பத்துக்கும் மேல
கெடைச்சா போதும்ங்க!
ரேகைய பதிஞ்சு
பழைய எந்திரத்தை
பொழப்புக்கு வாங்கியாந்தேன்!
வறுமைக்கு வாங்கிய
கடனை அடைச்சி
ஏகாந்தம் தேடலாமுன்னு
எளிய நெனப்புடன்!
மனசுல நெனச்சது
மண்ணா போச்சு!
இடி விழுந்த
பன மரமா இளிச்சி
நிக்குது எதிர்காலம்!
பட்டு நெய்து
பாரெல்லாம் கொடுத்தேன்,
எம்புள்ளைக்கு ஒத்தை
பருத்தி மிஞ்சல!
உசுரு இல்லாத
ஓணானா கெடக்குது
ஓஞ்சு போன எந்திரம்
மின்சாரம் இல்லாம!
குலத்தொழிலால குடும்பம்
குலைஞ்சு போச்சு!
என்னுசுர தவணையுல
புடுங்குது வட்டியும் , அசலும்!
வசதிய நெனக்கல,
வறுமை ஒழிஞ்சா
போதும்ங்க!
எம்புள்ளைக்கு ஒசந்த
பள்ளிய எண்ணல,
அறிவ தொறக்க
அரசு பள்ளியே போதும்ங்க!
வகை வகையா சாப்பிட
நெனக்கலை, வயிறு
குளிர மூணு வேள
கஞ்சி முழுசா
நித்தம் வண்ண சாயம்
புழியுறேன், இருண்ட
வாழ்வுல ஒளிக்கீற்று
வாராதா என்று???
படங்கள் உதவி : கூகுள் இணையம்
Tweet |
35 கருத்துரைகள்..:
//
மனசுல நெனச்சது
மண்ணா போச்சு!
இடி விழுந்த
பன மரமா இளிச்சி
நிக்குது எதிர்காலம்!
//
அருமையான வரிகள்
குலத்தொழிலால குடும்பம்
குலைஞ்சு போச்சு!
என்னுசுர தவணையுல
புடுங்குது வட்டியும் , அசலும்!//
மனசை கலங்க வச்சவரிகள் அரசன், பாவம்ய்யா இந்த ஏழைஜனம்...
உண்மை சுடுகிறது!
வகை வகையா சாப்பிட
நெனக்கலை, வயிறு
குளிர மூணு வேள
கஞ்சி முழுசா
கெடைச்சா போதும்ங்க!
என்ன உருக்கமான வரிகள் உண்மை சுடுது.
வரிகள் அருமை.
மனசை பிழிகிறது உங்கள் கவிதை. இவர்களின் நிலமையை நான் நேரில் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். அத்தனையும் உண்மையே.
வருங்கால சந்ததியினர் அவர்களின் குலத்தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு மாறினால் தான் வயிற்றுப்பிழைப்பு நடத்த முடியும் என்ற நிலை வந்து விட்டது.
பட்டு நெய்து பாரெல்லாம் கொடுத்தேன்,எம்புள்ளைக்கு ஒத்தை பருத்தி மிஞ்சல!
அருமை வரிகள் அரசன்
குலத்தொழிலால குடும்பம்
குலைஞ்சு போச்சு!
என்னுசுர தவணையுல
புடுங்குது வட்டியும் , அசலும்!
கஷ்டத்தின் வலியை வரிகளில் அருமையாய் வடித்துள்ளீர்கள் அரசன்
இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்
http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_18.html
மின்சார வெட்டால் பாதிப்பும், ஏழை வயிற்குக் கஞ்சியும், எல்லாமே ஒவ்வோரு வகையில் பாதிப்பு என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது , வேதனை தான். சாமி தான் கண் திறக்கணும். பணி தொடரட்டும். வாழ்த்துகள்...சகோதரா.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com
மிகசிறந்த ஆக்கம் இன்றைய நிலையில் வேளாண் பெருமக்களும் மானங் காக்கும் நமது நெசவு தொழிலாளர்களும் படும் இன்னல் எண்ணிலடங்காது வேதனை மட்டுமல்ல தங்களின் தொழிலும் போய் இனி என்ன செய்வேன் என ஏங்குகிற வேதனையைநாளும் எண்ணி வேதனையடைந்து வருகிறார்கள் பராட்டுக்கள் நன்றி ....
வாழ்வின் அடிப்படை தேவைகளாவது தா என்று கேட்கும் கவிதை வரிகள் நெஞ்சில் சோகம்
""பட்டு நெய்து
பாரெல்லாம் கொடுத்தேன்,
எம்புள்ளைக்கு ஒத்தை
பருத்தி மிஞ்சல!""
""வசதிய நெனக்கல,
வறுமை ஒழிஞ்சா
போதும்ங்க!""
- சொல்ல வார்த்தையில்லை..
நன்றி....
திரு மகேந்திரனுக்கு நன்றி உங்களை அறிமுகப்படுத்தியதற்கு.
நல்ல கவிதை.
மனசு கனக்கிறது.
வாழ்த்துக்கள்.
அசத்தலான கவிதைகள்
"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
//
மனசுல நெனச்சது
மண்ணா போச்சு!
இடி விழுந்த
பன மரமா இளிச்சி
நிக்குது எதிர்காலம்!
//
அருமையான வரிகள்//
மிக்க நன்றிங்க அன்பரே
"என் ராஜபாட்டை"- ராஜா கூறியது...
நல்ல கவிதை//
நெஞ்சார்ந்த நன்றிகள்
MANO நாஞ்சில் மனோ கூறியது...
குலத்தொழிலால குடும்பம்
குலைஞ்சு போச்சு!
என்னுசுர தவணையுல
புடுங்குது வட்டியும் , அசலும்!//
மனசை கலங்க வச்சவரிகள் அரசன், பாவம்ய்யா இந்த ஏழைஜனம்...//
உண்மைதான் சார் ..
அவர்களின் நிலையை எண்ணி எண்ணி மனம் கனத்து போகிறது
thendralsaravanan கூறியது...
உண்மை சுடுகிறது!//
மிக்க நன்றிங்க அக்கா
Lakshmi கூறியது...
வகை வகையா சாப்பிட
நெனக்கலை, வயிறு
குளிர மூணு வேள
கஞ்சி முழுசா
கெடைச்சா போதும்ங்க!
என்ன உருக்கமான வரிகள் உண்மை சுடுது.//
மிக்க நன்றிங்க அம்மா
ஆயிஷா கூறியது...
வரிகள் அருமை...//
மிக்க நன்றிங்க மேடம்
காந்தி பனங்கூர் கூறியது...
மனசை பிழிகிறது உங்கள் கவிதை. இவர்களின் நிலமையை நான் நேரில் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். அத்தனையும் உண்மையே.
வருங்கால சந்ததியினர் அவர்களின் குலத்தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு மாறினால் தான் வயிற்றுப்பிழைப்பு நடத்த முடியும் என்ற நிலை வந்து விட்டது.//
வணக்கம் அண்ணே ..
நான் கேள்வி பட்டதுக்கே ஒருமாதிரி நெஞ்சம் கனத்தது ..
நேரில் கண்டால் சொல்லவே வேண்டாம் அண்ணே ..
என்று மாறும் இந்நிலை ?????
r.v.saravanan கூறியது...
பட்டு நெய்து பாரெல்லாம் கொடுத்தேன்,எம்புள்ளைக்கு ஒத்தை பருத்தி மிஞ்சல!
அருமை வரிகள் அரசன்//
மிக்க நன்றிங்க சார்
r.v.saravanan கூறியது...
குலத்தொழிலால குடும்பம்
குலைஞ்சு போச்சு!
என்னுசுர தவணையுல
புடுங்குது வட்டியும் , அசலும்!
கஷ்டத்தின் வலியை வரிகளில் அருமையாய் வடித்துள்ளீர்கள் அரசன்//
நெஞ்சார்ந்த நன்றிகள் சார்
மாய உலகம் கூறியது...
இன்றைய வலைச்சரத்தில் தங்களை
அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்
http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_18.html//
மிக்க நன்றிங்க நண்பரே ..
kavithai கூறியது...
மின்சார வெட்டால் பாதிப்பும், ஏழை வயிற்குக் கஞ்சியும், எல்லாமே ஒவ்வோரு வகையில் பாதிப்பு என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது , வேதனை தான். சாமி தான் கண் திறக்கணும். பணி தொடரட்டும். வாழ்த்துகள்...சகோதரா.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com//
நெஞ்சார்ந்த நன்றிகள் மேடம் ..
நிலை மாறும் என்ற நம்பிக்கை தான்
போளூர் தயாநிதி கூறியது...
மிகசிறந்த ஆக்கம் இன்றைய நிலையில் வேளாண் பெருமக்களும் மானங் காக்கும் நமது நெசவு தொழிலாளர்களும் படும் இன்னல் எண்ணிலடங்காது வேதனை மட்டுமல்ல தங்களின் தொழிலும் போய் இனி என்ன செய்வேன் என ஏங்குகிற வேதனையைநாளும் எண்ணி வேதனையடைந்து வருகிறார்கள் பராட்டுக்கள் நன்றி ....//
நெஞ்சார்ந்த நன்றிகள் இனியவரே
M.R கூறியது...
வாழ்வின் அடிப்படை தேவைகளாவது தா என்று கேட்கும் கவிதை வரிகள் நெஞ்சில் சோகம்//
மிக்க நன்றிங்க நண்பரே
சின்னதூரல் கூறியது...
""பட்டு நெய்து
பாரெல்லாம் கொடுத்தேன்,
எம்புள்ளைக்கு ஒத்தை
பருத்தி மிஞ்சல!""
""வசதிய நெனக்கல,
வறுமை ஒழிஞ்சா
போதும்ங்க!""
- சொல்ல வார்த்தையில்லை..
நன்றி....//
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க
Rathnavel கூறியது...
திரு மகேந்திரனுக்கு நன்றி உங்களை அறிமுகப்படுத்தியதற்கு.
நல்ல கவிதை.
மனசு கனக்கிறது.
வாழ்த்துக்கள்.//
நெஞ்சார்ந்த நன்றிகள் அய்யா
வைரை சதிஷ் கூறியது...
அசத்தலான கவிதைகள்//
மிக்க நன்றிங்க நண்பரே
வைரை சதிஷ் கூறியது...
இன்று என் வலையில்
ப்ளாக்கருக்கு ஆயிரம் Comment பெட்டிகள்//
வருகிறேன்
Agape Tamil Writer கூறியது...
அன்பு சகோதரா, இந்த வலைபதிவு முயற்சி மிகவும் அருமை, தமிழர்கள் தமிழில் பிண்ணூட்டமிட, தமிழ் எழுதியை நிறுவி வாசகர்களுக்கு உதவலாமே, அதிக விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்நன்றி//
உங்களின் எளிய விளக்கத்திற்கு நன்றி ..
விரைவில் புகுத்தி கொள்கிறேன் ..
தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_18.html
நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
நன்றி
யாழ் மஞ்சு
கருத்துரையிடுக