உதிரிகள் போல்
சிதறி கிடக்கும் அவனின்
நினைவுகளை
கோர்த்துக்கொண்டிருக்கிறேன்
நெடிய நரம்பொன்றில்,
"முதலிரவு" கழிந்த
நான்காம் நாளிரவில்
விமானம் ஏறியவன்,
இரண்டு வருடம் தொலைத்து,
இன்றிரவு வருகிறானாம்!
கனவுகளை நனவாக்கி,
ஏக்கங்களை சுமையேற்றி,
வண்டி ஏறப் போவதாய்
அலைபேசி வழி அழுது
துண்டித்தான்!
செல்லும் அவசரத்தில்
கடித்து காயப்படுத்திய,
உதட்டு தழும்போடு
காத்திருக்கிறேன்
அவன் தரும்,
எச்சில் முத்தங்களை சு(ம)வைக்க!
ஏக்கங்களை சுமையேற்றி,
வண்டி ஏறப் போவதாய்
அலைபேசி வழி அழுது
துண்டித்தான்!
செல்லும் அவசரத்தில்
கடித்து காயப்படுத்திய,
உதட்டு தழும்போடு
காத்திருக்கிறேன்
அவன் தரும்,
எச்சில் முத்தங்களை சு(ம)வைக்க!
Tweet |
11 கருத்துரைகள்..:
பின்றேள்....
கலக்கல்...
ரெண்டு வருஷமா இன்னும் ஆறலையா.. ச்சே.. செம்ம.. அறுவைக் கவிஞனல்ல நான் அரசவைக் கவிஞன் என்று அரசன் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்.. நாலு லைன்ல டுபாக்கூர் கவிதைகள் எழுதறவங்கேல்லாம் உஷாரா இருங்க..
சூப்பர்...!
காக்க வைப்பதில் சுகமில்லை ,துக்கம்தான் ,அதுதான் சுகத்திற்கு பதிலாய் சுமையாய் மாறி விடுகிறது !
த.ம +1
எத்தனை நாள் லிவ்ன்னு முதல்லியே சொல்லிடறது பெட்டர்.
ppppaaaa arumainga...
பிரிவின் ஏக்கத்தை பிரமாதமாய் சொல்லியது கவிதை! வாழ்த்துக்கள்!
வணக்கம்
கவிதையின் வரிகள் அருமை மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இரண்டு வருடம் விட்டுட்டு ஏங்க போறான்?? அவனுக்காக ஏங்கவேற செய்யறாங்களே...
கவிதை நல்லா இருக்கு அரசன்!
நல்ல கவிதை....
கருத்துரையிடுக