புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Ads 468x60px

ஏப்ரல் 02, 2015

பால்முலையறுப்பு...


மூன்று பேர் சேர்ந்து
அறுத்து சாய்க்கையில்
எழுப்பிய சத்தம்
இன்னுமென் செவியை
துளைத்துக் கொண்டிருக்கிறது!

நிறைமாத கர்ப்பிணி
வயிறு பிளந்து கிடப்பது போல்
கிளை களைந்து கிடக்கிறது
எங்கள் வீட்டின் மாமரம்!

ஆறு தலைமுறைகளின்
பிள்ளையை,
மரமென அறுத்தெறிந்த
ஏழாம் தலைமுறை
நாங்கள்!

வயிறு நிறைத்த
பால்முலையை
துண்டாடி
வண்டியிலேற்றிவிட்டோம்!

மனசைப் போட்டு குழப்பிக்காதே,
ஒன்றை இழந்தால் தான்
இன்னொன்றை பெறமுடியுமென்ற
சித்தப்பாவின் சட்டையைப்  பிடித்து,

குஞ்சுகளோடு, தன் கூடு தொலைத்து
மரமிருந்த இடத்தையே வட்டமிடும்,
அந்த தாய்ப் பறவைக்கு
என்ன சொல்ல போகிறாய் என்று
கேட்கவேண்டும் போலிருந்தது!

கேட்டால் அதற்கும்
ஒரு காரணி
சொல்லாமலா போய்விடுவார் ?
நாங்கள்தான் மிருகமாயிற்றே!!!

Post Comment

2 கருத்துரைகள்..:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மனம் தொட்டது.....

வசதிகள் என்ற பெயரில் பல மரங்களையும் அதில் வாழும் பறவைகளில் கூடுகளையும் அழித்துக் கொண்டிருக்கிறோம்.......

பாராட்டுகள் அரசன்.

Kasthuri Rengan சொன்னது…

அசைத்துவிட்டது கவிதை..
தம+
வாட்சப் போய்டுத்து