை,
கனிவதற்கு!


..... கவிதை முழுவதும் வாழ்வியல் கருத்துக்கள். அருமை. :-)//

மிக்க நன்றிங்க சித்ரா மேடம் ...

arasan சொன்னது…

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…
அசத்தல் கவிதை..
இது தன்னம்பிக்கை ஊற்று..//

மிக்க நன்றிங்க நண்பரே ...

arasan சொன்னது…

செய்தாலி சொன்னது…
வரிகள் நல்லா இருக்கு நண்பா//

நன்றி நண்பரே ...

arasan சொன்னது…

Lakshmi சொன்னது…
கவிதை நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.//

மிக்க நன்றிங்க அம்மா ...

arasan சொன்னது…

விஜய் சொன்னது…
நன்று நண்பா//

நன்றிங்க சார் ..

arasan சொன்னது…

சிசு சொன்னது…
நன்று நண்பா...//

சிசு ரொம்ப நன்றி

arasan சொன்னது…

ஹேமா சொன்னது…
முயற்சி இருந்தாலே போதும் வாழ்வில் முன்னேற.நம்பிக்கையூட்டும் வரிகள் அரசன் !
//

மிக்க நன்றிங்க ஹேமா மேடம் ..

arasan சொன்னது…

போளூர் தயாநிதி சொன்னது…
//நேற்றைய உலகம் எவர்
பெயரையோ உச்சரித்திருந்தாலும்,

நாளைய உலகம் உனது
பெயரை உச்சரிக்கட்டும்!//முன்னேற.நம்பிக்கையூட்டும் வரிகள் அசத்தல் கவிதை..//

மிக்க நன்றிங்க நண்பரே ..

arasan சொன்னது…

தமிழ்த்தோட்டம் சொன்னது…
ஊக்கம், தன்னம்பிக்கை நிறைந்த வரிகள்
முயற்சி இருந்தாலே போதும் வாழ்வில் முன்னேற.

நம்பிக்கையூட்டும் வரிகள் அனைத்துமே வெகு நாட்களுக்கு பிறகு அழகிய நம்பிக்கை கவிக்கு பாராட்டுக்கள் அரசன்//

தோட்டத்திற்கு வணக்கமும் நன்றிகளும் ../.

arasan சொன்னது…

தோழி பிரஷா( Tholi Pirasha) சொன்னது…
முயற்சி இருக்குமிடத்தில் முன்னேற்றம் இருக்கும்..
அருமை யான கவிதை அரசன்.//

உண்மைதான் தோழி
மிக்க நன்றிங்க தோழி ...

arasan சொன்னது…

அன்புடன் மலிக்கா சொன்னது…
முயற்சியுடையோர் இகழ்ச்சியடையார் என்ற பொன்மொழிக்கேற்ற வரிகள் . அருமை வாழ்த்துகள் அரசன்..//

அன்புக்கு நன்றிங்க மேடம் ..

arasan சொன்னது…

hendralsaravanan சொன்னது…
காதல் கவிதை பொங்கும் இடத்தில் தன்னம்பிக்கையும் சேர்ந்திருக்கிறது.அப்படித்தானே தம்பி!//

வாங்க அக்கா...
உண்மையை சொல்லிய உங்களுக்கு முதலில் நன்றிகளும் வணக்கங்களும் ...

arasan சொன்னது…

thendralsaravanan சொன்னது…
கவிதை வரிகள் தன்னம்பிக்கையின் ஊற்றாக உள்ளது.
வாழ்த்துகள் தம்பி!//

நிறைவான வாழ்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் அக்கா ...

arasan சொன்னது…

மாலதி சொன்னது…
துவண்டால் சாய,
தோளினை தேடாதே!
நிமிர்ந்து நிற்க
கால்களை நம்பு!//

நன்றி நன்றிங்க மேடம் ..

சசிகலா சொன்னது…

எறும்புக்கு எவரும்
உணர்த்தியதில்லை,
அதன் சுறுசுறுப்பை!

மிகவும் அருமை