இடுப்புக்கு சற்றும் கீழே தொடும்
கருங்கூந்தல் அவளுக்கு!
அவசரமோ, அழகியலோ?
பின்ணாமல்,
முடிந்தே இருப்பாள்!
நெருங்கி நிற்கும்,
பேருந்து பயணங்களில்,
வரும் கனவுகளை
நீர் தெளித்து கலைத்திருக்கின்றன
இரக்கமற்ற ஈரக்கூந்தல்!
அவளும் பேசியதில்லை,
என்னையும்
பேச அனுமதிப்பதில்லை
அவளின் புதை குழி கண்கள்!
அவள் வெட்கம் தொலைக்க,
நான் அச்சம் துறக்க,
காத்திருக்கிறது
"காதல்"
Tweet |
11 கருத்துரைகள்..:
Nice kavithai na...
வாழ்த்துக்கள்...
வணக்கம்
கவிதை அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவித ..... கவித....
ரசிக்க வைத்தது கவிதை! வாழ்த்துக்கள்!
கவிதையை விட எனக்கு டைட்டில் ரொம்ப பிடிச்சது..
யாராவது ஒரு பொண்ணைப் பார்த்து இவனுக்கு கட்டி வைங்கப்பா! கவிதை எழுதியே கொல்றான்.
//புதை குழி கண்கள்//
ஏதும் வியாதி இருக்குமோ?
நல்ல கவிதை அரசன். .....
Super...
கடைசி வரி முரண்
கடைசி மூன்றெழுத்து முரண்
கருத்துரையிடுக