அலங்கோலமாய்
வாரியிருந்தாள்
எண்ணெய் இல்லா கேசத்தை!
மானத்தை மறைக்கவேண்டிய துணி
அவளின்
வறுமையை காட்டுகிறது!
கிழிந்த புடவையொன்றை
முடிந்து,
வன்னிமரத்தில்
தூக்கு கட்டி
கிடத்தியிருந்தாள்
மூன்று மாத குழந்தையை!
நான்காம் வார எள்ளுக்கு
களை கொத்துகிறாள்
நாற்பது ரூபாய் சம்பளத்துக்கு!
மின்மினி போல்
விட்டு விட்டு வீறிடும்,
குழந்தையை தூக்கி
பாலூட்டுகிறாள்!
இரண்டு முறை உறிஞ்சிவிட்டு,
காம்பிலிருந்து வாயெடுத்து
மீண்டும் அழுகிறது குழந்தை!
பாலில்லா பரிதவிப்பில்
நெஞ்சை பிடித்துக்கொண்டு
அப்படியே சரிந்து விழுகிறாள்
போன வருடம்
புருசன்,
தூக்கு மாட்டிக்கொண்ட
அதே மரத்தடியில்!
Tweet |
27 கருத்துரைகள்..:
சோகம் ததும்பும் கவிதை.
ராசா என்னய்யா ஆச்சு, ஏன் இவ்வளவு சோகம்?
வறுமையின் உச்சம்...
கனக்கும் கவிதை
வறுமையின் உச்ச கட்டம் அண்ணா... அழகாக கூறியுள்ளீர்கள்...!
உங்க வரிகள் நெஞ்சுக்குள் சோகத்தை செலுத்துகின்றன
எனக்கும் நெஞ்சு வலிக்குதே.
யோவ் ராசா ஏன்யா இப்படி... ஒருவேள திருமதி தமிழ் நூறாவது ஷோ பாத்தியா என்ன
முகத்தில் அறையும் வரிகள் தரும் வேதனை சொல்ல வார்த்தைகள் இல்லை அரசன்
சோகம்
நல்ல கவிதை அரசன்
உங்களை ஒரு தொடர் எழுத அழைக்கிறேன் நேரம் இருப்பின
http://nizammudeen-abdulkader.blogspot.ae/2013/08/blog-post.html
மனதை கரைக்கும் கவிதை
வறுமை எங்கள் உணர்வுகளையும் சேர்த்தே தின்றுவிட்டது.
மனம் நெருடிய கவிதை சகோதரரே!
த ம.4
சுயநலமோ, கோழைத்தனமோ அவன் போய்விட்டான் இவளை அழவைத்துவிட்டு. அழுதுகொண்டு மூலையில் அமர்ந்திராமல், இவள் கிளம்பிவிட்டாள், குழந்தையோடு களைகொத்த, வயலில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் சேர்த்தே! அவன் தூக்கிட்ட மரத்திலேயே தூளி கட்டி வளர்க்கிறாள் குழந்தையை, ஆவியாய் அலைவானாயின், பார்த்துருகட்டும், அவனுக்குப்பின்னான அவள் வாழ்க்கையையும் அதை அவள் திடத்துடன் எதிர்கொள்ளும் துணிவையும்.
மனத்தில் ஆழமாய்ப் பதிந்த கருவும் கவியும். பாராட்டுகள் அரசன்.
வெங்கட் நாகராஜ் கூறியது...
சோகம் ததும்பும் கவிதை.//
நன்றிங்க சார்
ஸ்கூல் பையன் கூறியது...
ராசா என்னய்யா ஆச்சு, ஏன் இவ்வளவு சோகம்?//
சும்மாதான் அண்ணே...
கவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...
வறுமையின் உச்சம்...
கனக்கும் கவிதை//
நன்றிங்க அண்ணே
இரவின் புன்னகை கூறியது...
வறுமையின் உச்ச கட்டம் அண்ணா... அழகாக கூறியுள்ளீர்கள்...!//
நன்றி வெற்றி
ரூபக் ராம் கூறியது...
உங்க வரிகள் நெஞ்சுக்குள் சோகத்தை செலுத்துகின்றன//
நன்றி ரூபக்
MANO நாஞ்சில் மனோ கூறியது...
எனக்கும் நெஞ்சு வலிக்குதே.//
உணர்ச்சிக்கு நன்றி அண்ணே
சீனு கூறியது...
யோவ் ராசா ஏன்யா இப்படி... ஒருவேள திருமதி தமிழ் நூறாவது ஷோ பாத்தியா என்ன//
நான் 200 வது நாள் ஷோ பாக்கலாம்னு இருக்கேன் வரியா சீனு
பிளாகர் r.v.saravanan கூறியது...
முகத்தில் அறையும் வரிகள் தரும் வேதனை சொல்ல வார்த்தைகள் இல்லை அரசன்//
நன்றி சார்
செய்தாலி கூறியது...
சோகம்
நல்ல கவிதை அரசன்
உங்களை ஒரு தொடர் எழுத அழைக்கிறேன் நேரம் இருப்பின
http://nizammudeen-abdulkader.blogspot.ae/2013/08/blog-post.html//
அழைப்புக்கு நன்றிங்க நண்பா .. நேரம் கிடைக்கையில் தொடர்கிறேன்
சக்கர கட்டி கூறியது...
மனதை கரைக்கும் கவிதை//
நன்றிங்க சக்கர கட்டி
இளமதி கூறியது...
வறுமை எங்கள் உணர்வுகளையும் சேர்த்தே தின்றுவிட்டது.
மனம் நெருடிய கவிதை சகோதரரே!//
நன்றிங்க சகோ
பிளாகர் கீத மஞ்சரி கூறியது...
சுயநலமோ, கோழைத்தனமோ அவன் போய்விட்டான் இவளை அழவைத்துவிட்டு. அழுதுகொண்டு மூலையில் அமர்ந்திராமல், இவள் கிளம்பிவிட்டாள், குழந்தையோடு களைகொத்த, வயலில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் சேர்த்தே! அவன் தூக்கிட்ட மரத்திலேயே தூளி கட்டி வளர்க்கிறாள் குழந்தையை, ஆவியாய் அலைவானாயின், பார்த்துருகட்டும், அவனுக்குப்பின்னான அவள் வாழ்க்கையையும் அதை அவள் திடத்துடன் எதிர்கொள்ளும் துணிவையும்.
மனத்தில் ஆழமாய்ப் பதிந்த கருவும் கவியும். பாராட்டுகள் அரசன்.//
மிகச்சரியான புரிதலோடு கருத்திட்டமைக்கு என் வணக்கங்களும் நன்றிகளும் அக்கா
இதை கிறுக்கியது என்று சொல்லாதீர்கள் ,செதுக்கியது என்றே சொல்லணும் !
vethumpa vaithathu...
"கொடிதினும் கொடிது வறுமை கொடிது"
மிகுந்த வேதனை.
கருத்துரையிடுக